நகைச்சுவை நடிகர்கள் வாழ்வில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவங்கள் : உலக நகைச்சுவை தினம்!!!

கலைவாணரில் தொடங்கி, சந்திரபாபு, தங்கவேலு, பாலைய்யா, தேங்காய் சீனிவாசன், நாகேஷ், கவுண்டமணி செந்தில் மற்றும் இன்றைய சூரி வரை ஏராளமானோர் தமிழக மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளனர். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த போதிலும் கூட, மக்களை தனது ஜனரஞ்சகமான நடிப்பில் ஈர்த்தவர் மனோரமா.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

நகைச்சுவை நடிகர்கள் வெறும் சிரிப்புக் காட்ட மட்டுமல்ல சிந்திக்க வைக்கவும் கூட என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கலைவாணர் அவர்களும் விவேக் அவர்களும் ஆவர்கள். பசியிலும் பட்டினியிலும் வாடிக் கிடந்து திரையுலகில் நகைச்சுவை வேடமேற்று முன்னேறியவர்கள் நாகேஷ் அவர்களும் "வைகைப்புயல்" வடிவேலு அவர்களும்.

நடிகர் "இளையதளபதி" விஜய் பற்றி யாரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

சிரிக்க வைத்த இவர்களை பற்றிய சில நெகிழ வைக்கும் ரீல் மற்றும் ரியல் லைப் நினைவுகள் இனி உங்களுக்காக.....

கார்மென்ட்ஸில் வேலை செய்த "தல" அஜீத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சந்திரபாபு

சந்திரபாபு

நகைச்சுவை மட்டுமின்றி, நடனமாடுதல், பாட்டு பாடுதல் என பல திறைமைகள் இருந்த நடிகர். நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் முதலிரவன்றே தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூற, மறு நாள் அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை ஒற்றியே தாம் அந்த 7 நாட்கள் படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிக - இயக்குனர் பாக்கியராஜ் கூறினார்.)

குடிக்கு அடிமை

குடிக்கு அடிமை

சந்திரபாபு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் களமிறங்கிய படங்கள் தோல்வியடைந்தன. இதனால், மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். 1975 ஆம் ஆண்டு வெளிவந்த பிள்ளைக் கனியமுது என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974ஆம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.

கலைவாணர்

கலைவாணர்

தனது இயல்பான நடிப்பு மற்றும் வசனங்களால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நடிகர் கலைவாணர். இவர் வெறும் நகைச்சுவை நடிகர்மட்டுமல்ல, சிறந்த பாடகர், இயக்குனரும் கூட. இவரது மனைவி எம்.ஏ.மதுரமும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர்.

கொலை குற்றசாட்டு

கொலை குற்றசாட்டு

அப்போதைய பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

நாகேஷ்

நாகேஷ்

நாகேஷ், தமிழ் திரையுலகின் ஓர் முக்கியமான மங்காத நட்சத்திரம். நாடக மேடையில் தனக்கு கிடைத்த சில வினாடி வாய்ப்பினை பயன்படுத்தி, பல வருடங்கள் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்தவர். கமலுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். இவரது மகன் ஆனந்த் பாபுவும் நடிகராக இருந்தவர் தான். தனக்கென தனி பாணியையும், உடல் மொழியையும் வைத்து சிரிப்பு மழை பொழிந்தவர். ஐவரும் மனோரமாவும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

மேடை நாடகம்

மேடை நாடகம்

ஓர் மேடை நாடகத்தில், வாயிற்று வலி நோயாளியாக கிடைத்த சில வினாடி வாய்ப்பினை பெற்று, இவரது காட்சி நேரத்தில் உள்ளே புகுந்தவர், மருத்துவரிடம் ஐயா வாயிற்று வலிக்கு மாத்திரை வேண்டும் என்ற ஒற்றை வசனத்தை கொண்டு களமிறங்கி, இயக்குனரே எதிர்பாராத படி, பத்து நிமிடங்கள் வலியில் துடிப்பது போல நகைச்சுவையாக நடித்து அரங்கத்திடம் கைத்தட்டல் பெற்று வெற்றிப்பெற்றவர்.

