10வயது சிறுமி கர்ப்பம்! குடும்பமே சேர்ந்து குற்றவாளியை காப்பாற்றிய கொடுமை my story #144

By: Staff
Subscribe to Boldsky

பொண்ணு நல்லா வளர்ந்துட்டா போலயே.... வாட்ட சாட்டமா இருக்கா.... என்று ரீனாவின் கண்ணத்தைப் பிடித்து கிள்ளினார் பல வருடங்கள் கழித்து வீட்டிற்கு வந்திருக்கும் அத்தை.

ஆமா அக்கா எல்லாரும் அதத்தான் சொல்றாங்க என்று சலித்துக் கொண்டாள் அம்மா.

அத்தை வீட்டிற்கு வந்த நேரமோ என்னவோ அடுத்த பத்து நாட்களில் பூப்பெய்தினாள் ரீனா. அப்போது ரீனாவுக்கு பத்து வயது தான். பத்து வயதிலேயேவா பெண் குழந்தைகள் பருவமடைவார்கள் என்று ஆச்சரியப்படாதீர்கள். இன்றைக்கு தங்களுடைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் பெண் குழந்தைகள் பலரும் இந்தப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.

உறவுகள் எல்லாரையும் அழைத்து தடபுடலாக விருந்து நடந்தது. விஷேசங்கள் கலைகட்டியது, சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் நடைப்பெற்றன. பத்து வயதில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்கு முன்னதாகவே தன்னைச் சுற்றி என்னென்னவோ நடக்கிறது, திடீர் அலங்காரம், திடீர் கவனிப்பு என எல்லாமே புதிதாக இருக்கிறது ரீனாவிற்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அண்ணா! :

அண்ணா! :

கூட்டுக்குடும்பத்தில் வசித்துக் கொண்டிருக்கும் ரீனாவிற்கு அதன் பிறகு பயங்கர கவனிப்பு. பள்ளிக்குச் செல்லும் போது கூட அப்பா தினமும் கொண்டு போய் விட்டு அழைத்து வருகிறார்.

சில சமயத்தில் வீட்டிலிருக்கும் உறவினர் அண்ணா வருவார். ரீனா குட்டி என்று தான் அவளை அழைப்பார்.

 அண்ணனா மிருகமா? :

அண்ணனா மிருகமா? :

கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுப்பது, தவறு செய்யும் போது அம்மா திட்ட அதை உடனே இந்த அண்ணன் வந்து தடுத்து ரீனாவை சமாதானப்படுத்துவது என்று இருப்பார். அந்த சமாதானம் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஆனால் அது சமாதானமாக இல்லை.

ஆம், அந்த உறவினர் அண்ணன், சமாதானம் என்ற பெயரில் செல்லம் என்ற போர்வையில் ரீனாவை பாலியல் வன்புணர்வு செய்யத் துவங்கினான். ஆரம்பத்தில் ரீனா எதிர்த்து இது எல்லாம் வேண்டாம் என்று சொன்னாலும். அண்ணன் தானே.... அண்ணன் உனக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என்று சொல்லி மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான்.

மிரட்டல் :

மிரட்டல் :

ஒரு கட்டத்தில் அண்ணனிடம் செல்வதையே தவிர்த்து வந்தாலும் ஒரே வீட்டில் இருப்பதால் வர்புறுத்தி அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தான் அந்த மிருகம். நீ வரவில்லை என்றால் உன் அம்மாவை கொன்று விடுவேன். தம்பி விளையாடும் போது அவனை இந்தக் கிணற்றில் தூக்கிப் போட்டுவிடுவேன்.

அப்பாவை ரயில்வே ட்ராக்கில் போட்டுவிடுவேன். அவர் உடல் நசுங்கி இறந்து விடுவார் என்றெல்லாம் மிரட்டி தன் காரியத்தை சாதித்துக் கொண்டிருக்கிறான். இதனாலேயே பயந்து தனக்கு நேர்கிற கொடுமைகளை பெற்றோரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாள் ரீனா.

வயிற்று வலி :

வயிற்று வலி :

சில வருடங்கள் ரீனா இந்த கொடுமைகளை அனுபவித்து வந்த நிலையில், ரீனாவுக்கு திடீர் வயிற்று வலி வந்தது. வீட்டில் சொன்னால் அசிடிட்டி என்று சொல்லி அதற்கான கை மருத்துவம் செய்தார்கள்.

