கிசுகிசுக்களுக்கு பேர்போன இந்திய நடிகைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

நம் நாட்டில் புரளி பேசுவது, சண்டை இழுத்து வேடிக்கை பார்ப்பது போன்றவை சாதாரணமாக நடக்கும் விஷயங்கள். அதிலும் நடிகர் நடிகைகளைப் பற்றி கிசுகிசு பேசுவது என்பது பலருக்கும் பிடித்த ஒரு பொழுது போக்காகவே இருக்கும்.

கன்னி கழியாமல் சந்தோஷமாக வாழும் இந்திய நடிகைகள்!!

அப்படி மக்கள் மத்தியில் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்டு, பல பிரச்சனைகளை சந்தித்து, இன்றும் தைரியமாக பல நடிகைகள் திரையுலகில் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

பிரபல முன்னணி நடிகர் நடிகைகளின் உண்மையான லட்சியம் என்னென்னு தெரியுமா...?

அதிலும் ஒன்று இரண்டல்ல, பல கிசுகிசுக்கள் பலருடன் சேர்த்து பேசப்பட்டுள்ளன. இங்கு அப்படி நிறைய கிசுகிசுக்களுக்கு உள்ளான சில இந்திய நடிகைகளைப் பட்டியலிட்டுள்ளோம். முக்கியமாக இவர்களது கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளியே வைக்க முடியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு, தற்போது அபிஷேக் பச்சனை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

த்ரிஷா

த்ரிஷா

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த த்ரிஷா விஜய், ராணா டகுபதி போன்றோருடன் சேர்த்து பல நாட்களாக கிசுகிசுக்கப்பட்டார். தற்போது அவர் தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயம் முடிந்து, கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூட பல நடிகர்களுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டார். அப்படி கிசுகிசுக்கப்பட்டவர்கள் அனைவருமே மார்கெட் இழந்துவிட்டனர்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாராவைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. கிசுகிசுக்கள் அதிகம் பேசப்பட்டு, பின் நடு தெருவில் கழற்றிவிடப்பட்டு, தற்போது எதுவும் வேண்டாம் என்று தன் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

அசின்

அசின்

நடிகை அசின் பிரபல முன்னணி நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்ததால், தற்போது அவர் தமிழை விட்டு, பாலிவுட்டிற்கு சென்றுவிட்டார்.

குஷ்பு

குஷ்பு

அக்காலத்தில் நடிகை குஷ்பு முன்னணி நடிகையாக இருந்த போது, பல படங்கள் ஒன்றாக நடித்த நடிகர் பிரபுவுடன் சேர்த்து கிசுகிசுக்கள் எழுந்தன. பின் அவர் இயக்குநரை மணந்து, தற்போது அரசியலில் குதித்து அடாவடி செய்து கொண்டு வருகிறார்.

 சிம்ரன்

சிம்ரன்

இடுப்பழகியான நடிகை சிம்ரன் கூட கிசுகிசுக்களுக்கு உள்ளாகி, பின் திருமணம் செய்து, திரையுலகை விட்டு சென்று, மீண்டும் நடித்து வருகிறார்.

நக்மா

நக்மா

நடிகை நக்மா கிரிக்கெட் வீரர் கங்குலியுடன் சேர்த்து பல நாட்கள் கிசுகிசுக்கப்பட்டு, தற்போது ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

நடிகை கரீனா கபூர் கூட பல நடிகர்களுடன் சேர்த்து கிசுகிசுக்களுக்கு உள்ளானார். தற்போது நடிகர் சாயிப் அலிகானை திருமணம் செய்து, சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

'நூல போல சேலை, தாய போல பிள்ளை' என்னும் பழமொழிக்கேற்ப நடிகை ஸ்ருதிஹாசனும் பல பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Popular Indian Actresses For Gossips

Here are some of the most popular indian actresses for gossips. Take a look...
Subscribe Newsletter