ட்ரைலர் வெளியீட்டிற்கு பொம்மை போல க்யூட்டாக வந்த ஸ்ருதிஹாசன்!!!

By: Babu
Subscribe to Boldsky

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் 'கப்பர் இஸ் பேக்' என்னும் இந்தி திரைப்படத்தில் நடிகர் அக்ஷய் குமாருடன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது நடிகை ஸ்ருதிஹாசன் லேக்மி ஃபேஷன் வீக்கில் நிஷ்கா லுல்லா என்னும் டிசைனர் வெளியிட்ட கலெக்ஷன்களில் ஒரு உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் இவர் பொம்மை போன்று காணப்பட்டார்.

மேலும் நடிகர் அக்ஷய் குமார் வயதானாலும் இன்னும் தனது உடலமைப்பை கட்டுக்கோப்புடன் பராமரித்து வருவதால், அவர் இளமையுடன் காட்சியளிக்கிறார். அதிலும் இந்த ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது, அவர் அணிந்து வந்த கருப்பு நிற சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து வந்தது, அவரை இளமையுடன் வெளிக்காட்டியது. இங்கு கப்பர் இஸ் பேக் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டிற்கு ஸ்ருதி மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிஷ்கா லுல்லா உடை

நிஷ்கா லுல்லா உடை

இது தான் ஸ்ருதிஹாசன் அணிந்து வந்த டிசைனர் நிஷ்கா லுல்லா வடிவமைத்த பிங்க் நிற லேஸ் ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ்.

பொருத்தமான மேக்கப்

பொருத்தமான மேக்கப்

பிங்க் நிற லேஸ் உடைக்கு ஏற்றவாறு ஸ்ருதி கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஸ்ருதியின் ஹேர் ஸ்டைல்

ஸ்ருதியின் ஹேர் ஸ்டைல்

ஸ்ருதிஹாசன் நேர் உச்சி எடுத்து, லேசாக கர்ல்ஸ் செய்து கொண்டு வந்திருந்தது, அவரை பொம்மை போல வெளிக்காட்டியது.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

இது தான் நடிகர் அக்ஷய் குமார் மேற்கொண்டு வந்த ஸ்டைல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shruti Haasan In Nishka Lulla's Latest Collection

Shruti Haasan looks bubbly in a hot pink lace dress by Nishka Lulla at Gabbar Trailer Launch. Take a look at this beauty.
Story first published: Saturday, April 4, 2015, 16:53 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter