Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
விலைமாதுவிடம் பாடம் கற்ற சுவாமி விவேகானந்தர் - அறியா கதைகள்!
விலைமாதுவிடம் பாடம் கற்ற சுவாமி விவேகானந்தர் - அறியா கதைகள்!

இளம் வயதிலேயே மிகுந்த அறிவாற்றலும் ஞானமும் பெற்று சிறந்து விளங்கிய ஞானி சுவாமி விவேகானந்தர். இளைஞர்களால் பெரும் எழுச்சி உண்டாகும் என அன்றே கூறியவர் விவேகானந்தர். ஆன்மீக நுண்ணறிவு, உற்சாகமான வாதம் மற்றும் கவர்ந்திழுக்கும் பேச்சுப் போன்றவை சுவாமி விவேகானந்தரின் சிறப்பம்சனகளாக இருந்தன.
எவ்வாளவு பெரிய ஞானியாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும், அவர்கள் வாழ்வின் முக்கியமான பாடங்களை மிக எளிமையானவர்களிடம் இருந்தே கற்றிருப்பார்கள். அப்படி தான் சுவாமி விவேகானந்தரும், தன் வாழ்வின் முக்கியப் பாடத்தை ஒரு விலைமாதுவிடம் இருந்து கற்றார்.
அந்த பாடம் என்ன? எப்படியான சூழலில் சுவாமி விவேகானந்தர் அந்த பாடத்தை விலைமாதுவிடம் இருந்து கற்றார் என்பது குறித்து இந்த கட்டுரை மூலமாக அறிந்துக் கொள்வோம்...

சந்நியாசி
சுவாமி விவேகானந்தர் ஒரு சிறந்த சந்நியாசி. இவர் உலகுக்கு காதல், அன்பு, அமைதி மற்றும் புரிதல் குறித்து எடுத்துரைத்துள்ளார். ஆனால், சுவாமி விவேகானந்தருகே காதல் மற்றும் இணைப்பு குறித்து ஒரு விலைமாது பாடம் எடுத்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஜெய்பூர்!
சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் சிறிது காலம் ஜெய்ப்பூரில் தங்கியிருந்தார். அப்போது ஜெய்பூர் மகாராஜா ஒரு பெரும் நடன விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் பங்குக்கொள்ளுமாறு சுவாமி விவேகானந்தருக்கும் அழைப்புவிடுத்திருந்தார்.

விலைமாது
தான் ஏற்பாடு செய்திருந்த அந்த நடன விழாவில் கலந்துக் கொள்ள பலதரப்பட்ட மக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் ஜெய்பூர் அரசர். சுவாமி விவேகானந்தர் பங்குடுத்துக் கொள்ளவிருந்த அதே விழாவில் ஒரு பிரபலமான விளைமாதுவும் பங்குபெறவிருந்தார்.

தவறு
விழா துவங்கிய சிறிது நேரத்திலேயே தனது தவறை உணர்ந்தார் ஜெய்பூர் அரசர். ஒரு சந்நியாசி பங்கு பெற்றுள்ள இந்த விழாவில் விலைமாது பங்குபெறுவது சரியானதாக இருக்காது என்பதை அறிந்தார். ஆனால், அரசர் சற்று தாமதமாகவே இதை அறிந்தார். அவர் ஏற்கனவே விலைமாதுவை அழைத்துவிட்டார். மேலும், விலைமாது அங்கு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டிருந்தது.

இளம் வயது...
அப்போது சுவாமி விவேகானந்தர் மிகவும் இளம் வயது சந்நியாசியாக இருந்தார். தான் பெங்குபெற்றுள்ள நடன விழாவில் விலைமாது பங்குபெற்றுள்ள செய்தி அறிந்து மன குழப்பத்திற்கு ஆளானார் விவேகானந்தர். முழுமையான சந்நியாச நிலை அடைந்திருந்தால், இது பெரும் மாற்றத்தை உணர செய்திருக்காது.

ஆசை!
சுவாமி விவேகானந்தர் தனது ஆசைகளை அடக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்த விழா நடந்து வந்த இடத்தில், ஒரு அறையில் தன்னைத் தானே பூட்டிக் கொண்டார். மேலும், அந்த அறையில் இருந்து வெளிவர மறுத்துவிட்டார். பலரும் அழைத்தும், சுவாமி விவேகானந்தர் அந்த பூட்டிய அறையில் இருந்து வெளிவரவே இல்லை.

மன்னிப்பு!
ஜெய்பூர் அரசர் சுவாமி விவேகானந்தர் பூட்டிக் கொண்ட அறையின் அருகே வந்து அவரிடம் மன்னிப்புக் கோரினார். ஓர் சந்நியாசி பங்குபெறும் விழாவில் எத்தகைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை நான் அறியேன் என்றும். நீங்கள் வந்து அழைக்கப்பட்ட நடன கலைஞர்களை சந்திக்க வேண்டும் என்றும் கோரினார்.

பதட்டம்!
சுவாமி விவேகானந்தரின் பதட்டம் அவரது முகத்திலேயே தெரிந்தது. (சுவாமி விவேகானந்தர் பூட்டிய அறையைவிட்டு வெளியே வரவே இல்லை.) அந்நேரம் விழாவில் இருந்த விலைமாது ஒரு பாடலை பாடத் துவங்கினார். அந்த பாடலின் பொருளானது, உன்னை போலவே நானும், நானாக சாதாரணமாக தான் இருக்கிறேன். நீ உன் மனதின் எண்ணங்கள் கொண்டு அச்சம் கொள்ள தேவையில்லை, என்பதாக இருந்தது.
சுவாமி விவேகானந்தரின் அச்சத்திற்கு காரணம் அந்த விலைமாது அல்ல, அவரது மனதில் ஏற்பட்ட குழப்ப எண்ணங்களே ஆகும்.

கதவுகள் திறந்தன...
விலைமாதுவின் பாடல் வரிகளின் அர்த்தம் புரிந்து சுவாமி விவேகானந்தர் தான் பூட்டிய அறைகளின் கதவுகளை தானே திறந்து வெளியே வந்தார். மேலும், அந்த விலைமாதுவை நேரில் கண்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், அந்த விலைமாதுவிடம் தூய்மையான மனது இருக்கிறது. அவர் அலட்சியத்தின் உண்மை பொருள் என்ன என்பதை தனக்கு தெளிவாக புரியவைத்துவிட்டார் என்றும் சுவாமி விவேகானந்தர் கூறினார்.

வெற்றி!
விலைமாதுவுடனான இந்த சந்திப்புக்கு பிறகு சுவாமி விவேகானந்தர் மிகவும் தைரியாமாக்வும், அச்சம் இன்றியும் மாறினார். நம் அனைவருக்குள்ளும் இதுப் போன்ற ஆசைகளும், அந்த ஆசைகள் சார்ந்த அச்சங்களும் இருக்கும். முதலில் அந்த ஆசைகளை பூட்டி வைக்காமல் திறந்துவிட வேண்டும். பிறகு, நமது மனதை திறந்தபடியாக வைத்திருக்க வேண்டும். இது தேவையற்ற ஆசைகளை நம்மைவிட்டு வெளியேறவும், தேவையான வாய்ப்புகளை தவறவிடாமல் இருக்கவும் உதவும்.
ஒரு வாய்ப்பு அல்லது சூழலை எதிர்கொள்ளாமல், அதில் வெற்றிப்பெற யார் நமக்கு சிறந்த வகையில் உதவுவார்கள் என நம்மால் அறியமுடியாது.



Click it and Unblock the Notifications











