Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
கணவனை காட்டிலும் பெரும், பெயர் புகழ் பெற்று திகழும் பிரபல பெண்மணிகள்!
கணவனை காட்டிலும் பெரும், பெயர் புகழ் பெற்று திகழும் பிரபல பெண்மணிகள்!
நம் சமூகத்தில் எழுதப்படாத சட்டங்கள் நிறையவே உள்ளன. அம்பேத்கர் எழுதிய சட்டங்களை காட்டிலும், அனாமுத்தாக சமூகத்தில் எழுதப்படாத சட்டங்களை தான் மக்கள் அதிகம் பின்பற்றுகிறார்கள். அவற்றுள் ஒன்று தான்... குடும்பத்தில் கணவன் தான் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற சட்டம்.
ஏன் மனைவி சம்பாதித்தால் என்ன? கௌரவம் குறைந்துவிடும். மனைவி தன்னை மதிக்க மாட்டாள், ஊரில் இருக்கும் அந்த நாலு பேர், நான்கு விதமாக பேசி ஏளனமாக சிரிப்பான்... அதானே...?
ஒருவேளை கணவனை விட மனைவி அதிகம் சம்பாதித்தால் அதன் விளைவு எப்படியாக இருக்கும் என்பதனை மிக அற்புதமாக கூற வேண்டும் என்றால்... நீங்கள் முத்துராமன் - ஜெயலலிதா நடிப்பில் முக்தா ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் 1973ம் ஆண்டு வெளியான சூரியகாந்தி என்ற திரைப்படத்தை தான் காண வேண்டும்.

குடும்ப சூழல் காரணத்தாலும், முத்துராமன் சம்பாத்தியம் பற்றாக்குறையாக இருப்பதாலும் ஜெயலலிதா அந்த படத்தில் ஒரு சேல்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு போவார். தனது திறனால் பதவி உயர்வு பெற்று தனது கணவனை விட அதிகம் சம்பாதித்து குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் செய்வார்.
இதனால் முத்துராமனுக்கு பொறாமை வந்துவிடும். இதனால் அவர்கள் உறவில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதை விளக்கும் படம் தான் சூரியகாந்தி. இந்த படத்தில் நடித்ததற்காக ஜெயலலிதாவிற்கு 1973ம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில சிறந்த நடிகை விருது பெற்றார்.
இது ரீல் லைஃபாக இருக்காலாம். ஆனால், ரியல் லைஃபிலும் சில இந்திய பெண் பிரபலங்கள் தங்கள் கணவர்களை விட அதிக பெயர், புகழ் பெற்று விளங்குகிறார்கள். அவர்களை பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்...

அபிஷேக் - ஐஸ்வர்யா
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா அமிதாபின் மகன் அபிஷேக்கை திருமணம் செய்துக் கொண்டார். ஹாலிவுட் வரை பெரும் புகழ் கொண்ட நடிகையாக திகழ்கிறார் ஐஸ்வர்யா. மேலும், உலகின் பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இவர் தான் பிராண்ட் அம்பாசிடராக இருந்து விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள். சொத்து மதிப்பு என்று பார்க்கும் போது ஐஸ்வர்யாவின் 35 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார். அபிஷேக் 30 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார்.

சானியா - சோயப் மாலிக்
சானியா - சோயப் மாலிக்கின் திருமண அறிவிப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும். இன்றளவும் இவர்கள் இருவரும் ஒரு அழகான கணவன் - மனைவி உறவில் வாழ்ந்து வருகிறார்கள். சானியாவின் டென்னிஸ் கனவுகளுக்காக குழந்தை ஆசையை நீண்ட நாள் தள்ளிப்போட்டிருந்தார் சோயப் மாலிக்.
ஏறத்தாழ எட்டு வருட இல்லற உறவுக்கு பிறகு சமீபத்தில் தான் சோயப் சானியா கருவுற்று இருப்பதாக செய்தியை வெளியிட்டிருந்தார். சானியாவின் சொத்து மதிப்பு 26 மில்லியன் டாலர்களும், சோயப் மாலிக்கின் சொத்து மதிப்பு 25 மில்லியன் டாலர்களும் என்று கூறப்படுகிறது.