உணவைக் குறைத்துப் பார்த்தார்கள், இளநீர் கொடுப்பது,மோர் என உடல் சூட்டை தணிக்கும் உணவுகள் கொடுத்துப் பார்த்தார்கள் ஆனால் வயிற்று வலி குறையவேயில்லை.

ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போ :

ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போ :

ஒரு கட்டத்தில் ரீனாவுக்கு மிகவும் உடல் நலமில்லாமல் போனது. வீட்டிலிருக்கும் பெரியம்மா ஒருவர், அவள் வயிறு அசாதரணமாக இருக்கிறது. வழக்கத்தை விட பெரிதாக தெரிகிறது. நீ மருத்துவரிடம் அழைத்துச் செல் என்றார்.

இல்லை அக்கா அவளுக்கு உணவு செரிக்காமல் அப்படியே இருப்பதால் தான் வயிறு அப்படித் தெரிகிறது என்றார் ரீனாவின் அம்மா. அதன் பின் சில தினங்கள் இன்னும் கடுமையான வயிற்று வலி, வயிறின் அளவும் பெரிதாக தெரிந்தது. வயிற்றில் கட்டியிருக்கும் உடனே மருத்துவமனைக்கு ஓடு என்று கிளப்பினார்கள்.

அதிர்ந்த குடும்பம் :

அதிர்ந்த குடும்பம் :

ரீனாவின் அம்மாவும் பெரியம்மாவும் ரீனாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினார்கள். அங்கே ரீனாவை பரிசோதித்த மருத்துவர் ஒரு நிமிடம் உறைந்தே போனார். இது பத்து வயது குழந்தைக்குத் தான் சோதனை செய்கிறோமா? என்று இரண்டு மூன்று சோதித்துப் பார்த்தார்.

ஆம், அவள் குழந்தை தான்.

கர்ப்பம் :

கர்ப்பம் :

ரீனாவை வெளியே போகச் சொல்லிவிட்டு மருத்துவர் தொடர்ந்தார். உங்க குழந்தைய யாரோ ரேப் பண்ணியிருக்காங்க.ஷீ இஸ் ப்ரெக்னண்ட்.

ஒரு கணம் இருவரும் உறைந்து நின்றார்கள். இல்லை அதற்கு வாய்ப்பேயில்லை நீங்கள் தவறாக சொல்கிறீர்கள். வெளியாட்கள் ரீனாவுடன் பழகுவது அரிது, அதற்கான வாய்ப்புகளே இல்லை. தினமும் அவளை பள்ளியில் விட்டு அழைத்து வருகிறோம். எப்போதும் அவள் வீட்டில் தான் இருப்பாள் என்று இருவரும் மாறி மாறிச் சொன்னார்கள். நீங்கள் தவறாக சொல்கிறீர்கள் என்று புலம்பினார்கள்.

ஸ்கேனிங் :

ஸ்கேனிங் :

இவர்கள் ஒப்புக் கொள்ள அடம்பிடிக்கிறார்கள் உண்மையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பதால் ரீனாவையும் அவளுடன் வந்த அம்மா,பெரியம்மாவையும் அழைத்துக் கொண்டு ஸ்கேன் எடுக்கும் அறைக்குச் சென்றார் அந்த மருத்துவர். ரீனாவை படுக்க வைத்து ஸ்கேன் எடுக்க ஆரம்பித்தார். அம்மாவும் பெரியம்மாவும் கலவர முகத்துடன் கணினித் திரையை பார்க்க ஆரம்பித்தார்கள்.

ஏழு மாதக் குழந்தை :

ஏழு மாதக் குழந்தை :

உள்ளே குழந்தையின் முழு உருவம் வளர்ந்து அசைந்து கொண்டிருந்தது. பார்த்தவர்கள் யாவருக்கும் அதிர்ச்சி. ஓ... மை காட் என்று மருத்துவரே அதிர்ந்து விட்டார். இப்போ ரீனாவுக்கு 30 வீக். ஆல்மோஸ்ட் டெலிவரி ஸ்டேஜ். இப்பவாது நம்புறீங்களா?

