3 ஆண்டு கழித்து இறந்த கணவனின் விந்து மூலம் குழந்தை பெற்ற விதவை பெண் - அதிசயம்!

Posted By:
Subscribe to Boldsky

பீ ஜியா சென், 32 வயதுமிக்க வென்ஜியன் லியு என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை வெறும் 3 மாதங்கள் மட்டுமே நீடித்தன. எதிர்பாராத விதமாக வென்ஜியன் லியு மரணமடைந்தார்!

வென்ஜியன் லியு நியூயார்க் போலீஸாக பணியாற்றி வந்தவர். இவர் டிசம்பர் 2014ல் ஒரு துப்பாக்கி சூட்டில், லியு-வும் இவருடன் பணிபுரிந்து வந்த நண்பரும் கொல்லப்பட்டனர்.

தனது கணவன் இறந்து பிறகு அவரது விந்தணுவை சேமித்து மூன்று வருட போராட்டத்திற்கு பிறகு குழந்தை பெற்றுள்ளார் சென்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விந்து சேமிப்பு!

விந்து சேமிப்பு!

வென்ஜியன் லியு இறந்த அன்று இரவே, சென் தனது கணவரின் விந்தணுக்களை சேமித்து வைக்க கோரி மருத்துவமனையில் கூறினார். சென் தனது கணவர் பெண் குழந்தை வேண்டும் என மிகவும் விரும்பினார் என்பதையும் கூறியுள்ளார்.

பெண் குழந்தை!

பெண் குழந்தை!

சென் தனது தோழிகளிடம் எனக்கு பெண் குழந்தை பிறக்கும் என அவ்வப்போது கூறி வந்துள்ளார். ஆனால், அவரது தோழிகள் எந்த ஸ்கேனும் செய்யாமல் எப்படி கூறுகிறாய் என பதில் அளித்துள்ளனர். சென் கருத்தரித்து எளிதான காரியம் அல்ல.

பலமுறைகள்!

பலமுறைகள்!

கணவனின் சேமிக்கப்பட்ட விந்து உறைய வைக்கப்பட்டிருந்தது. பலமுறை கருத்தரிக்க முயன்றும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இம்முறையில் கருத்தரிப்பது சக்சஸ் ஆகும் வரை தனது சொந்தங்களுக்கு இதுப்பற்றி சென் கூறவில்லை.

ஒருவேளை இத்தனை முறை கருத்தரிப்பு தோல்வியுற்றது தெரியவந்தால் அவர்கள் மனம் நொந்து போவார்கள் என சென் கருதியுள்ளார்.

விடா முயற்சி!

விடா முயற்சி!

ஆனால், சென்னின் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. ஒருநாள் சென் கருவுற்றார். தான் தனது கணவனின் விந்து மூலம் கருவுற்ற பிறகு அதை மிக்க மகிழ்ச்சியுடன் தனது சொந்தங்களிடம் கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளார் சென்.

குழந்தை!

குழந்தை!

சென்னின் கணவர் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவரது விந்து மூலமாகவே கருத்தரித்து குழந்தை பெற்றுள்ளார் சென்.

குழந்தையை கண்ட தாத்தா, பாட்டி, முகம் மருமகளை போல இருந்தாலும், கண்கள் மற்றும் நெற்றி அப்படியே மகன் போலவே இருக்கிறது. பேத்தியின் முகம் வழியாக தங்கள் மகனை பார்க்கிறோம் என மகிழ்ந்து கூறியுள்ளனர்.

Image Source

மெய் காதல்...

மெய் காதல்...

இன்று பலரும் மெய் (உடல்) மட்டும் காதலித்து வரும் சூழலில், வெறும் மூன்று மாத இல்லற வாழ்க்கை வாழ்ந்து, அதில் தனது கணவனின் ஆசை நிறைவேற வேண்டும் என மூன்று வருடம் போராடி ஒரு பெண் குழந்தை பெற்ற சென்னின் மெய் (உண்மை) காதல் மிகவும் புனிதமானது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Woman Gave Birth to Child Whose Dad Died Three Years Back!

Woman Gave Birth to Child Whose Dad Died Three Years Back!