டெலிவரியினால் ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்படும் பெண்கள் !

ஒரு பெண்ணின் முக்கியமான வேலை என்பது குடும்பத்தை, வீட்டை பார்த்துக் கொள்வது, குழந்தை பெற்றுக் கொடுப்பது தான் என்று இன்றும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மூரில் இருக்கும் பெண்களை விடவும், வசதி வாய்ப்பற்ற நிலையிலும் பெண்கள் பல கொடுமைகளை இன்றும் அனுபவித்து வருகிறார்கள்.

எத்தியோப்பிவின் தலைநகருக்கு அருகில் இருக்கிற ஊர்களில் கூட இதே நிலைமை தான். ஊர்க்கு ஒதுக்குப்புறமாக இருக்கிற அந்தப் பகுதியில் பெண்களாகவே சேர்ந்து கூடாரம் போல அமைத்துக் கொள்கிறார்கள். நான்கைந்து பெண்களாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு தேடினாலும் அங்கே எந்த மனிதரும் கண்ணில் பட மாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இங்கே என்ன செய்கிறார்கள் :

இங்கே என்ன செய்கிறார்கள் :

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்,இங்கே ஆண்கள் இருப்பதில்லை இவர்களை ஊரிலிருந்தே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். சொல்லி வைத்தார் போல எல்லா வீடுகளிலும் படுத்த படுக்கையாகவோ அல்லது வீட்டை விட்டு சிறிது தூரம் மட்டுமே நடக்க முடிந்த நிலையில் பெண்கள் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு என்ன ஆயிற்று? இவர்களை ஏன் ஊரிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை உங்களை உலுக்கியெடுக்கும்.

சூழல் :

சூழல் :

பொதுவாக இவர்கள் வசிக்கிற ஊரில் தண்ணீர் வசதி இருக்காது. அதுமட்டுமின்றி அடிப்படை தேவைகளை வாங்கக்கூட வெகுதூரம் நடந்து சென்று வாங்கி வர வேண்டும். அடிப்படை தேவைக்கே இந்த நிலைமை என்றால் கல்வி, மருத்துவ வசதி எல்லாம் எட்டாக்கனி தான்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே வந்து செல்லக்கூடிய பேருந்தை கண்ணால் பார்க்க வேண்டும் என்றால் கூட அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் வரை நடக்க வேண்டும். இந்த கிராம பகுதிகளை விடவும் மேலே நீங்கள் படித்த பெண்கள் மட்டுமே தனியாய் வசிக்கிற பகுதி இன்னமும் பின் தங்கி இருக்கிறது.

பெண்கள் :

பெண்கள் :

இங்கே வறுமையினாலும், கடன் தொல்லையாலும் பெண்களை மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து அனுப்பி விடுவது வழக்கமாக இருக்கிறது. பல நேரங்களில் பெண்கள் பருவ வயதை எட்டுவதற்கு முன்னரே கூட திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்கள்.

அதைத் தவிர வீட்டினர் பயன்படுத்த போதுமான அளவு தண்ணீர்,சமையல் பொருட்கள் எல்லாம் சேகரித்து வர வேண்டியது இதே பெண்களின் பொறுப்பு.

முதுகுக்கு மேலே :

முதுகுக்கு மேலே :

மிகப்பெரிய மண்ணால் செய்யப்பட்ட குடத்தை முதுகில் சுமந்த பல கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று தண்ணீரை பிடித்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் அசராமல் இருபது லிட்டர் தண்ணீலிருந்து நாற்பது லிட்டர் தண்ணீர் வரையில் சுமந்து வருகிறார்கள்.

பெண் குழந்தைகள் கூட இதில் அடக்கம். அவர்கள் குறைவான அளவு தண்ணீரை சுமந்து வருகிறார்கள். அதைத் தவிர சமையலுக்கு பயன்படுகிற விறகு, கிழங்கு வகைகள் ஆகியவற்றையும் அவர்கள் சுமக்கிறார்கள்.

டெலிவரி :

டெலிவரி :

உடல்நலம் பற்றியெல்லாம் இங்கே பெண்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாது. தண்ணீர் என்பது அத்தியாவசியம் என்பதால் பெண்களால் முடிகிறதோ இல்லையோ காலை விடிந்ததுமே முதுகுக்குப் பின்னால் மிகப்பெரிய அந்த பாத்திரத்தை சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதைத் தவிர மிக முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுவது குழந்தைப் பேறு.

