Latest Updates
-
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!!!
என்ன தான் பணம் சம்பாதித்தாலும், அவர்களுக்கு குழந்தை இல்லாவிட்டால், சம்பாதித்தும் எந்த ஒரு புண்ணியமும் இல்லை. குழந்தை பாக்கியம் பெறுவது என்பது மிகப்பெரிய வரம் என்று சொல்லலாம். ஏனெனில் குழந்தை பெற முடியாமல் இவ்வுலகில் பலர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் அதற்காக பல தம்பதிகள் கோவில் கோவிலாக எல்லாம் ஏறி இறங்கியிருப்பார்கள்.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல இந்திய நடிகைகள்!!!
ஆனால் இன்றைய நவீன மருத்துவ உலகில், செயற்கை முறையில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். அப்படி நம் பாலிவுட்டில் பல பிரபலங்கள் செயற்கை முறையில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். அதில் சிலர் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (IVF) முறையையும், இன்னும் சிலர் IVF வாடகைத்தாய் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.
நடிகைகளுடனான உறவினால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த இந்திய பிரபலங்கள்!!
இங்கு செயற்கை முறையில் குழந்தைப் பெற்றுக் கொண்ட பாலிவுட் பிரபலங்களை பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (IVF)
இந்த முறைப்படி, ஆணின் விந்தணுவை கருமுட்டையுடன் நன்கு ஒன்றிணையச் செய்து, பின் தாயின் கருப்பைக்குள் செலுத்தி வளரச் செய்வதாகும்.

IVF வாடகைத்தாய் (IVF Surrogacy)
இந்த முறைப்படி, கருமுட்டை மற்றும் விந்தணுவானது, மற்றொரு பெண்ணின் கருப்பைக்குள் உட்செலுத்தப்பட்டு பெற்றெடுக்கும் முறை. இந்த முறையில் பிறக்கும் குழந்தைக்கு வாடகைத்தாயின் குணாதிசயங்கள் நிச்சயம் இருக்காது.

ஃபராஹ் கான் மற்றும் ஷிரிஷ் குந்தர்
ஷிரிஷ் குந்தர் 40 வயது இருக்கும் ஃபராஹ் கானை திருமணம் செய்து கொண்டார். பின் இரண்டு வருடங்கள் குழந்தையைப் பெற்றெடுக்க முயற்சித்து தோல்வியைத் தழுவினர். இறுதியில் ஃபராஹ் கான் IVF முறையை தேர்ந்தெடுத்து, 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி, மூன்று குழந்தையை பெற்றெடுத்தார்.

அமீர் கான் மற்றும் கிரண் ராவ்
நடிகர் அமீர் கானுக்கு தன் முதல் மனைவியின் மூலம் இரண்டு குழந்தை ஏற்கனவே உள்ளது. ஆனால் தனது இரண்டாவது மனைவியான கிரண் ராவ்வுடன் IVF முறையின் மூலம் அசாத் என்னும் அழகான ஆண் குழந்தையை 2011 ஆம் ஆண்டு பெற்றெடுத்தார். மேலும் அமீர் கான், குழந்தை பெற்றெடுக்க முடியாமல் தவிக்கும் தம்பதியரை, இம்முறையின் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்குமாறு வலியுறுத்துகிறார்.

சோகைல் மற்றும் சீமா கான்
சோகைல் கான் மற்றும் சீமா, முதல் குழந்தை பிறந்து 10 வருடங்கள் கழித்து இரண்டாம் குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத்தனர். மேலும் அதற்காக IVF வாடகைத்தாய் முறையை தேர்ந்தெடுத்து, இரண்டாம் குழந்தையை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெற்றெடுத்தனர். இந்த தம்பதியருக்கு 1998 ஆம் ஆண்டு திருமணமானது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் மற்றும் ஹஸீனா ஜெத்மலானி
பாலிவுட்டின் மற்றொரு பிரபலமான கான் குடும்பம் தான் இது. ஃபேஷன் டிசைனரான ஹஸீனா மற்றும் வக்கீலான மகேஷ், IVF முறை மூலம் இரட்டையர்களைப் பெற்றெடுத்தனர். மேலும் இவர்களுக்கு முதல் குழந்தை பிறந்து 10 வருடங்களுக்கு பின் இந்த இரட்டையர்கள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான் மற்றும் கவுரி கான்
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் மற்றும் கவுரி கான் தம்பதியினருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது தெரியும். ஆனால் திடீரென்று அவர்கள் ஒருநாள் குழந்தை ஒன்றை பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்து வந்தனர். அந்த குழந்தை யார் என்று பார்த்தால், அக்குழந்தை IVF வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த குழந்தை என்று தெரிய வந்தது.



Click it and Unblock the Notifications
