Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
2 நிமிஷம் இருந்தா இந்த படங்கள கொஞ்சம் பார்த்துட்டு போகங்க...
மிக சிறந்த முறையில், அதீத கற்பனையில் பொது மக்களுக்கு நல்லதை எடுத்துரைத்த உலகின் சிறந்த விளம்பர படங்களின் தொகுப்பு!
நம்ம ஊரில் சிலருக்கு அட்வைஸ் செய்வதும் பிடிக்காது, அட்வைஸ் கொடுப்பதும் பிடிக்காது. அவர்களில் சிலர் தான் எத்தனை சிக்னலில் ஸ்பீட் லிமிட் போர்டு வைத்திருந்தாலும், அதை மீறி செல்பவர்கள், சிகரட் பாக்ஸில் புற்றுநோய் அபாயம் படம் பெரிய சைஸில் இருப்பதை கண்டும், புகைத்து தள்ளுபவர்கள்.
புகையும், குடியும், வேகத்தையும் தாண்டி நாம் என்னென்ன தவறுகள் செய்கிறோம். அதன் மூலம் எந்த பாவமும் அறியாத மற்றவர்கள் எந்தெந்த வகையில் எல்லாம் பாதிப்படைகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
2 நிமிஷம் இருந்தா இந்த படங்கள கொஞ்சம் பார்த்துட்டு போகங்க...

புகை!
விளம்பர நிறுவனம்: Advertising Agency: Euro RSCG Australia.
புகை நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்பதை எத்தனை முறை திரைப்படங்களின் டைட்டில் கார்டில் போட்டு காண்பித்தாலும். பிடிக்கும் சிகரட் பெட்டியின் முன்புறத்தில் பெரிதாக படம் போட்டு காண்பித்தாலும், விலையை அதிக ஜி.எஸ்.டி வரியிட்டு உயர்த்தினாலும், புகைப்பவன் புகைத்து கொண்டே தான் இருக்கிறான். புகைப்பதால் உங்கள் உடலின் ஏஜிங் செல்கள் சீக்கிரம் வயதாகிறது. இதனால் நீங்கள் கடைசி வரையில் இளமையாக இருக்கலாம். காரணம், இளம் வயதிலேயே நீங்கள் மரணித்து விடுவீர்கள் என்பதை உணர்த்தும் விளம்பரம்.
Image Source: boredpanda

சீட் பெல்ட்!
விளம்பர நிறுவனம்: Lg2, Quebec, Canada.
பிறப்பை நமது பெற்றோர் தீர்மானிக்கிறார்கள். இறப்பை நாம் தான் தீர்மானிக்கிறோம். நீங்கள் முடிவு செய்துவிட்டால் அடுத்த நொடியே கூட இறந்துவிடலாம். நீங்கள் முடிவு செய்தால் உங்களை விரட்டி வரும் மரணத்தையும் ஓட விரட்டலாம். உங்கள் மரணத்திற்கு உங்கள் சீட் பெல்ட்டையே சீல் வைத்துவிடாதீர்கள் என்பதை உணர்த்தும் விளம்பரம்.
Image Source: boredpanda

விலங்குகள்!
விளம்பர நிறுவனம்: LOWE GGK, Warsaw, Poland.
விலங்குகளை கொண்டு, அவற்றின் தோல், எலும்பு, உறுப்புகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்காதீர்கள். நீங்கள் வாங்குவது ஒரு பொருளை அல்ல. ஓர் கொலையின் விலையை. உங்கள் கையில் இருப்பது அழகான பொருள் அல்ல, இரத்தக்கறை படிந்த உடல் என்பதை உணர்ந்தும் விளம்பரம்.
Image Source: boredpanda