குழந்தைப் பேறு பிரச்சனைகள் :

குழந்தைப் பேறு பிரச்சனைகள் :

அவர்களுக்கு முறையான சத்துமிக்க உணவுகள் கிடைப்பதில்லை, தன்னால் முடிந்த அளவை விடவும் அதிகமாக உடலை வறுத்தி வேலை செய்கிறார்கள். இந்த நேரத்தில் குழந்தைப் பேறு அதுவும் வீட்டிலேயே நடக்கிற பிரசவ முறை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்த பெண்கள்.

சிக்கல்கள் :

சிக்கல்கள் :

சிலருக்கு இந்த குழந்தைப் பேறு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. பலருக்கு கரு தங்காமல் இருப்பது ஓர் பிரச்சனையென்றால் இங்கே குழந்தை பிறந்த பிறகு அதாவது டெலிவரிக்கு பிறகு பல பெண்களுக்கும் பிரச்சனையே ஆரம்பமாகிறது. இந்தப் பிரச்சனையால் தான் பெண்கள் ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.

குழந்தைப் பேறில் நடந்த உடல் நலக்கோளாறு, மருத்துவ வசதி இல்லாமல் வீட்டிலேயே பார்க்கப்பட்ட பிரசவம், வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான மருத்துவ வசதிகள் செய்து கொடுப்பதை விட்டுவிட்டு இப்படி ஊரை விட்டு ஒதிக்கி வைப்பதா? என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது தானே...

என்ன பிரச்சனை :

என்ன பிரச்சனை :

தனிமையில் தன் மகளுடனும், தாயுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிற ஆயுஹூ தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். இது என் முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை கர்ப்பமானேன். கர்ப்பமாக இருக்கிறேன் என்பதற்காக எல்லாம் ஓய்வோ அல்லது சத்தான ஆகாரங்களோ எங்களுக்கு கிடைக்காது.

பிரசவ தேதி நெருங்கியது. வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்தார்கள். ஆனால் என் குழந்தை கருவிலேயே இறந்து விட்டதாக அந்த பிரசவம் பார்த்த பெண் கூறினார். என் உடலுக்குள்ளிருந்து குழந்தையின் உடலை அங்கம் அங்கமாக வெளியில் எடுத்தார்.

சிறுநீர் :

சிறுநீர் :

இந்த சம்பவம் நடந்த ஒரு வாரம் ஆன பின்பும் எனக்கு பிரச்சனை சீராக வில்லை. முதலில் மாதவிடாய் ரத்தம் மட்டும் தான் இப்படி கட்டுப்படுத்த முடியாமல் சென்று கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். நாட்கள் செல்ல செல்ல மாதவிடாய் நின்றுவிட்டது.அதன் பிறகு தான் சிறுநீரை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பது புரிந்தது.

எப்போதும் நான் உட்காரும் இடம் ஈரமாக இருக்கும். சிறுநீரை கட்டுப்படுத்த முடியாததால் எப்போதும் என் கால்களுக்கு இடையில் சிறுநீர் ஒழுகிக் கொண்டேயிருக்கும்.

வீட்டை விட்டுப் போ :

வீட்டை விட்டுப் போ :

பிறரைப் போல வீட்டு வேலை செய்ய முடியவில்லை, அதோடு என்னருகில் வந்தாலே சிறுநீர் நாற்றம் வருகிறது என்று சொல்லி என்னை வீட்டிலிருந்து விரட்டி விட்டார் கணவர், என்னை விரட்டி விட்டு அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

மக்களோடு மக்களாக என்னால் பழக முடியவில்லை, என் கீழ் ஆடை ஈரமாக எல்லாரும் வித்யாசமாக பார்த்து ஒதுங்கிச் சென்றார்கள். ஊரில் வாழ வழியில்லாமல் குழந்தையுடன் அந்த ஊரை விட்டே வெளியேறினேன். என்னுடன் அம்மாவும் வந்து விட்டார். ஊருக்கு வெளியே குடிசை அமைத்துக் கொண்டு நாங்கள் வாழ ஆரம்பித்தோம்.

மருத்துமனை :

மருத்துமனை :

உணவுக்கே படாதபாடு படும் போது சிகிச்சை குறித்தெல்லாம் யோசிக்க முடியுமா என்ன? இப்படியே நாட்கள் நகர்தது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து சேமித்த சொற்ப பணத்தை எடுத்துக் கொண்டு சிகிச்சைக்கு கிளம்பினேன்.

