Latest Updates
-
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தவெக மாநாடு வெற்றிக்கு பின் விஜய் - த்ரிஷா பற்றி பரவும் வதந்தி: ரசிகர்கள் ஏன் இப்படி முடிச்சுப் போடுறாங்க? -
உங்க இதயம் ஆபத்திலிருப்பதை வீட்டிலேயே கண்டறியும் 5 நொடி சோதனை - செஞ்சு பார்த்து உயிரை காப்பதிக்கோங்க
விஜய் தேவரகொண்டா பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!
விஜய் தேவரகொண்டா பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!
'பெல்லி சூப்பலூ' படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் தனக்கான தனி இடத்தைப் பிடித்திருந்தாலும், இந்தியா முழுக்க, முக்கியமாக தென்னிந்தியாவின் பெரும்பாலுமான இளைஞர்களை தன் ரசிகர் வட்டாரத்திற்குள் கொண்டுவர விஜய் தேவரகொண்டாவிற்கு உதவிய திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி'.
அர்ஜுன் ரெட்டியில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத ஒரு மருத்துவ மாணவர் / மருத்துவராகவும், காதல் தோல்வியால் மிகுந்த போதை பழக்கத்திற்கு ஆளான ஆக்ரோஷமான நபராகவும் நடித்திருந்தார் விஜய் தேவரகொண்டா. ஒரு நெகட்டிவ்வான கேரக்டர் மூலம் அதிகளவில் பாஸிடிவ் ரெஸ்பான்ஸ் பெற்றார் விஜய்.

சமீபத்தில் தென்னிந்தியாவில் சூப்பர் ஹிட் பாடலாக ஒலித்துக் கொண்டிருப்பது "இன்கேம், இன்கேம்.. இன்கேம் காவேலி...". இப்பாடல் படம் வெளியான பிறகும் கூட பல வாரங்களாக சூப்பர் ஹிட் / ட்ரெண்ட் லிஸ்டில் நீடிக்கிறது. தற்சமயம் தென்னிந்தியா சினிமாவில் 'மாடர்ன் மேடி' என்று விஜய் தேவாரகொன்டாவை குறிப்பிடலாம்.
இனி! இவரை பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்யமான உண்மைகள் மற்றும் வாழ்க்கை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

பிறப்பு!
விஜய் சாய் தேவரகொண்டா என்பது இவரது முழுப்பெயர். இவர் மே மாதம் 9ம் தேடி, 1989ல் பிறந்தவர். இவரது பெற்றோர் கோவர்த்தன் தேவரகொண்டா மற்றும் மாதவி தேவரகொண்டா ஆவர். இவரது பூர்வீகம் அச்சம்பேட்டா (Achampeta), நாகர் குர்நூல் மாவட்டம் ஆகும்.
விஜய் தேவரகொண்டாவிற்கு ஒரு இளைய சகோதரர் இருக்கிறார். அவரது பெயர் ஆனந்த் தேவரகொண்டா. இளம் வயதிலேயே i இவரது குடும்பம் ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்தனர்.

ஆர்வம்...
தனது குழந்தை பருவத்தில் இருந்தே விஜய்க்கு நடிப்பில் ஆர்வம் மிகுதியாக இருந்தது. இவர் ஐதராபாத்தில் இருந்த நாடக, தியேட்டர் குழுக்களில் இணைந்து நடிக்க துவங்கினார். இவர் ஐதராபாத்தில் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறார். அப்போதே இவருக்கு நடிப்பில் நல்ல பெயர் இருந்தது. பிறகு, மெல்ல, மெல்ல ஆடிஷன்களில் பங்கேற்று சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் பெற்றார்.
ஆரம்பத்தில் இவர் துணை நடிகராக தான் நடிக்க துவங்கினார்.

அப்பாவின் கனவு..
உண்மையில் இன்று விஜய் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட வெற்றிகரமான நடிகராக இருப்பது, இந்த உலகத்திலேயே அவரது அப்பாவிற்கு தான் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும். ஏன் என்றால், நடிகர் ஆகவேண்டும் என்பது விஜயின் கனவு மட்டுமல்ல, அவரது அப்பாவின் கனவும் கூட.
அச்சம்பேட்டையில் இருந்து ஐதராபாத்திற்கு ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் குடும்பத்துடன் வந்தார் விஜயின் அப்பா கோவர்த்தன் தேவரகொண்டா. ஆனால், அவரது நடிகராக வேண்டும் என்ற கனவு, தொலைக்காட்சி இயக்குனராக முடித்து.

