Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
லஞ்சம் தர மறுத்த பெண்ணை நிர்வாணப்படுத்தி சோதனை செய்து போலீஸ் அட்டூழியம்!
லஞ்சம் தர மறுத்த பெண்ணை நிர்வாணப்படுத்தி சோதனை செய்து போலீஸ் அட்டூழியம்!
கென்யாவின் கரியோபங்கி எனும் இடத்தில் போலீசாரின் இந்த அட்டூழிய செயல் அரங்கேறியுள்ளது. சாலை விதிகளை மீறியதாக கூறி தேரேசியா மும்பி எனும் பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 31 வயது மிக்க மும்பியை வலுக்கட்டாயமாக அவரது பாலினத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி, அவரது ஆடைகளை கழற்ற கூறியுள்ளனர்.
இதற்கான காரணம் கேட்டதற்கு, மும்பியின் முகத்தில் கொஞ்சம் முடி அதிகமாக இருக்கிறது. இது தாடி தான். எனவே, ஆணாக இருக்குமோ என்ற சந்தேகம் நிலவுகிறது என போலீஸார் கூறியுள்ளனர். மும்பியின் பிறப்புறுப்பை காண்பிக்க சொல்லி அவமானப்படுத்தி, கொடுமை செய்து துன்புறுத்தியுள்ளனர் கென்யா காவலர்கள்.
இந்த சம்பவம் கென்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பி!
மும்பி 31 வயது மிக்க கென்யா நாட்டை சேர்ந்த பெண்மணி. இவர் ஓரிரு தினங்களுக்கு முன்னர் கென்யாவின் கரியோபங்கி என்ற பகுதியில் சாலை விதிகளை மீறியதாக கூறி இரு பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்த பிறகு, அந்த பெண் காவலர்கள் மும்பியின் முகத்தில் சிறிதளவு தாடி இருந்ததால், அவர் ஆணாக இருக்க கூடுமோ என்ற சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால், உடனே அவரது பாலினம் கண்டறிய முயற்சித்துள்ளனர்.
Image Source: KTN News

அவமானம்!
உடனடியாக, மும்பியை அவரது ஆடைகளை கழற்ற கூறி வற்புறுத்தியுள்ளனர். நிர்வாணப்படுத்தியது மட்டுமின்றி, அவரது பிறப்புறுப்பை கால்களை விரித்து காண்பிக்க வேண்டும் என்று கேவலமான செயலிலும் நடந்துள்ளனர் கென்யா பெண் காவலாளிகள்.
காவலாளிகள் தனக்கு செய்து கொடுமைகளை மும்பி கென்யாவின் லோக்கல் மீடியாக்களில் கூறி அம்பலப்படுத்தியுள்ளார்.
Image Source: KTN News

கோளாறு!
மும்பி எனும் இந்த பெண்ணுக்கு 'Hypertrichosis' எனப்படும் மயிர்மிகைப்பு கோளாறு இருக்கிறது. இதனால், மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில் இவருக்கு உடலில் கொஞ்சம் கூடுதலாக சரும ரோம வளர்ச்சி காணப்படுகிறது.
தனது இந்த கோளாறு காரணமாக தான் உடலில் அதிக ரோம வளர்ச்சி இருக்கிறது என்று கூறியிருக்கும் மும்பி. தான் ஷேவிங் செய்வதை விரும்புவது இல்லை என்றும் கூறியுள்ளார். ஏனெனில், ஷேவிங் செய்வதனால் தனக்கு எரிச்சல் உணர்வு அதிகரிக்கிறது என்று மேலும் தான் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் மும்பி.

2 பெண் காவலாளிகள்!
நடந்த சம்பவம் குறித்து மும்பி கூறுகையில்,
"என்னை கைது செய்தவுடன் இரண்டு பெண் காவலாளிகள் எனது ஆடைகளை கழற்றி கால்களை விரித்து காண்பிக்க கூறினார்கள். என் உடல் அங்கங்களை கண்ட பிறகு... நான் பெண் தான் என்று அவர்கள் ஒப்புக் கொண்ட பிறகு என்னை காவல் அறைக்கு அழைத்து சென்றனர். நான் முடிந்த அளவு கெஞ்சி கேட்டுக் கொண்ட பிறகும் கூட, அவர்கள் என்னை அவமானப்படுத்துவதை நிறுத்த வில்லை." என்று தெரிவித்துள்ளார்.
மும்பியின் இந்த கைது சம்பவம் கடந்த மே 15 ம் நாள் நடந்துள்ளது.

லஞ்சம்!
மும்பியை கைது செய்த அந்த இரண்டு பெண் காவலாளிகள் முதலில் மும்பியிடம் லஞ்சமாக மூன்று யூரோக்கள் கேட்டுள்ளனர். இதன் இந்திய மதிப்பு 230 ரூபாய் ஆகும். பிறகு மும்பி சாலை விதி மீறல் மற்றும் வேறு சில சின்ன, சின்ன வழக்குகள் பதிவு செய்துள்ளனர் கென்யா போலீசார்.

அச்சம்!
தனது ஹார்மோன் கோளாறு காரணமாக அவமானப்படுத்தியது மிகுந்த மன வலியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருக்கும் மும்பி. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் வேலைக்கு செல்வதையே நிறுத்திவிட்டேன் என்றும். தனக்கு இனிமேல் வேலைக்கு போகவே பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மீண்டும் இப்படி ஒரு சமபவம் நடந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாக மும்பி மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலாளிகளே இப்படி சோதனை என்ற பெயரில் அவர்களை நிர்வாணப்படுத்தி, அவமானம் அடைய செய்வது மனித உரிமை மீறல் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மும்பி.

வருத்தம்!
பெண்களுக்கு ஆண்களிடம் இருந்து பாதுகாப்பு இல்லை என்பதால் தான் காவல் துறையில் பெண்களுக்கென தனியாக பெண் காவலாளிகளை பணியமர்த்தும் முறை உலகெங்கிலும் நடைமுறை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், லஞ்சம் வாங்குவதற்காக... பெண் காவலர்களே.. பெண்களை இப்படி அவமானப்படுத்துவது, மனித்தன்மை இன்றி கொடூரமாக நடந்துக் கொள்வது என்பது பெண்களுக்கு இந்த உலகில் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக இருப்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.



Click it and Unblock the Notifications