யார் காரணம் :

யார் காரணம் :

அன்றைக்கு வீடே கலவரமானது. எல்லாரும் ரீனாவை வந்து திட்டிக் கொண்டிருந்தார்கள். சொல்லு என்ன பண்ண... எவ்ளோ தைரியம் உனக்கு.... குடும்ப மானத்த வாங்கிட்டியேடி.... ஏமாத்திட்டாளே என்று அம்மாவும் அப்பாவும் அழுது புலம்புகிறார்கள்.

ரீனாவுக்கோ எங்கே சொன்னால் அவன் சொன்னது போல கொன்று விடுவானோ என்று பயம்.

Image Courtesy

சொல்லிவிட்டாள் :

சொல்லிவிட்டாள் :

சுற்றியும் எல்லா உறவுகள் நின்று கேள்வி கேட்கிறார்கள். எல்லாரும் அழுகிறார்கள் நான் எதோ பெரிய தவறு செய்துவிட்டேன் என்பது மட்டும் புரிந்தது அந்த குழந்தைக்கு. அம்மாவுக்கு அழுது அழுது மூச்சு வாங்க ரீனா பயந்து விட்டாள்.

அம்மா அழாதீங்க... நான் சொல்றேன் நான் சொல்றேன் என்று கெஞ்சினாள். இவளும் அழுது கொண்டே சொல்ல ஆரம்பித்தாள். யாரென்று தெரிந்ததும் முதலில அவனைத் தேடிச் சென்று வெட்ட வேண்டும். குழந்தைகிட்ட போய் எப்டிடா.... ச்சை என்று அவனையும் அவன் குடும்பத்தையும் அடித்துவிட்டு வரணும் என்று ஆவேசமடைந்தார் பெரியப்பா.

அண்ணன் தான் :

அண்ணன் தான் :

எல்லாரும் நின்றிருக்க... இந்த அண்ணன் தான் என்று கையை நீட்டினாள். யாருக்கும் பேச்சு வரவில்லை. இந்த அண்ணன் என்னை தனியா வரச்சொல்லுவான், ட்ரஸ கலட்டச் சொல்லுவான் என்று ஒன்று விடாமல் நடந்த அத்தனையும் ஒப்பித்தாள்.

துரோகி வெளியில் இல்லை வீட்டிலேயே தான் இருந்திருக்கிறான் என்பதையறிந்து அழுவதா அல்லது பெரியப்பா சொன்னது போல யாரைப் போய் அடிப்பது? ஆத்திரத்தில் குழந்தையிடம் தவறாக பழகியவனை வெட்ட வேண்டும் என்றேனே..... அந்த பாவி என் மகனாகத் தான் இருக்கணுமா என்று பெரியப்பா கத்தி அழுதார்.

ஏன் சொல்லல :

ஏன் சொல்லல :

ரீனாவின் அப்பா அவனை ஓங்கியடிக்க, இரண்டு மூன்று அடிகளில் அப்பாவை விலக்கி விட்டார்கள். அன்னைக்கே சொல்லியிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்குமா? ஏன் அம்மாட்ட சொல்லல.... நீ அப்பாட்டயாவது வந்து சொல்லியிருக்கலாம்ல ரீனா என்று அப்பா கேட்க

உங்கள ட்ரைன் வர்ற ட்ராக்ல தூக்கி போட்ருவேன்னு சொன்னான்ப்பா.... தம்பிய கிணத்துல தூக்கி போட்ருவேன்னு சொன்னான்ப்பா. நீ சொன்னா இதெல்லாம் நான் பண்ணுவேன்னு சொன்னான்ப்பா என்று அப்பாவை அணைத்துக் கொண்டு அழுதாள்.

இன்னமும் குழந்தைத்தனம் மாறாது வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பிக் கொண்டிருக்கும் ரீனாவ எப்படிடா ......ச்சை

மூச்சுத் திணறல் :

மூச்சுத் திணறல் :

கலேபரம் நடந்து கொண்டிருக்க ரீனாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். குழந்தை பெரிதாக வளர்ந்து விட்டிருக்கிறது, ஆனால் ரீனாவின் உடல் அதை தாங்கும் பக்குவம் இல்லை என்பதால் தான் அவளுக்கு மூச்சுத் திணறல் மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று சொல்லி ரீனாவை மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

 அபார்ஷன் :

அபார்ஷன் :

டாக்டர் அபார்ட் பண்ண முடியுமா என்று ஆண்கள் போய் மருத்துவரிடம் தனியாக கேட்டார்கள்.

