மதர்ஸ் டே அன்னைக்குதான் அம்மாக்கு கிஃப்ட் தரனுமா? எப்பவேணாலும் ஸ்பெஷலா இதெல்லாம் கொடுக்கலாமே!!

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

உலகில் எல்லா இடங்களிலும் கடவுள் இருக்க முடியாது, அதனால் தான் அவருக்கு பதிலாக அம்மாவை ஒவ்வொரு வீட்டிற்கும் கடவுளாக படைத்துள்ளார், என்று அனைவரும் கூறுவர். கடவுளுக்கு இணையான அம்மாவிற்கு

எல்லா நாளும் ஸ்பெஷல்தான்.

Homemade gifts to prepare for your mother

அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைத்தால் மிகவும் சந்தோஷப்படுவர்.

இங்கே, வீட்டிலேயே செய்யும் சில அற்புதமான சிறந்த பரிசு பொருட்களைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது நாம் அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரச் சாமான்கள்

மரச் சாமான்கள்

உங்கள் வீட்டின் சூப்பர் ஹீரோ என்றால் அது உங்கள் அம்மா தான். எந்த விதமான சூழ்நிலையையும் அவர்கள் எளிதில் கையாளுவார்கள். அதற்காக அவர்கள் சில பொருட்களை கைகளிலேயே வைத்திருக்க வேண்டியதாக இருக்கும். அதனை வைப்பதற்காக நீங்கள் ஒரு சிறிய மரத்திலானா கன்டெய்னர்களை வீட்டிலேயே செய்து கொடுத்தால் உபயோகமாகவும் இருக்கும் சந்தோஷமாகவும் இருக்கும்.

மரத்தால் ஆன மெனு கார்ட் (Menu Card)

மரத்தால் ஆன மெனு கார்ட் (Menu Card)

தன் குழந்தைக்குப் பிடித்த அனைத்து உணவுகளையும் ஒரு தாய் கண்டிப்பாக செய்து கொடுப்பாள். அந்த அம்மாவிற்கு நாம் மரத்தால் ஆன மெனு கார்டை செய்து கொடுத்தால் அதில் உங்களுக்குப் பிடித்த உணவுகளை எழுதி சமையல் அறையில் மாட்டி வைத்து பார்த்து சந்தோஷப்படுவார்கள்.

 வீட்டிலேயே செய்த போட்டோ ஃப்ரேம் (Photo Frame)

வீட்டிலேயே செய்த போட்டோ ஃப்ரேம் (Photo Frame)

கடையில் வாங்கிய ஒரு போட்டோ ஃப்ரேமில் புகைப்படங்களைப் போடவதற்கு பதில் வீட்டிலேயே ஒன்றை செய்து அதில் போட்டோக்களை போட்டு கொடுத்தால் நிச்சயம் உங்கள அம்மா சந்தோஷப்படுவார்கள்.

 அழகான பூ ஜாடி

அழகான பூ ஜாடி

வீட்டில் ஏதாவது பழைய பூ ஜாடி இருக்கிறதா? எனில் அவற்றிற்கு ஒரு புதிய தோற்றத்தை தரலாமே! அந்த பழைய பூ ஜாடிக்கு புதிய வண்ணம் தீட்டுவது, சிறிய கண்ணாடிகளை அதில் ஒட்டுவது, வண்ண காகிதங்கள் ஒட்டுவது போன்றவற்றை செய்து புதியதாக மாற்றி அதனை அன்னையர் தினப் பரிசாக உங்கள் அம்மாவிற்குக் கொடுத்தால் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்.

வீட்டிலேயே செய்த கார்ட்

வீட்டிலேயே செய்த கார்ட்

உங்கள் குடும்ப போட்டோ, அம்மாவின் போட்டோ அல்லது உங்கள் அம்மாவிற்குப் பிடித்த போட்டோக்கள் என பலவற்றை ஒன்று சேர்த்து ஒரு அட்டையில் ஒட்டி அழகுப்படுத்தி பரிசாகக் கொடுக்கலாம்.

வீட்டிலேயே செய்த மெழுகுவர்த்தி

வீட்டிலேயே செய்த மெழுகுவர்த்தி

வாசனை மெழுவர்த்திகள் உங்களுக்கு செய்யத் தெரிந்தால் உங்கள் அம்மாவை சந்தோஷப்படுத்த அதை விட வேறு எந்த பரிசும் தேவையில்லை. மெழுவர்த்தி செய்யத் தெரியாது என்றாலும் பரவாயில்லை.

உங்கள் வீட்டில் இருக்கும் பழைய மெழுவர்த்திகளை எடுத்து உருக்கி உங்களுக்கு பிடித்தமான அச்சு வடிவங்களில் ஊற்றி ஆற வைத்து எடுத்தால் அற்புதமான மெழுகுவர்த்தி தயார். அதையே நீங்கள் பரிசாகக் கொடுக்கலாம்.

 வாசனை சோப்புக்கள்

வாசனை சோப்புக்கள்

குடும்பத்தை கவனிக்கும் அக்கறையில் உங்கள் அம்மா அவர்களை அழகுப்படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்குவதில்லை. அதற்காக நாங்கள் கமோமில் அல்லது லாவண்டர் சோப்பு தயாரிக்கப் பரிந்துரைக்கின்றோம். இந்த சோப்பு உங்கள் அம்மாவின் சருமத்தை மிருதுவாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளும். இந்த சோப்பை எப்படி செய்வதென்று இணையதளத்தில் பார்த்து செய்யுங்கள், எளிய முறை தான். ஆனால், உங்கள் அம்மா கண்டிப்பாக சந்தோஷப்படுவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Homemade gifts to prepare for your mother

Homemade gifts to prepare for your mother
Subscribe Newsletter