Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இந்திய மருத்துவ உலகை கதிகலங்க வைத்த சில திகைப்பூட்டும் நோய்கள்!!!
இன்னமும் கூட கண்டறியப்படாத நோய்களும், பெயரிடப்படாத நோய்களும், மருந்துகள் இல்லாத நோய்களும் பலவன இருக்கின்றன. சில மேலாதிக்க நாடுகள், ஏழை நாடுகள் மீது தாங்கள் உருவாக்கிய வைரஸை பரப்பி மருத்துவத்தில் பெரும் வர்த்தகம் செய்து வருவது ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால், இவைக்கெல்லாம் வேறுபட்டு, பிறவியிலேயே சில வினோதமான குறைபாடுகளோடு பிறக்கும் குழந்தைகள் மற்றும் அந்த குறைபாடுக்கான தீர்வு போன்றவை நீண்ட காலம் விடையற்ற கேள்வியாக இருந்திருக்கிறது நமது நாட்டில். அவ்வாறான மக்களில் சிலருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடுகள் திகைப்பூட்டும் விதத்திலும், இந்திய மருத்துவ உலகை கதிகலங்க வைத்தும் இருக்கிறது...

ராஜஸ்தான் மக்களுக்கு ஏற்பட்ட வினோத புழு தாக்கம்
கடந்த 1980-களில் ராஜஸ்தான் மக்களுக்கு அவர்களது உடலில் இருந்து நீளமான புழுக்கள் வெளிவரும் வினோத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் "Dracunculiasis" என்று குறிப்பிடுகிறார்கள். அசுத்த நீரை பயன்படுத்தியதால், இந்த பாதிப்பு ராஜஸ்தான் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
Image Courtesy

இரத்த கண்ணீர் வடித்த சிறுமி
லக்னோ பகுதியை சேர்ந்த ட்விங்கிள் விவேதி எனும் சிறுமிக்கு இரத்த கண்ணீர் வந்து கொண்டிருந்தது. பெயர் அறியப்படாத நிலையில் இருந்தது இந்த குறைபாடு. பின்னாளில் இது " Haemolacria" எனும் குறைபாடு என்றும், இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணீரோடு இரத்தம் சேர்ந்து கசியும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
Image Courtesy

இரண்டு கருப்பை கொண்டு பிரசவித்த பெண்
இந்தியாவின் பாட்னா பகுதியை சேர்ந்த பெண் ரிங்கு தேவி. இவர் கடந்த 2011 ஆண்டு இரட்டை குழந்தைகளை பிரசவித்தார். இதில் என்ன வினோதம் என்கிறீர்களா? இவர் இரு குழந்தைகளையும், வெவ்வேறு கருப்பைகளின் மூலம் பிரசவித்தார் என்பது தான் வினோதம்.
Image Courtesy

வயிற்றில் தனது இரட்டையை சுமந்த ஆண்
நாக்பூரை சேர்ந்தவர் சஞ்சு பகத், சாதாரணமாகவே இவரது வயிறு கர்ப்பிணி பெண் போன்று காட்சியளித்துள்ளது. இது இவரது 36வது வயதில் மிகவும் பெரியதாகவே பரிசோதனை செய்ததில், இவரது வயிற்றில் இவரது இரட்டை வளர்ந்து வந்தது கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது.
Image Courtesy

நான்கு கை, கால்களுடன் பிறந்த குழந்தை
நமது நாட்டில் பெண் கடவுள்களுக்கு இருப்பது போன்ற நான்கு கை, கால்களுடன் பிறந்தது லக்ஷிமி என்ற இந்த குழந்தை. இந்த குறைபாட்டை "Ischiopagus Conjoined" இடுப்பு ஒட்டி பிறந்த இரட்டையர் என்று குறிப்பிடுகிறார்கள். பிறகு, அதிகமாக இருந்த கை, கால்கள் அகற்றப்பட்டு இந்த குழந்தை இயல்பு வாழ்க்கையை வாழ வழிவகுக்கப்பட்டது.
Image Courtesy

வயது முதிர்சியான் தோற்றமளிக்கும் பீகார் குழந்தைகள்
பீகாரை சேர்ந்த ஓர் தம்பதிகளுக்கு பிறந்த ஏழு குழந்தைகளில் ஐவருக்கு "Progeria" எனப்படும் வேகமாக முதிர்ச்சி அடையும் பாதிப்பு இருந்தது. ஹிந்தியில் வெளியான "பா" படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஏற்பட்ட குறைபாடு தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy

ஒற்றை கண்ணுடன் பிறந்த குழந்தை
கடந்த 2006ஆம் ஆண்டு பிறந்த இந்த குழந்தை, "cyclops" ஒற்றை கண்ணுடன் பிறந்தது. நடு நெற்றியில் கண்ணும், மூக்கு இன்றியும் பிறந்தது இந்த குழந்தை.
Image Courtesy

ஓநாய் குழந்தை
பிரிதிவிராஜ் பாட்டில் எனும் மகாராஷ்டிரா சிறுவனுக்கு உடல் முழுதும் கேசம் முளைக்கும் ஓநாய் நோய் எனப்படும் "Wereeolf" பாதிப்பு இருந்தது. இந்த பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு உடல் முழுக்கு அளவிற்கு அதிகமான முறையில் முடி வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy



Click it and Unblock the Notifications