ஓவியாவின் இந்த 6 செயல்களை என்றாவது பிக் பாஸில் கவனித்துள்ளீர்களா?

Posted By:
Subscribe to Boldsky

ஓவியா தும்மினால் கூட அதை ஒரு வேதவாக்காக சமூக தளங்களில் பகிரும் அளவிற்கு ஓவியா ஆர்மி படுஜோராக வேலை செய்து வருகிறார்கள்.

விளையாட்டாக வெறும் ஹாஷ்டாக்காக ஆரம்பமான ஓவியா ஆர்மி, இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் ஃப்ளக்ஸ் போர்டுகளாக உருமாறி இருக்கின்றன. புரட்சி படைகள் வேறு ஆரம்பமாகியிருக்கின்றன.

சரி இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ஓவியாவிற்கு இவ்வளவு பெரிய ஆர்மி உருவாக முக்கிய காரணம் அவரது பண்பும், குணங்களும் தான்.

"எனக்கு சூசூ வருது போறேன்...", "நீங்க கொஞ்சம் ஷட்டப் பண்ணுங்க" என்பதில் ஆரம்பமானது, "உங்க பேரு என்னால கெடக் கூடாது..." என நிஜமாவே வாழ்க்கையில் ஒரு தத்துவமாக நிற்கும் அளவிற்கு மாறியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா உதிர்த்த சில தத்துவங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழுகை!

அழுகை!

எண்ணி"ஒரு விஷயத்துக்கு ஒரு தடவ அழுதுட்டா, அதுக்காக திரும்பவும் அழுக கூடாது."

ஒரு செயலை எண்ணி, எண்ணி பலமுறை அழுவது வேஸ்ட் ஆப் டைம். ஆம்! முதல் முறை இயல்பாக, இயற்கையாக இருக்கலாம். மீண்டும், மீண்டும் அழுவது உங்கள் நேரம், வலிமை, ஆரோக்கியத்தை கெடுக்குமே தவிர, எந்த நன்மையையும் விளைய செய்யாது.

சோகம்!

சோகம்!

"எல்லாருக்குள்ளேயும் தான் சோகம் இருக்கு, அதை வெளிப்படுத்தி காட்டிட்டே இருக்கக் கூடாது"

என் சோகம் பெரியது, அவன் சோகம் சிறியது என எதுவும் இல்லை. அதே போல, சோகமே இல்லாத ஜீவனே இந்த உலகில் இல்லை. எல்லாரும் சுவாசிப்பது போல, எல்லாரிடமும் சோகங்கள் இருக்கின்றன. அதை வெளிப்படுத்தி அனுதாபம் தேடுவது, உங்களை வலிமையற்றவராக மாற்றிவிடும்.

வழிமுறை!

வழிமுறை!

"சொல்றத சொல்ற மாதிரி சொன்னன எல்லாரும் கேட்பாங்க"

எந்த ஒரு விஷயத்தையும், யார் ஒருவர் தவறு செய்திருந்தாலும், அவரவர் வயது, அவரவர் முதிர்ச்சிக்கு ஏற்ப எடுத்து சொன்னால் அனைவரும் கேட்பார்கள். அடிமேல் அடி எடுத்து வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல...

கடுஞ்சொல்!

கடுஞ்சொல்!

"அவ நடிக்கிறவளாவே இருக்கட்டும், அதை இந்த நேரத்துல சொல்லி காயப்படுத்தனுமா?"

ஒருவர் தீயவராகவே இருப்பினும், அவர் நோய்வாய்ப்பட்டு அல்லது சோகமாக இருக்கும் போது அவரை குத்திக் காண்பித்து, அவர் என்றோ செய்த தவறை மீண்டும், மீண்டும் சொல்வது அநாகரிகமான செயலாகும்.

வலி!

வலி!

"உடம்புல இருக்க வலிய விட, மனசுல தான் வலி அதிகமா இருக்கும்..."

உடலில் ஏற்படும் வலி தற்காலிகமானது, மனதில் ஏற்படும் வலி நிரந்திரமானது. எனவே, முடிந்த வரை யார் மனதையும் காயப்படுத்தாமல் நடந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

மதிப்பை கெடுப்பது!

மதிப்பை கெடுப்பது!

"உங்க பேரு என்னால கெடக் கூடாது..."

யார் ஒருவருடைய பெயரும், மதிப்பும் குறைய நாம் காரணமாகிவிடக் கூடாது. இது நல்ல உறவுகள் மத்தியிலும் விரிசல் ஏற்பட காரணமாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Things To Learn From Oviya Quotes!

Six Things To Learn From Oviya Quotes!