உத்வேகம்!
தன் அப்பாவையே உத்வேக சக்தியாக கொண்ட விஜய், அவரது கனவை போல, தான் ஒரு நடிகராக வேண்டும் என்று தீர்மானம் செய்தார். விஜயின் அம்மா மாதவி சாப்ட் ஸ்கில் மற்றும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரது தம்பி ஆனந்த் அமெரிக்காவில் ஐ.டியில் வேலை செய்து வருகிறார்.
விஜய் தேவரகொண்டா வெள்ளித்திரைக்கு வரும் முன் நாடகங்கள் என்று மட்டுமில்லாது, குறும்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி, இவர் 'மேடம் மீறேனா' என்ற குறும்படத்தை இயக்கியும் இருக்கிறார்.

படிப்பு!
விஜய் தேவரகொண்டா தனது ஆறு வயதில் ஸ்ரீ சத்யா சாய் மேல்நிலை பள்ளி எனும் போர்டிங் ஸ்கூலில் சேர்ந்தார். பத்தாம் வகுப்பு வரை அவர் அங்கே தான் படித்தார். பிறகு, மீண்டும் ஐதராபாத் வந்த விஜய் லிட்டில் ஃப்ளவர்ஸ் ஜூனியர் காலேஜில் சேர்ந்தார். பிறகு பத்ருகா கல்லூரியில் பி.காம் (Hons) படித்தார்.

பக்கத்து வீட்டு பையன்..
இன்று தெலுங்கு சினிமாவில் விஜய் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருக்க ஒரே காரணம் இவரது பழக்கம் மற்றும் பழகும் விதமும் தான். பக்கத்து வீட்டு பையன் நம்மிடம் எப்படி பேசுவானோ அப்படி தான் பேசுகிறார் விஜய் தேவரகொண்டா.
அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வெளியாவதற்கு முன், ப்ரீ-ரிலீஸ் ப்ரோமோஷன்களில் இவர் பேசிய விதம் இண்டஸ்ட்ரியில் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அனைவரையும் கவரும் வகையில் பேசுவதில் வல்லவர் விஜய் தேவரகொண்டா.

நானி!
நடிகர் நானியை தனது சகோதரர் போல காண்கிறார் விஜய். ஏதாவது அட்வைஸ் வேண்டும் என்றால், விஜய் நாடும் முதல் ஆள் நடிகர் நானி தான். திரையில் மட்டும் தான் எப்போது பார்த்தாலும் பெண்களுடனே இருக்கிறார். ஆனால், சினிமாவை விட்டு, பர்சனல் வாழ்க்கையில் இவருக்கு ஆண் தோழர்களே அதிகம்.

பிடித்தவை!
நண்பர்களுடன் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வது விஜய்க்கு மிகவும் பிடித்த விஷயம். இது போக, இவர் வாலிபால், பேட்மிட்டன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி செய்வதில் கூடுதம் ஆர்வம் உண்டு. ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்.

புரளி!
விஜய் தேவரகொண்டா தெலுங்கானா முதல்வரின் உறவினர் என்று ஒரு புரளி செய்தி பரவியது. ஆனால், நெருக்கமான உறவெல்லாம் இல்லை. ஏதோ தூரத்து சொந்தம் தான். பெரிதாக தொடர்பும் இல்லை என்று விஜய் தேவரகொண்டா விளக்கமும் அளித்தார்.
கே.டி. ராமாராவ் தனக்கு மிகவும் பிடித்தமான அரசியல் தலைவர் என்றும், அவரது தலைமை பண்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் விஜய் கூறி இருக்கிறார்.
ரோட்டில் கண்ட இடத்தில் குப்பை போடுவது, கியூவில் வராமல், இடையே புகுந்து வருவது போன்றவை விஜய் தேவரகொண்டாவிற்கு அர்ஜுன் ரெட்டி லெவல் கோபத்தை உண்டாக்கும் விஷயங்கள்.



Click it and Unblock the Notifications