நான் தங்குமிடத்திலிருந்து பல கிலோமீட்டர் நடந்து, அங்கிருந்து இரண்டு பேருந்துகள் மாறி.தலைநகருக்கு வந்து அங்கிருந்து மருத்துவமனைக்கு பல கிலோமீட்டர் நடக்க வேண்டும். மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன்.

ஆறு வருடங்களா? :

ஆறு வருடங்களா? :

அங்கே என்னைப் போலவே பல பெண்கள் இருந்தார்கள். மருத்துவரிடம் விவரத்தை சொன்னேன்... எத்தனை நாட்களாக இந்தப் பிரச்சனை என்று கேட்டார்... நான் கடந்த ஆறு வருடமாக என்று சொன்னேன்... அவரே ஆச்சரியப்பட்டு போனார் என்னது ஆறு வருடங்களாக இந்தப்பிரச்சனை இருக்கிறதா? ஒரு நாள் கூட மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லையா என்று கேட்டார்...

சிரித்தேன்

இரண்டு மில்லியன் :

இரண்டு மில்லியன் :

ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதிலும் இருக்கிற பெண்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தப் பெண் பாதிக்கப்பட்ட அதே ஃபிஸ்டுலா பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டு வருகிறவர்கள் ஒரு பக்கம் என்றால் இப்படி சிகிச்சை பெற வசதியின்றி இன்னமும் சிக்கிதவிக்கிற பெண்களின் எண்ணிக்கை வெகு அதிகம்.

ஃபிஸ்டுலா என்பது பெண்களின் பிறப்புறுக்கும், ப்ளேடருக்கும் இடையில் ஓட்டை விழுவது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பாதிப்பைனை இது ஏற்படுத்துகிறது. சிலருக்கு அடைப்பு ஏற்படுகிறது சிலருக்கு கர்ப்பப்பையே பாதியளவாக சுருங்கி இனி குழந்தைப் பேரு என்பது முடியாத காரியம் என்ற நிலை உருவாகிவிடுகிறது. வயிற்றுவலியில் துவங்கி பல உபாதைகளை இந்தப் பெண்கள் சந்திக்கிறார்கள்.

அறுவை சிகிச்சை :

அறுவை சிகிச்சை :

அடிடிஸ் அபபாவில் இருக்கிற ஃபிஸ்டுலா மருத்துவமனையில் சுற்று வட்டாங்களில் இருந்து வருகிற குறிப்பாக இந்தப் பிரச்சனையுடன் வருகிற பெண்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.

இரண்டு வாரம் மருத்துவ வாசத்திற்கு பிறகு தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்புகிறார்கள். தங்கள் உடல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற நிலையில் கூட போக்குவரத்து, பொருளாதாரம் என்ற காரணங்களைச் சொல்லி தங்களுக்கான சிகிச்சையை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் பெண்கள்.

வீட்டிற்கு செல்ல மாட்டேன் :

வீட்டிற்கு செல்ல மாட்டேன் :

மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் அவர்கள் நிறுத்தி விடுவதில்லை, அந்தப் பெண்களுக்கு கல்வி, பொருளாதார வசதிகளை ஏற்படுத்தி தருவது, அடுத்த முறை செக்கப்பிற்கு பணம், என பல உதவிகளை செய்கிறார்கள். இவர்களிடம் சிகிச்சைக்கு வந்த ஓர் பெண், நான் இந்த சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்ல மாட்டேன் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. பல முறை வீட்டை விட்டு ஓட முயற்சித்தேன். ஆனால் அப்பா என்னை அடித்து கணவர் வீட்டில் சென்று விட்டுவிட்டார்.

அங்கே கர்ப்பமடைந்த எனக்கு இந்த நோயின் தீவிரம் அதிகரித்தது. இனி நான் ஊருக்குச் சென்றால் என்னை என் பெற்றோரும் கணவர் வீட்டினரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் நான் இங்கேயே இருக்கிறேன் என்று அடம்பிடிக்க அவருக்கு குழந்தைகள் அனாதை இல்லத்தில் வேலை செய்ய ஏற்பாடு செய்து வழங்கியிருக்கிறார்கள்.

நவீனம் என்ற பெயர் தான் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்லிக் கொள்ளும் இந்த யுகத்திலும் மருத்துவ சிகிச்சைக்கு வழியின்றி பல பெண்கள் தங்கள் உயிரை விடுவது என்பது சகஜமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, May 28, 2018, 14:33 [IST]
Desktop Bottom Promotion