நட்புனா சும்மா இல்லடான்னு ஏன் சொல்றாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நம் வாழ்வோடு ஒன்றிய ஓர் உணர்வு அதே நேரத்தில் எல்லா வயதிலும் தேவைப்படும் ஓர் உறவு என்றால் நிச்சயமாக நட்பு என்று சொல்லலாம். சினிமாவிலும் நட்பை மையமாய் வைத்து ஏராளமான திரைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். இப்படி நட்பு என்ற உறவு நம்மோடு இரண்டறக் கலந்துவிட்டது என்றுக் கூட சொல்லலாம்.

அந்த அளவிற்கு நட்பு முக்கியமானதா? தெரிந்து கொள்ளலாம் கட்டுரையின் முடிவில்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒண்ணே ஒண்ணு சொல்லவா :

ஒண்ணே ஒண்ணு சொல்லவா :

நம் மனதில் இருக்கும் ரகசியங்கள்.... பிறரிடம் பகிர முடியாத ரகசியங்கள்... உரிமையாக பகிர்ந்து கொள்ள முடியும். முதல் காதல், முதல் முத்தம், உங்களுக்கே உங்களுக்கான உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம். சில்லறைத்தனமான உங்களது சந்தேகங்களை உரிமையாக கேட்கலாம்.

யூ டன் மச்சி :

யூ டன் மச்சி :

நம்மால் என்ன முடியும் என்று நமக்கே எடுத்துக் காட்டும் கண்ணாடியாய் நட்பு இருக்கும். இக்கட்டான சூழல்களில் நம்மை மீட்டெடுக்க வருவதும் இதே நட்பு தான்.

தனிமை எனும் கொடுமை

தனிமை எனும் கொடுமை

இத்தனை பேர் சுற்றியிருக்க தனிமையாய் இருப்பது என்பது மிகவும் கொடுமையானது. தனியாக உட்கார்ந்திருக்கும் போது தான் பல்வேறு யோசனைகள் வரும். படிப்படியாக மன அழுத்தத்திற்கு வழி வகுத்திடும். நாம் என்ன மூடில் இருக்கிறோம் அதற்க்கேற்ப ரியாக்ட் செய்திட முடியும். முகமுடி தேவையிருக்காது.

காது கொடுத்து கேட்கலாம் :

காது கொடுத்து கேட்கலாம் :

எவ்வளவு சீரியசான விஷயங்களாக இருந்தாலும் நாம் சொல்வதை காது கேட்கும் ஓர் உறவு நட்பு. நம் வயது, வேலை,மெச்சூரிட்டி எல்லாம் கடந்து நம் எண்ணங்களை, விமர்சனங்களை,சந்தேகங்களை பகிர முடியும்.

தோல் கொடுப்பான் தோழன் :

தோல் கொடுப்பான் தோழன் :

நம்மால் சமாளிக்க முடியாத சூழ்நிலைகளில் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத தருணங்களில் மனம் விட்டு அழுதிட ஓர் உறவு என்றால் அது நிச்சயமாக நட்பாகத்தான் இருக்க முடியும். பிரச்சனை தீர்கிறதோ இல்லையோ நம் மனதில் பாரம் நிச்சயமாக குறைந்திருக்கும்.

உள்ளே வெளியே :

உள்ளே வெளியே :

நாம் யார்? நமக்கு ஏற்ற சூழல்கள் எது என்று புரிந்து கொள்ள முடிவதோடு பிறரிடம் பழகும் தன்மையும் எல்லாரையும் அனுசரித்து போகும் குணத்தையும் பெற முடியும். நம் குணத்தை எந்த சங்கடங்களுமின்றி பிரதிபலிக்கலாம்.

பளீச் பதில்கள் :

பளீச் பதில்கள் :

எந்த யோசனையுமின்றி...திட்டங்களுமின்றி மனதில் தோன்றியதை எளிதாக நட்பிடம் பகிர்ந்து கொள்ள முடியும். என்ன நினைத்திருப்பாரோ என்ற சங்கடங்கள் இருக்காது. எளிதாக கையாளக்கூடிய ஓர் உறவு நம்மை தட்டிக்கொடுத்து, அரவணைத்துச் செல்லும்.

வாழ்கைப் பாடம் :

வாழ்கைப் பாடம் :

மகிழ்வான தருணம் மட்டுமே நட்பில் இருக்கும் என்று சொல்ல முடியாது கண்டிப்பாக சில சங்கடங்களையும் சந்தித்தாக வேண்டும், அதற்கான வருத்தப்படாமல் அது நண்பன் காட்டிய வாழ்க்கைப்பாடம் என்று எடுத்துக் கொண்டு நகர்ந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Should friends Do in our life

Importance Of Friendship in our life.
Story first published: Saturday, August 5, 2017, 11:55 [IST]