பிபாஷா பாஸு - கரன் சிங்
பாலிவுட் நடிகை பிபாஷா பாஸு அலோன் என்ற படத்தில் தன்னுடன் நடித்த கரன் சிங் என்பவரை கடந்த 2016 ஏப்ரல் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். பிபாஷாவிற்கு மும்பையில் இரண்டு வீடுகள், கொல்கத்தாவில் ஒரு வீடும் இருக்கிறது.
இவர்கள் இருவரும் மும்பையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். வருமானம் என்று பார்க்கும் போது பிபாஷாவின் சொத்து மதிப்பு நூறு கோடிகளுக்கும் மேலாக இருக்கிறது. கரன் சிங்கின் சொத்து மதிப்பு 13.4 கோடி என்று அறியப்படுகிறது.

ஃபரா கான் - ஷிரிஷ்
ஃபரா கான் தன்னை விட இளையவரான ஷிரிஷ் குந்தர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஃபரா கான் பாலிவுட்டில் 25 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவரது சொத்து மதிப்பு எட்டு மில்லியன் டாலர்களுக்கும் அதிகம்.
தான் இயக்கம் படங்களுக்கு ஊதியமாக மட்டும் பத்தில் இருந்து பதினைந்து கோடிகள் ஊதியமாக வாங்குகிறார். நடன அமைப்புகளுக்கு இருபது முதல் முப்பது இலட்சங்கள் வாங்குகிறார்.
இவரது கணவர் ஷிரிஷ் குந்தர் எடிட்டராக இருந்து பிறகு ஓரிரு படங்கள் இயக்கினார் அவை எல்லாம் தோல்வி படங்களாக முடிந்தன. ஒப்பிடும் போது ஷிரிஷ் குந்தரின் சொத்து மதிப்பு ஃபரா கானின் சொத்து மதிப்பை விட கணிசமான அளவு குறைவு தான்.

ஸ்ரேயா கோஷல்!
இந்தியாவின் பல்வேறு மொழிகளில் முன்னணி பாடகியாக விளங்கி வருகிறார் ஸ்ரேயா கோஷல். ஒரு பாடலுக்கு 15 - 20 இலட்சம் வரை ஊதியமாக பெறுகிறார் ஸ்ரேயா கோஷல். பாலிவுட்டில் பணக்கார பாடகி என்றும் அழைக்கப்படுகிறார். இவரது சொத்து மதிப்பு 25 மில்லியன் டாலர்கள் இருக்கும் என கூறுகிறார்கள்.
இவர் தனது இளம் வயது தோழரான ஷிலாதித்யா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவர் ஒரு எலக்ட்ரானிக் பொறியாளார் ஆவார். பின்னாட்களில் இவர் சொந்த தொழில் துவங்கிவிட்டார். இவர் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஹிப்கேஷ் (HipCash) எனும் மொபைல் செயலியை உரிமையாளர் இவர் தான் என்று கூறப்படுகிறது.
சொத்து மதிப்பு என்று வைத்துப் பார்க்கும் போது ஸ்ரேயா தன் கணவரை காட்டிலும் பல மடங்கு அதிகம் சம்பாதித்துள்ளார்.

ஐ.டி.
ஏன் இன்று ஐ.டி.யில் பணிபுரியும் தம்பதிகளை எடுத்துக் கொள்ளுங்களேன்... பெரும்பாலும் கணவன் மனைவி ஒரே அளவில் சம்பாதிக்கிறார்கள். சில தங்கள் துணையை காட்டிலும் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள்.
இதை ஒரு கௌரவ குறைச்சலாக பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. இன்னும் சொல்ல போனால், இதனால்... வேறு துறைகளில் வேலை தேடுவதோ, இல்லை திடீர் பணி நீக்கம் ஏற்பட்டால்... நேரம் எடுத்து நல்ல வேலை தேடவோ... மனைவியின் சம்பாத்தியம் பெருமளவு உதவுகிறது என்றே கருதுகிறார்கள்.



Click it and Unblock the Notifications