கண்டிப்பா முடியாது. இப்போ ரீனாவுக்கு 7.5 மாசம் ஆகிடுச்சு... இன்னும் கொஞ்ச நாள்ல டெலிவரி ஆகிடும். இந்த டைம்ல அபார்ஷன் எல்லாம் சாத்தியமே இல்ல. அதோட அத ரீனாவல தாங்கவும் முடியாது.

 ரீனா குழந்தை :

ரீனா குழந்தை :

ரீனா ஒரு குழந்தை, அவளுக்கே தெரியாம இந்த விஷயம் நடந்திருக்கு. இப்பவரைக்கும் தனக்கு என்ன நடந்திருக்கு, தான் இப்போ ப்ரெக்னெண்டா இருக்கோம், இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை பிறக்கப் போகுதுன்னு அவளுக்குத் தெரியாது. பத்து வயசுல ஒரு குழந்தைக்கு அம்மாவா.... நினச்சுப் பாக்கவே பயமா இருக்கு. இல்ல டாக்டர் இந்த குழந்தை எங்களுக்கு வேண்டாம். ப்ளீஸ் அபார்ஷன் பண்ணிடுங்க என்று கெஞ்சினார் ரீனாவின் அப்பா.

என்ன பேசுறீங்க கோர்ட் ஆர்டர்படி 20 வீக்குள்ள குழந்தை இருந்து அந்த குழந்தையால அம்மாவோட உயிருக்கு ஆபத்துனா அபார்ஷன் பண்ணலாம். அதுவும் கேஸ் போட்டு கோர்ட் சம்மதம் வாங்கணும். இப்போ சான்சே இல்ல என்று மறுத்துவிட்டார்.

யார் அந்த கொடூரன் :

யார் அந்த கொடூரன் :

குழந்தைய யார் ரேப் பண்ணனு தெரிஞ்சதா? சொல்லுங்க அவன் மேல ஆக்‌ஷன் எடுக்கலாம். இது சைல்ட் அப்யூஸ் கடுமையான தண்டனை கிடைக்கும்.....

ஒரு கண அமைதிக்குப் பிறகு இல்ல டாக்டர் அதான் விசாரிச்சுட்டு இருக்கோம். இந்த விஷயம் வெளிய தெரியாம.... என்று நிறுத்தினார்.

பெண் குழந்தை :

பெண் குழந்தை :

ஏழாம் மாத இறுதியில் ரீனாவிற்கு சிசேரியன் மூலமாக பெண் குழந்தை பிறந்தது. ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து குழந்தை கொண்டு வரப்பட்டது. அதை வாங்கிக் கொண்டு, நேராக மருத்துவரின் அறைக்குச் சென்ற ரீனாவின் தந்தை டாக்டர் இந்த குழந்தை எங்களுக்கு வேண்டாம். எதாவது அனாத ஆஸ்ரமத்துல விட்டுடுங்க. இந்த குழந்தைய கொண்டு போறதுல எங்களுக்கு விருப்பமில்ல என்று சொல்லிக் கொடுத்தார்.

மருத்துவர் எவ்வளவோ சொல்லியும் குழந்தை வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்ததினால் குழந்தையை வாங்கிக் கொண்டு அனாதை இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

எல்லாம் தீர்ந்தது :

எல்லாம் தீர்ந்தது :

ஒரு வார மருத்துவ சிகிச்சைக்கப் பிறகு ரீனா வீடு திரும்பினாள். குழந்தை ஓர் அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. மருத்துவரும் இப்படியான ஓர் சம்பவத்தை மறந்து போனார்.

அண்ணன் வேலை தேடி வெளியூருக்கு கிளப்பி விடப்பட்டார். தவறு செய்தவன் தன் குடும்பத்து உறுப்பினர் என்பதால் கமுக்கமாக அந்த விஷயம் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. இங்கே தவறு செய்தது அண்ணனாக இருந்தாலும் தண்டனையை அனுபவிப்பது என்னவோ ரீனாவும், அனாதையாக விடப்பட்ட அந்த குழந்தையும் தான்.

வாழ்க இந்தியா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 year old girl give birth to a baby

10 year old girl give birth to a baby
Story first published: Tuesday, January 16, 2018, 15:51 [IST]
Subscribe Newsletter