400 ஆண்டுகால சாபம் நீங்கி கர்ப்பமான இளவரசி!

Posted By:
Subscribe to Boldsky

கண்ணகியின் சாபத்தில் மதுரை எரிந்தது என்ற கதை நாம் கண்டுள்ளோம். மகாபாரதம், இராமாயணம் போன்ற பல புராண கதை, இதிகாசங்களில் நாம் சாபம் பற்றி அறிந்துள்ளோம்.

ஆனால், கடந்த 17ம் நூற்றாண்டில் மைசூர் உடையார் அரச குடும்பத்திற்கு ஒரு பெண்ணால் கொடுக்கப்பட்ட சாபத்தால் அவர்கள் நானூறு ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்பட்டு வரும் கதை உங்களுக்கு தெரியுமா?

ஆம், போரில் வெற்றிக் கண்ட திருமலை ராஜாவின் இரண்டாம் மனைவியான அலமேலம்மா மீது ஆசைக் கொண்ட உடையார் அரசிற்கு அந்த பெண் கொடுத்த சாபத்தால் அரச குடும்பத்தில் கடந்த 400 ஆண்டுகளாக எந்த இளவரசியும் கர்ப்பம் அடையாமல் இருந்து வந்ததாக கருதப்பட்டு வருகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடையார் வம்ச அரசர்கள்!

உடையார் வம்ச அரசர்கள்!

14ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சிக்கு கீழ் இருந்த மைசூர் பகுதியை உடையார் வம்சத்தை சேர்ந்த அரசர்கள் தான் ஆட்சி செய்து வந்தனர்.

போர்!

போர்!

1610ல் விஜயநகர அரசின் பிரதிநிதியாக இருந்த திருமலைராஜாவின் ஆட்சிக்கு கீழ் இருந்த ஸ்ரீரங்கப்பட்டினத்தில் முதலாம் ராஜ உடையார் போர் நடத்தினார். இந்த போருக்கு பிறகு திருமலை ராஜா தனது மனைவிகளுடன் தலக்காடு எனும் ஊருக்கு குடிபெயர்ந்து சென்றார்.

நோய்!

நோய்!

இந்த காலகட்டத்தில் திருமலைராஜா நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். திருமலைராஜாவின் இரண்டாவது மனைவி அலமேலம்மா, மிகவும் அழகானவர். இவர் மீது ஆசைக் கொண்டார் உடையார் மன்னர். இதனால் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கருதப்படும் அலமேலம்மா, இறக்கும் முன்னர் மூன்று சாபங்கள் கொடுத்துள்ளார்.

மூன்று சாபம்!

மூன்று சாபம்!

தலக்காடு மணல்மேடாக வேண்டும், ஆற்றில் சுழல் ஏற்பட வேண்டும். உன் அரச வம்சத்தில் இனிமேல் யாருக்கும் வாரிசு பாக்கியம் கிடைக்கக் கூடாது என மூன்று சாபங்களை அலமேலம்மா உடையார் அரச வம்சத்திற்கு கொடுத்து இறந்ததாக கருதப்படுகிறது.

இவரது சாபத்தை போன்றே, அன்று முதல் உடையார் வம்சத்திற்கு வாரிசு பாக்கியமே இல்லாமல் போனது. இதனால், தத்தெடுத்து பிள்ளைகள் வளர்த்து வந்தனர் உடையார் அரச குடும்பத்தினர்.

கிருஷ்ண தத்த சாமாராஜ உடையார்!

கிருஷ்ண தத்த சாமாராஜ உடையார்!

உடையார் வம்சத்தின் கடைசி மன்னராக இருந்த சாமாராஜ உடையார் மகன் ஸ்ரீகண்டதத்த நரசிம்ம ராஜ உடையார் இளவரசராக இருந்து வந்தார். 2013ல் இவர் மரணமடைந்தார். இவருக்கு பிறகு, தூரத்து உறவினரான யதுவீர் கிருஷ்ண தத்த சாமாராஜ உடையார் இளவரசாக முடிசூடப்பட்டார்.

திருமணம்!

திருமணம்!

யதுவீர் உடையாருக்கும் ராஜஸ்தான் துங்கப்பூர் மன்னரின் வாரிசான இளவரசி திரிஷிகா குமாரி தேவிக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆனது. அலமேலம்மா சாபத்தின் தொடர்ச்சியாக இவர்களுக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் அரச குடும்பத்திற்கு இருந்து வந்தது.

கர்ப்பம்!

கர்ப்பம்!

ஆனால், ஜூலை மாதம் திரிஷிகா நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அலமேலம்மா உடையார் குடும்பத்திற்கு கொடுத்த சாபம் நீங்கியுள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.

இதனால் தசரா விழாவில் கர்ப்பமாக பங்கெடுக்கும் மூன்றாவது இளவரசி என்ற பெருமையை திரிஷிகா குமாரி தேவி பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mysore Queen Trishika Pregnant: Is Curse of Alamellamma on Royal Family Broken?

Mysore Queen Trishika Pregnant: Is Curse of Alamellamma on Royal Family Broken?