Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!
சிவனுடன் புணர்ந்து விஷ்ணு கருவுற்ற போது என்ன ஆனது தெரியுமா?
சிவனுடன் புணர்ந்து விஷ்ணு கருவுற்ற போது என்ன ஆனது என தெரியுமா? ஐயப்பனின் பிறப்பு பற்றி நீங்கள் அறியாத கதை!
சிவனும், விஷ்ணுவும் புணர்ந்து அதன்பால் விஷ்ணு கருவுற்றார் என சில கதைகளில் நாம் படித்தறிய முடிகிறது. அதெப்படி ஆணும், ஆணும் புணர்ந்து கருவுற முடியும் என சிலர் கேள்விகள் எழுப்பலாம்.
ஆனால், விஷ்ணு எடுத்திருந்த மோகினி அவதாரத்தில் இருந்து சிவனுடன் இணைந்தே அவர் கருவுற்றார் என ஆன்மீக கதைகளில் கூறப்படுகிறது.
இப்படியாக இவர்கள் இருவருக்கும் பிறந்த கடவுள் தான் ஐயப்பன் என்ற கூற்றும் கூறப்படுகிறது.

அர்த்தனாரி!
தானும், தனது துணை பார்வதின் உடலுடனும் இணைந்து சிவன் அளிக்கும் தோற்றமே அர்த்தநாரி. இதன் மூலம் ஆண், பெண் சமநிலை தத்துவம் கூறப்படுவதாக ஆன்மீக வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

மோகினி அவதாரம்!
அரக்கர்களிடம் இருந்து அமுதத்தை அவர்களை ஏமாற்றி கைப்பற்றி வர கடவுள் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார்.

சிவன் கவர்தல்!
மோகினி அவதாரத்தில் இருந்து விஷ்ணு மீது சிவன் கவர்ச்சி அடைந்ததாகவும், மோகினியை நோக்கும் சிவனை கண்டு பார்வதி வெட்கி தலை குனிந்ததாகவும் கதைகளில் கூறப்பட்டுள்ளன.

கர்ப்பம்!
இந்த கவர்தல் மூலமாக, சிவனுடன் இணைந்து மோகினி கருவுற்றாள். இப்படியாக சிவன் மற்றும் விஷ்ணு அவதாரத்திற்கு பிறந்தவர் தான் கடவுள் ஐயப்பன்.

குழப்பங்கள்!
இந்த கதைகளை சிலர் ஏற்கிறார்கள், சிலர் எதிர் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இன்றளவும் ஐயப்பனின் பிறப்பு பற்றியும், சிவன் மூலம் விஷ்ணு மோகினி அவதாரத்தில் கருவுற்றது குறித்தும் பல குழப்பங்கள் நிலவி வருகிறது.

ஓரினச்சேர்க்கை!
இன்று மக்கள் ஓரினச்சேர்க்கையை தகாத வகையில் நோக்கினாலும், நமது புராண, ஆன்மீக கதைகளில் இதைப் பற்றி பல கதைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆயினும், மனம் ஒவ்வாத காரணத்தால் பலரும் ஓரினச்சேர்க்கையை ஏற்க மறுக்கிறார்கள்.
ஆண் பெண் காதலாக இருக்கட்டும், ஆண் ஓரினச்சேர்க்கை, பெண் ஓரினச்சேர்க்கையாக இருக்கட்டும் அனைத்தும் அன்பின் வெளிபாடே ஆகும்!



Click it and Unblock the Notifications