பெண்ணுரிமை!
விளம்பர நிறுவனம்: Ogilvy & Mather, Dubai, UAE.
பெண்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதெல்லாம் பொய். கோடி பேர் இருக்கும் ஊரில், ஆயிரம் பேரின் பசியாற்றினால் மட்டும் போதுமா? மற்றவர் நிலை. இப்படி தான் இருக்கிறது இன்றைய பெண்களின் சுதந்திரமும். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை மட்டும் கொண்டு அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதை கூறிட முடியாது. இன்றும், சமைக்கவும், சுகத்தை அளிக்கவும், வீட்டு வேலை செய்யவும் மட்டுமே பெண்களை ஒரு இரத்தமும், சதையும் கொண்ட மெஷினாக மட்டும் காணும் சமூகம் நிறைய இருக்கிறது. இதை வெளிப்படுத்தும் விளம்பரம் தான் இது.
Image Source: boredpanda

வினை விதைத்தவன்...
விளம்பர நிறுவனம்: Big Ant International, New York, USA.
வினை விதைத்தவன், வினை அறுப்பான்; திணை விதைத்தவன், திணை அறுப்பான் என்பார்கள். அதே போல தான் கத்தி எடுத்தவனுக்கு, கத்தியால் தான் சாவு என்ற வாக்கியமும். இது அரசர் காலம் முதல், கெத்தாக நினைத்துக் கொண்டு உலவும் ரௌடிகள் வரை பொருந்தும். கத்தி மட்டுமல்ல, சர்வாதிகாரம் செய்தவன், வேறு நாட்டில் துப்பாக்கி ஏந்தி நுழைந்தவன் அனைவருக்கும் அவரவர் கையாண்ட விதமே, விதியை விதைக்கும் என்பதை உணர்த்தும் விளம்பரம்.
Image Source: boredpanda

பெற்றோர் கையில்...
விளம்பர நிறுவனம்: Grey, Toronto, Canada.
தெறி படத்தில் கருவும் இதே தான். ஒருவன் ரௌடி ஆவதற்கும், ஒருவன் மாவட்ட ஆட்சியர் ஆவதற்கும், ஒருவன் போலீஸ் ஆவதற்கும், ஒருவன் திருடன் ஆவதற்கும் அவனது வளர்ப்பும், பெற்றோர் தான் காரணம். குழந்தையின் கையில் / கண்முன்னே புத்தகம் கொடுத்தல், வைத்தல்... அது படிக்கும். அதே குழந்தையுன் கையில் கத்தியோ, கத்தி குத்து நிகழ்வையோ காண்பித்தால், அது அதையே தான் செய்யும்.
எனவே, திருந்த வேண்டியது பெற்றோரே தவிர, குழந்தைகள் அல்ல.
Image Source: boredpanda

உணவுகள்!
விளம்பர நிறுவனம்: Clemenger BBDO, Melbourne, Australia.
பெத்தவளுக்கு தான் அந்த வலி தெரியும் என்பார்கள். அதே போல தான், உணவை உற்பத்தி செய்பவனுக்கு தான் உணவின் அருமை புரியும். என் பணம் கொடுத்து வாங்குகிறேன், அதன் சாப்பிடறேன், கொட்டுறேன், உனக்கு என்ன என்று சில திமிர் பேச்சுகள் சிலரிடம் இருந்து வெளிப்படும். நான் தான் பெத்தான், நானே கொல்றேன் என ஒரு கொலை செய்து பாருங்களேன், அரசு உங்களை சும்மா விட்டுவிடுமா? உணவும் அப்படி தான். உயிர் காக்கும் ஒரே கருவி உணவு. உணவு கிடைக்காமல் உலகில் எத்தனையோ பேர் தினம், தினம் மரணிக்கிறார்கள்.
Image Source: boredpanda

நுரையீரல் புற்றுநோய்...
விளம்பர நிறுவனம்: TBWAPARIS, France
கருங்கல் சிலைக்கு முக்கியத்துவம் அளித்து, ஆயிரம் ஏக்கர் நிலம் அழிக்கப்படுவதை பிரதமரே ஆதரிக்கும் நாடு இது. நாட்டை காக்கவே ஆளில்லை, காட்டை காக்க யார் வருவார் என்ற நிலையில் இருக்கிறோம். காடுகள் அழிந்தால், நாம் சுவாசிக்க தேவையான பிராணவாயு எப்படி கிடைக்கும் என்பதை நாம் யோசிப்பதே இல்லை. மரங்கள் உயிர்வால்ந்தால் தான், மனிதர்கள் உயிர் வாழ முடியும் என்பது சில மரமண்டைகளுக்கு புரிவதில்லை.
Image Source: boredpanda

