For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆட்டு தலை பரிமாறவில்லை என மனைவியை விவாகரத்து செய்த சவுதி ஆண்!

சவுதியின் விசித்திரமான விவாகரத்து வழக்குகள்!

|

சவுதி அரோபியாவில் பொதுவாகவே சட்டத்திட்டங்கள் கடுமையாக இருக்கும் எனிலும், பெண்களுக்கு என தனி சட்டங்கள் நிறைய இருக்கின்றன. பெண்கள் சில இடங்களுக்கு செல்ல தடை, சில செயல்களை செய்ய தடை என பல விஷயங்கள் நாம் படித்து, பார்த்து அறிந்திருப்போம்.

ஆனால், இல்லற வாழ்வில் விவாகரத்து என்பது அவர்களை மிகையாக சோதிக்கும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தலாக் கூறுவது ஒருபுறம் இருப்பினும். இந்த காரணத்திற்காக எல்லாம் விவாகரத்து செய்வார்களா? என வியப்படையும் வகையிலும் பல வழக்குகள் சவுதியில் நிகழ்ந்தேறியயிருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தன்னை முந்தி நடந்த...

தன்னை முந்தி நடந்த...

தான் கூற, கூற தன்னை முந்தி முன்னே நடந்து சென்ற செயலுக்காக சவுதி ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடந்துள்ளது.

நான் எனக்கு பின்னே வரும்படி பலமுறை எச்சரித்தும், தன் சொல்லை மீறி நடந்துக் கொண்ட காரணத்திற்காக விவாகரத்து செய்கிறேன் என அவர் கல்ப் செய்தி நிறுவனம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆட்டு தலை!

ஆட்டு தலை!

மற்றுமொரு விவாகரத்து வழக்கில். நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த போது, டின்னரின் போது மனைவி முதலில் ஆட்டு தலையை பரிமாறவில்லை என கூறி ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.

விருந்தினர் முன்னர் இந்த செயல் தன்னை அசௌகரியமான சூழலுக்கு தள்ளியது என காரணம் கூறி கணவர் விவாகரத்து விண்ணப்பித்துள்ளார், என அந்த மனைவி கூறியிருக்கிறார்.

கால் வளையம்!

கால் வளையம்!

தேனிலவிற்கு கால் வளையம் அணிந்து வந்த காரணத்தை குறிப்பிட்டு தனது மனைவியை விவாகரத்து செய்கிறேன் என மற்றுமொரு விவாகரத்து வழக்கும் நடந்துள்ளது.

அதிகாரிகள்!

அதிகாரிகள்!

இஸ்லாமில் திருமணத்தை நடத்தி வைக்கும் அதிகாரிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக திடீர் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன என கூறுகிறார்கள். இதற்கு பாரம்பரிய காரணங்கள், சமூக சட்டங்கள், மாடர்ன் தொழில்நுட்பம் போன்றவை காரணிகளாக திகழ்கின்றன என்றும் கூறியுள்ளனர்.

படிப்பினை!

படிப்பினை!

சவுதி அரேபியாவை சேர்ந்த கன்சல்டன்ட் ஒருவர், குடும்பத்தில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள், பெரியவர்கள், இளைய தலைமுறைக்கு இல்லறம் மற்றும் வாழ்வியல் குறித்து நிறைய கற்பிக்க வேண்டும். மனோரீதியான, சமூக ரீதியான, மத ரீதியான கல்வியை, அறிவை அவர்களுக்கு புகட்டுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இதை கல்வியோடு இணைத்து கற்பித்தால் தான் வரும் நாட்களில் மனைவி மற்றும் இல்லற வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bizarre Divorce Cases of Saudi!

Bizarre Divorce Cases of Saudi!
Desktop Bottom Promotion