For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிளாஸ்டிக் பைகளால் விலங்குகளுக்கு உண்டாகும் ஆபத்து!!

பிளாஸ்டிக் பைகளால் உருவாகும் சுற்றுபுற சீர்கேடுகளை இங்க்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Ambikasaravanan
|

தினசரி நாம் மார்க்கெட் அல்லது ஷாப்பிங் செல்லும் போது பலர் பிளாஸ்டிக் பைகளுடன் உலா வருவதை பார்த்திருப்போம். எல்லா விதமான பொருட்களுக்கும் அதை போட்டு எடுத்து செல்ல நாம் பிளாஸ்டிக் பைகளையே தேர்ந்தெடுக்கிறோம். அது உணவு, உடை, அணிகலன் , ஆபரணம், தொடங்கி குழந்தைகளின் செருப்பு, ஷூக்கள் வரை நமக்கு எடுத்து செல்வதற்கும் தேவை இல்லாத சூழ்நிலையில் தூக்கி எரிவதற்கும் வசதியாக இருப்பதால் நாம் பாலிஸ்டிக் பைகளை பயன்படுத்த தயங்குவதில்லை.

வீட்டிற்கு பொருட்கள் வாங்கி வந்தவுடன் அந்த பைகளை பத்திரமாக சேர்த்து வைப்போம் நமது அடுத்த முறை பயணத்திற்கு...அல்லது குப்பை தொட்டிகளில் போட்டு விடுவோம். இவ்வாறு பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பது தவறு என்பது நம்மில் பலருக்கும் தெரியும் .

Impacts of plastic bags on Environment

ஆனாலும் நாம் தொடர்ந்து இதனை செய்து வருகிறோம். பிளாஸ்டிக் பைகளினால் ஏற்படும் தீமைகள் பற்றிய தொகுப்புகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. இவற்றை படித்தபின் நம்மில் சிலர் இதன் பயன்பாட்டை குறைத்தாலே அது நமது இருப்பிடத்திற்கு நாம் செய்யும் நன்மையாகும் .

2008 ஒலிம்பிக்கிற்கு முன்பே சீனா மெல்லிய பைகளுக்கு தடை விதித்தது. இது சுற்று சூழலுக்கு செய்த ஒரு மிக நல்ல செயலாக பார்க்கப்பட்டது. அதனை பார்த்து பல ஐரோப்பிய நாடுகள் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் அதன் பயன்பாட்டில் சில விதமான வரிகளை விதித்தன. இந்தியாவில் கூட சில நகரங்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தன. சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் பெரிய கடைகளில் வாங்கும் பொருட்களுடன் பிளாஸ்டிக் பைகள் வாங்கும் போது கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தொடர்ந்தவுடன் மக்கள் கொஞ்சம் மாற தொடங்கினர். வீட்டில் இருந்து துணி பைகள் கொண்டு செல்ல ஆரம்பித்தனர் .

பிளாஸ்டிக் பையின் பயன்பாடு சுற்று சூழலை அதிகமாக பாதிக்கிறது. ஒரு சிறிய பிளாஸ்டிக் பை மக்கி மண்ணில் மறைவதற்கு 1000 ஆண்டுகள் ஆகிறது.

இந்த பைகள் சுற்றுச்சூழல்களில் நீண்ட காலம் தங்கியிருக்கின்றன, இதனால் இயற்கை நிலப்பரப்பு மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது (காகிதம் போன்ற பொருட்களை விட அதிக காலம் அழியாமல் இருக்கிறது.). இன்னும் தெளிவாக கூறுவதானால், எந்த அளவுக்கு பாலிஸ்டிக் பைகள் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு சுற்று சூழலின் சேதமும் இருக்கும்.

ஆஸ்திரேலியாவின் மரிரிக்வில் கவுன்சில் படி, ஒவ்வொரு வருடமும் 100,000 திமிங்கலங்கள், ஆமைகள் மற்றும் பறவைகள் இறக்கின்றன, அவைகளின் இறப்பிற்கு முக்கியமான காரணம், அவைகள் வாழும் சூழலில் பிளாஸ்டிக் இருப்பது தான். பிளாஸ்டிக் பைகள் நம் இயற்கையான வாழ்விடங்களில் மோசமான விளைவுகளை அதிகமாக ஏற்படுத்தவில்லை. ஆனால் பல விலங்குகளின் மரணத்திற்கு காரணம் இவைகள் தான். இதனை உயிரினங்கள் தெரியாமல் உண்பதன் மூலம் அவைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.

விலங்குகள் மட்டுமல்ல, சிறுவர்களும் குழந்தைகளும் கூட இந்த பிளாஸ்டிக் பையினால் உயிரிழக்கின்றனர். இந்த பைகள் பல வண்ண நிறத்தில், மெலிதாக இருப்பதால் சிறுவர்கள் விளையாட்டுகளில் இதனை பயன்படுத்துகின்றனர் . வீட்டில் பெரியவர்கள் கண்காணிப்பில் இல்லாதபோது, வாயில் அல்லது மூக்கில் கட்டி விளையாடும்போது காற்று புகுவதற்கு வாய்ப்பில்லாமல் மூச்சு திணறல் ஏற்படுகிறது .

பிளாஸ்டிக் பைகள் நீடித்த ஆயுளை கொண்டது. புறநகர் பகுதிகளில் நாம் பயணிக்கும் போது பெரிய பெரிய நிலப்பரப்புகளில் குப்பைகள் கொட்டி இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றுள் அதிகபட்சமாக பாலிஸ்டிக் பைகள் இருப்பதை நாம் பார்க்கலாம். இவைகள் எளிதில் மக்கி போகாமல் நிலப்பரப்பில் மாசு ஏற்படுத்துகின்றன.

பிளாஸ்டிக் பைகளுக்கு மக்கும் தன்மை இல்லாததால் அவற்றை அழிக்க நாம் அதனை எரிக்கிறோம் . இப்படி இவற்றை எரிப்பது, அதற்கு முந்தய நிலையை விட ஆபத்தானது. ஏனெனில் பாலிஸ்டிக் பைகளை எரிக்கும்போது உண்டாகும் புகை நச்சுத்தன்மை வாய்ந்தது இதன் மூலம் காற்று மாசுபடும் வாய்ப்புகள் அதிகம். .

பெட்ரோல் பொருட்களை பொதுவாக புதுப்பிக்க செய்வது சாத்தியமில்லாதது. பிளாஸ்டிக் பைகள் பெட்ரோலிய வேதி பொருட்களால் செய்யப்பட்டவை. ஆகையால் இவற்றை புதுப்பிக்க முடியாது. இவற்றை மறு சுழற்சி செய்து பயன்படுத்தலாம். ஆனால் காகிதங்கள் போல் எளிதாக செய்ய முடியாது.

ஒவ்வொரு வருடமும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு உலகம் முழுவதிலும் 500 பில்லியன் முதன் 1 டிரில்லியன் வரை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கையை குறைக்க நம்மால் ஆன செயல் நம் வீட்டில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது மட்டுமே. நாம் வாழ்ந்து முடித்த பிறகும் நாம் பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகள் இந்த பூமியில் இருந்து நமது சந்ததியை பாதிக்கும் என்பது நிச்சயமாக நல்ல செய்தி இல்லை!

English summary

Impacts of plastic bags on Environment

Impacts of plastic bags on Environment
Story first published: Thursday, August 24, 2017, 15:53 [IST]
Desktop Bottom Promotion