உறக்கம்!
விளம்பர நிறுவனம்: BBDO Bangkok, Thailand.
நாம் விலையற்ற எந்த பொருளும் மதிப்பற்றது என்ற எண்ணம் கொண்டிருப்பதால், காட்டை அழிக்கிறோம், காற்றை அழிக்கிறோம், இப்போது நமது உறக்கத்தையும் அழித்து வருகிறோம். நிறுத்தாமல் வண்டி ஒட்டிக் கொண்டே இருந்தால், அதன் செயற்பாடு சீர்கெட்டுவிடும், அதே போல தான் உடலுக்கு சரியான ஓய்வளிக்காமல் உறக்கத்தை கெடுப்பது உங்கள் உடல் பாகங்களின் செயற்திறனை கெடுத்து உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.
Image Source: boredpanda

எதற்கு அவசரம்!
விளம்பர நிறுவனம்: Amélie Company, Denver, Colorado, USA.
விவேகம் இருந்தால் மட்டும் போதாது, வேகத்தையும் கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். பத்து மீட்டர் இடைவேளைவிட்டு வாருங்கள் என அனைத்து வாகனங்களின் பின்னாடியும் எழுதியிருக்கிறது. ஆனால், நாம் கேட்பதில்லை. வேகம் சுவாரஸ்யம் அளிக்கும், உயிரையும் பறிக்கும் என்பதை உணர்த்தும் விளம்பரம்.
Image Source: boredpanda

பிளாஸ்டிக் கவர்கள்!
விளம்பர நிறுவனம்: BBDO Malaysia, MALAYSIA, Kuala Lumpur / Advertising Agency: Duval Guillaume, Belgium.
இது எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை. பிளாஸ்டிக் கவர்கள் காரணமாக நமது மண் மட்டும் தான் மலடாகிறது என கருதுகிறார்கள். பிளாஸ்டிக் பாட்டில் நீர், பிளாஸ்டிக் லன்ச் பாக்ஸில் உணவு போன்றவை ஆண்களையும் மலடாக்குகிறது. இதற்கு எல்லாம் மேலாக, ஏதும் அறியாது நீர் மற்றும் நிலம் வாழ் உயிரினங்கள் பலவன பிளாஸ்டிக் கவர்களை உண்டு மடிகின்றன.
Image Source: boredpanda

சைஸ் ஸீரோ!
விளம்பர நிறுவனம்: Revolution Brasil.
சில வருடங்களுக்கு முன்னர் ஃபேஷன் உலகிலும், சினிமா உலகிலும் சைஸ் ஸீரோ என்பது பெரும் வியாதியாக இருந்தது. பல ஃபேஷன் மாடல்கள், ஒரு டின் பேக் கோக், கால்வாசி பிட்சா, பாதி ஆப்பிள் மட்டுமே தங்கள் ஒருநாளின் உணவாக கொண்டு தங்கள் உடலை சைஸ் ஸீரோவிற்கு குறைத்தனர். இதன் காரணமாக பல மாடல்கள் தங்கள் உயிரையே இழந்தனர்.
Image Source: boredpanda

ஒவ்வொரு நிமிடமும்...
விளம்பர நிறுவனம்: Scholz & Friends, Berlin, Germany.
ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு விலங்கு உயிரினம் அனாமத்தாக உயிரிழக்கிறது. எந்த காரணம் என தெரியாமல், நாம் செய்யும் செயல்களால்.
Image Source: boredpanda

கூகிள் மேப்!
விளம்பர நிறுவனம்: Red Pepper, Ekaterinburg, Russia.
நம்மில் பலர் தனியாக உலக நாடுகளுக்கு சென்று வர கூறினால், எந்த ஆட்சேபனை இன்றி கிளம்பும் அளவிற்கு தைரியம் கொண்டவர்கள். நம் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் மற்றும் இன்டர்நெட்டை பிடிங்கிவிட்டால்...? பக்கத்து ஊருக்கு கூட சென்று வர வழி தெரியாது. வாகனம் ஓட்டும் போது கூகிள் மேப் பார்ப்பது மட்டும் பத்தாது, இருபுறமும் யார் வருகிறார்கள், சாலையை கடக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
Image Source: boredpanda

சென்சார்!
விளம்பர நிறுவனம்: Memac Ogilvy & Mather Dubai, UAE.
எல்லா சமயங்களிலும் சென்சார்கள் உண்மையை கூறுவதில்லை, தவறுகளை மறைப்பதில்லை. பல சமயங்களில் சென்சார்கள் தவறான கருத்தை தான் உருவகப்படுத்துகிறது.
Image Source: boredpanda

பெங்களூர் போலீஸ்!
விளம்பர நிறுவனம்: Mudra Group, India.
உங்கள் துணை வாகனம் ஓட்டுகிறார் என தெரிந்தால், தயவு செய்து அழைப்பை துண்டித்துவிடுங்கள். அநாவசியமாக உயிருடன் விலையாக வேண்டாம். இழப்பு உங்களுக்கு தான்.
Image Source: boredpanda

புகையாளிகள்!
விளம்பர நிறுவனம்: JWT, Atlanta, USA.
கொலை செய்பவன் கூட ஒரு நேரத்தில் ஒருவரை தான் கொலை செய்கிறான். ஆனால், இந்த புகையாளிகள், அவர்கள் புகைக்கும் ஒரே நேரத்தில்... அவர்களை சுற்றி இருக்கும் பலரது உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறார்கள்.
Image Source: boredpanda

லைக் மட்டும் போதுமா?
விளம்பர நிறுவனம்: Publicis, Singapore.
இன்று பெரும் மனித நேயங்கள் ஃபேஸ்புக் லைக்ஸ்களில் மட்டும் தான் இருக்கிறது. ஓர் Sad ஸ்மைலி போடுவதால் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைத்துவிட போவதில்லை. சென்னை வெள்ளத்தின் போது பிற ஊர்களை சேர்ந்தவர்கள் வெறும் சோக ஸ்மைலி மட்டும் சொடுக்கி விட்டுருந்தால், இன்று சுவாசித்துக் கொண்டிருக்கும் பல உயிர்கள் மரணித்திருக்கும். எனவே, வெறும் லைக்ஸ் மட்டும் எந்த பயனும் அளிக்காது என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.
Image Source: boredpanda

தொழிற்சாலைகள்!
விளம்பர நிறுவனம்: Unknown
நமது உலகில் உயிரிழப்புக்கு வெறும் போர் மற்றும், துப்பாக்கி குண்டுகள் மட்டுமே காரணமல்ல. வளர்ச்சி என நாம் காணும் பலவன நமக்கு நாமே தோண்டி கொண்ட புதை குழிகளாக இருக்கின்றன. ஓராண்டுக்கு காற்றின் மூலமாக மாசு மட்டுமே அறுபது ஆயிரம் உயிர்களை பலி வாங்குகிறது. இதில் இந்தியாவின் டெல்லி மற்றும் பெங்களூருவும் முதன்மை இடம் பெற்றுள்ளது.
Image Source: boredpanda

வேகம்!
விளம்பர நிறுவனம்: Cramer-Krasselt, Milwaukee, USA.
உங்கள் வேகம், உங்கள் வீட்டாருக்கு சோகமாக அமைந்திட கூடாது. ஆக்சிலேட்டரை முறுக்கும் போது, மிதிக்கும் போதும்... உங்களை எதிர்நோக்கி வீட்டில் சில உயிர்கள் காத்திருக்கின்றன. நீங்கள் இல்லை எனில், அவர்கள் கதி என்ன ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Image Source: boredpanda



Click it and Unblock the Notifications