மனோரமா ஆச்சி

மனோரமா ஆச்சி

அனைவராலும் "ஆச்சி" அன்போடு அழைக்கப்படுபவர் மனோரமா. 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை செய்தவர் மனோரமா என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி - எம்.ஜி.ஆர் தொடங்கி தனுஷ் - சிம்பு காலம் வரை நிலைத்து வடித்தவர். சமீபகலாமாக உடல்நலம் சிறிது குன்றி காணப்படுவதால் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

தேங்காய் சீனிவாசன்

தேங்காய் சீனிவாசன்

"தில்லு-முல்லு" இவரது நடிப்பில் மறக்க முடியாத திரைப்படம். ரஜினியுடன் இணைந்து செம ரகளை செய்த படம். இவரது உச்சரிப்பு வழக்கே தனி தன்மையுடையது. இவர் சிறந்த குணசித்திர நடிகரும் கூட.

அடைமொழி காரணம்

அடைமொழி காரணம்

இவர் கே. கண்ணனின் கல் மணம் நாடகத்தில், தேங்காய் வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார். அதற்காக அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த கே. ஏ. தங்கவேலு, இவரை தேங்காய் ஸ்ரீநிவாசன் என்றே அழைக்கப்பட வேண்டும் என்று கூறினார்; அவ்வாறே அழைக்கப்பட்டார். இது தான் இவருக்கு தேங்காய் சீனிவாசன் என்ற அடைமொழி வர காரணமாகும்.

"நக்கல் மன்னன்" கவுண்டமணி

ஏகபோகமாக நாயகர்களையே கலாய்த்து நக்கல் செய்த முதல் நகைச்சுவை நடிகர் என்றால் அது கவுண்டமணி அண்ணன் தான். இவரும் செந்திலும் கூட்டணியாக சேர்ந்து தமிழ் திரையுலக நகைச்சுவை பகுதியை ஏறத்தாழ 25 ஆண்டுகள் கட்டி ஆண்டனர்.

கவுண்டமணி பெயர் காரணம்

கவுண்டமணி பெயர் காரணம்

சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

"வைகைப்புயல்" வடிவேலு

இவரது சொந்த ஊர் வைகை அதுவே இவருக்கு அடைமொழியாக வந்துவிட்டது. கவுண்டமணி, செந்தில் கூட்டணியில் தொடங்கி, விவேக், கருணாஸ் போன்ற பலருடன் நகைச்சுவையில் தூள் கிளப்பியவர்.

பட்டினியில் கிடந்த வடிவேலு

பட்டினியில் கிடந்த வடிவேலு

நடிகர் ராஜ்கிரண் அவர் படம் இயக்கிக் கொண்டிருந்த போது, நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவர் வடிவேலு. தனது முதல் நாள் நடிப்புக்கு சம்பளமாக இவர் கேட்டது சாப்பிட பரோட்டா. ராஜ் கிரண் அவர்கள் கண்டெடுத்த இந்த சிரிப்பு சூறாவளி, பிறகு பழையதை மறக்தார். பேருக்கு உதவி செய்துள்ளார்.

விவேக்

விவேக்

"இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்" விவேக்கை பிரபலமடைய வைத்த வசனம். 1980-களில் இருந்து நடித்து வரும் இவரை சின்ன கலைவாணர் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். கலைவாணர் போலவே, இவரும் சிந்திக்க வைக்கும்படி நிறைய நகைச்சுவை செத்தால் இந்த அடைமொழி இவருக்கு சொந்தமானது.

சமூக பணிகள்

சமூக பணிகள்

நகைச்சுவை மட்டுமின்றி, சமூக பணிகளிளிலும் ஈடுபடும் பண்புடையவர் விவேக். தமிழகம் முழுதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு, முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் பாராட்டுகள் பெற்ற பெருமைக்குரியவர்.

உலக நகைச்சுவை தின வாழ்த்துகள்!!!

உலக நகைச்சுவை தின வாழ்த்துகள்!!!

இன்னும் எண்ணில் அடங்காத எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும், தமிழ் போல்ட்ஸ்கை சார்பாக உலக நகைச்சுவை தின வாழ்த்துகள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion