For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுனாமியை தடுக்கும் சக்தி இந்த மரத்துக்குதான் உண்டு!! இதோட பேர் தெரியுமா உங்களுக்கு?

சங்ககால மகளிர், தலையில் சூடிய வாசனை வீசும் மலர்களில், மரா மலர்களும் ஒன்று, இராமாயண இதிகாசத்தில், வாலி வதம் நிகழும் காட்சியில், இடம்பெறுவது, இந்த மரா மரம்.

By Gnaana
|

திருமண வீடுகளில், தாலி கட்டும் வேளையில் கெட்டிமேளம், கெட்டிமேளம் என்று பெரியவர்கள் சைகை செய்யும்போது, உற்சாகத்துடன் இசைக்கும் தவிலுடன் ஒருமித்து, ஓங்கி ஒலிக்கும் நாதஸ்வர மங்கள இசையை, நாம் திருமண வீடுகளில் கேட்டிருப்போம். அன்றைய ஹீரோ ஹீரோயின்களாக மணமேடையில் இருந்த, பலருக்கும் அப்படி ஒரு வாழ்நாள் அனுபவம், இருந்திருக்கும்.

ஆனாலும், அன்று இருந்த பரவச மனநிலையில், பக்கத்தில் இருப்பவரின் சுவாசக் காற்றே, இனிய மங்கள இசையாக, இருந்திருக்கும், அதனால், இந்த இசையெல்லாம், அவர்கள் காதில் விழுந்திருக்காது. அவர்களின் அன்றைய அனுபவத்தைப் பற்றி, இன்று கேட்டால், நடுத்தர வயதினர் என்ன சொல்வார்கள் என்பதை, அனைவரும் ஓரளவு அறிந்திருப்பார்கள்.

Benefits of Sonneratia Apetala Buchham to keep environment pollution free

Image source

மரங்களைப் பற்றிய கட்டுரையில், நாதஸ்வரத்துக்கு என்ன வேலை, என்று யோசிக்காதீர்கள், இரண்டுக்கும் வலுவான தொடர்பு இருக்கிறது. அதை நாம் தொகுப்பின் இடையே, அறிந்து கொள்ளலாம்.

சற்றே நீளவாக்கில் அமைந்த பெரிய இலைகளுடன், அதிக பட்சம் முப்பது அடி உயரம் வரை வளரும் இயல்புடையவை, மரா மரங்கள். மரா மரத்தின் மலர்கள் நறுமணத்துடன், வெளிர் சிவப்பு வண்ணத்தில் காணப்படும். இந்த மரத்தின் பழங்கள் சிறிய வட்ட வடிவில் காணப்படும், பழங்களைத் தாங்கும் வெளிக் காம்புகள், இவை நீரில் மிதந்து சென்று, நீரோட்டம் தடைப்படும் இடங்களில், முளைத்து வளரும் இயல்புடையவை. மரத்தின் சுவாசம், வேர்களின் மூலமே நடைபெறுகிறது. வேர்கள், கூரான, தக்கை போன்ற குத்து வேர்களை, செங்குத்தாக உருவாக்கி, அதன் மூலம், மரத்தின் வளர்ச்சி அமையும்.

சங்ககால மகளிர், தலையில் சூடிய வாசனை வீசும் மலர்களில், மரா மலர்களும் ஒன்று, இராமாயண இதிகாசத்தில், வாலி வதம் நிகழும் காட்சியில், இடம்பெறுவது, இந்த மரா மரம். பல்லாயிரம் ஆண்டுகள், தொன்மையான மரம், இந்த மரா மரம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்மீகத்தில் மரா மரம் :

ஆன்மீகத்தில் மரா மரம் :

திருஞானசம்பந்தர், சைவ சமயக்குரவர்களில் இளையவரான இவருக்கு, திருமணத்தில் நாட்டமில்லாமல் இருந்து, பெரியோர் விருப்பத்திற்காக, மணமுடித்த உடனே, திருமணத்திற்கு வந்திருந்த அத்தனை பேருடன், தானும் தன் புது மனைவியுடன், சிவஜோதியில் கலந்த ஊர், ஆச்சாள்புரம் என்று இன்று அழைக்கப்படும், சிதம்பரத்துக்கு அருகில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும்.

தொன்மையான நாட்களில் அங்கு, ஆச்சாள் எனும் மரங்கள் பரவலாக வளர்ந்திருந்த காரணத்தினால், மரங்களின் பெயரால் ஊரை அழைக்கும் அக்கால வழக்கப்படி, ஆச்சாள்புரம் என்று அழைக்கப்பட்டது.

நாதஸ்வரத்துக்கு ஆச்சாள் மரம் :

நாதஸ்வரத்துக்கு ஆச்சாள் மரம் :

தமிழ் பக்தி உலகில் தவிர்க்க முடியாத ஒரு இடம், மங்கள இசைக்கு உண்டு, திருக்கோவில்களில், தீபாராதனை, சுவாமி புறப்பாடு மற்றும் விஷேசங்களில், நாதஸ்வரம் கட்டாயம் இருக்கும். பெரிய கோவில்களில், நிரந்தரமாக, நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்கள் இருப்பார்கள். திருவிழாக்கள், இந்து சமயத் திருமணங்கள், வைபவங்கள் போன்ற விழாக்களிலும், நாதஸ்வரம் முக்கிய இடம் பிடிக்கும்.

இப்படி பழம்பெருமை உள்ள நாதஸ்வரம், ஆச்சாள் மரத்தில் இருந்துதான், இன்று வரை தயாரிக்கப்படுகிறது, என்பதுதான், ஆச்சரியம். நாதஸ்வரத்தோடு, தேர்களின் சக்கரத்துக்கும், வீடுகளில் அலங்கார வேலைகளுக்கும், அக்காலங்களில், ஆச்சாள் மரங்களே, பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

எங்கே காணப்படும் ?

எங்கே காணப்படும் ?

குடந்தையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள நரசிங்கன்பேட்டை எனும் கிராமத்தில், இன்றும் நாதஸ்வரங்கள், ஆச்சாள் மரத்தில் இருந்தே, செய்யப்படுகின்றன. நாதஸ்வரத்துடன், குழல் வீணை எனும் வாத்தியமும், இன்னும் சில பழங்கால வாத்திய இசைக் கருவிகளும், ஆச்சாள் மரத்தில் இருந்தே, செய்யப்படுகின்றன. அந்த ஆச்சாள் மரமே, தில்லை மரம் என்றும் மரா மரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில், தல மரமாகத் தில்லை மரமே, திகழ்கிறது. சிதம்பரம் நகரம், தில்லை வனம் என்று அக்காலத்தில் அழைக்கப் பட்டதற்குக் காரணம், நகர் முழுவதும், வளர்ந்திருந்த தில்லை மரங்களின், காரணத்தினால் தான். இன்று, தில்லை மரங்கள், நகரில் இல்லை. அவை யாவும், சிதம்பரம் நகரை விட்டு, சற்று தொலைவில், உலகின் இரண்டாவது பெரிய மாங்குரோவ் காடுகள் எனும் அலையாத்திக் காடுகளில், அதிக அளவில் காணப்படுகின்றன.

அலையாத்திக் காடுகளில் ஆச்சாள் மரம்.

கடலும், சமவெளிகளும் சேரும் இடங்களில் தோன்றும் சதுப்பு நிலங்களில் வளரும் தன்மையுள்ளவை, ஆச்சாள் மரங்கள். கடல் நீரும், சமவெளியும் கலக்கும் இடத்தில் வளரும், இந்த மரங்கள், கடல் நீரில் இருந்து நன்னீரைப் பிரித்து எடுத்து, அதன் மூலம் உயிர் வாழும் தன்மை மிக்கவை.

கடல் நீர், நிலத்தை அரித்து முன்னேறாத வண்ணம், கடற்கரையோரங்களில் உள்ள பேக் வாட்டர் எனும் நீர்ப்பரப்பை முற்றிலும் ஆக்ரமித்து, ஆயிரக்கணக்கான ஆச்சாள் மரங்கள், அவற்றின் தக்கை போன்ற குத்து வேரோடு, கடல் அரிப்பைத் தடுத்து, நிலப்பரப்பைக் காத்து வருகின்றன.

அடர்ந்து, வளர்ந்து வரும் ஆச்சாள் மரம் எனும் மரா மரங்களே, கடலில் ஏற்படும் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களில் இருந்து மனிதர்களைக் காக்கக் கூடியதாகும். கடந்த 2004 சுனாமியின் போது, கடற்கரையோர மக்களைக் காத்தது, இந்த அலையாத்திக் காடுகளும், அதில் உள்ள மரா மரங்கள் போன்ற அரிய மரங்களும்தான்.

தில்லை மரங்களின் பயன்கள்:

தில்லை மரங்களின் பயன்கள்:

தில்லை மரங்கள் எனும் ஆச்சாள், மரா மரங்கள், குழந்தையின்மை பாதிப்பைப் போக்கும் தன்மை மிக்கவை. இவற்றின் இலைகள், மரப் பட்டைகள், கடுமையான சரும வியாதிகளுக்கு மருந்தாகின்றன. சிறுநீரகக் கோளாறுகள், குழந்தைகளின் வயிற்று பாதிப்புகள் போன்றவற்றுக்கு, சிறந்த மருந்தாகத் திகழ்கின்றன.

சுற்றுச்சூழலுக்கு நன்மைகள் செய்யும் மரா மரங்கள்:

சுற்றுச்சூழலுக்கு நன்மைகள் செய்யும் மரா மரங்கள்:

மரா மரங்கள், காற்றில் உள்ள மாசுகளை உள் இழுத்து, ஆக்சிஜனை அதிக அளவில், வெளியேற்றக் கூடியவை. இந்த மரங்கள் பரவலாக வளரும் இடங்களில், உள்ள மக்கள், சுத்தமான கற்றை சுவாசித்து வருவதன் மூலம், வியாதிகள் அணுகாமல், உடல் நலம் பெற்று வாழ்கிறார்கள்.

அலையாத்திக் காடுகளின் அருகே வசிக்கும் மீனவர்களின் உடல் நலத்தைப் பேணிக் காப்பதில், அலையாத்திக் காடுகளுக்கும், காட்டில் உள்ள மரா மரங்களுக்கும் பெரும் பங்கு உள்ளன, என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

ஜோதிடத்திலும் :

ஜோதிடத்திலும் :

ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொருவருக்கும் ஒரு நட்சத்திரங்கள் என்று குறிப்பார்கள், அப்படி குறிக்கும் நட்சத்திரங்களுக்கு என்று, தனியே மரங்கள் உண்டு. அந்த மரங்களை, குறிப்பிட்ட நட்சத்திரக் காரர்கள், முறைப்படி பூஜிக்க, நட்டு வளர்த்து வர, அநேக நன்மைகள் கிடைக்கும், என்கிறது ஜோதிடம். அப்படி மூல நட்சத்திரத்துக்கு உரிய மரமாகக் குறிப்பிடப் படுவது, மரா மரமாகும்.

 மண் அரிப்பை தடுக்கும் :

மண் அரிப்பை தடுக்கும் :

நிலப்பகுதியைக் காத்து, மனிதர்களின் உடல் நலத்தையும் காக்கும், மரா மரங்களை, மூல நட்சத்திரக்காரர்கள் மட்டும்தான் என்றில்லாமல், வாய்ப்பு கிடைப்பவர்கள் எல்லாம், வீடுகளில், தோட்டங்களில், ஆற்றங்கரையோரங்களில் வளர்த்து வர, உடல் நலம் பெற்று நலமுடன் வாழலாம்.

அத்துடன், நீர்நிலைகளின் கரைகளில், மண் அரிப்பு ஏற்படாமல் தடுத்து, மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு போன்ற, இயற்கைப் பேரிடர்களையும் களைய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of Sonneratia Apetala Buchham to keep environment pollution free

Benefits of Sonneratia Apetala Buchham to keep environment pollution free
Story first published: Thursday, November 30, 2017, 15:23 [IST]
Desktop Bottom Promotion