உயரத்தில் இருந்து நிர்வாணமாக குதித்து விளையாடிய பெண் - கேளிக்கை நிறுவனத்திற்கு அபராதம்!!

Posted By: John
Subscribe to Boldsky

பங்கி ஜம்பிங் விளையாட்டைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? "குஷி" படத்தில் "மொட்டு ஒன்று.." பாடலின் துவக்கத்தில் நடிகர் விஜய் கால்களில் ஓர் கயிற்றைக் கட்டிக் கொண்டு குதித்து விளையாடுவாரே, அந்த விளையாட்டின் பெயர் தான் பங்கி ஜம்பிங்.

இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!

வெளிநாடுகளில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலாமானது. தாய்லாந்து நாடு சாதாரணமாகவே கொஞ்சம் சூட்டைத் தணிக்கும் நாடாக தான் திகழ்கிறது. அந்த நாட்டின் ஓர் கேளிக்கை விளையாட்டு இடத்தில் தான் பங்கி ஜம்பிங்கில் ஓர் சுற்றுலா பெண் நிர்வாணமாகக் குதித்து விளையாடியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகும் பிரெஞ்சு நடிகை!

இந்த விபரீத விளையாட்டு தான் இன்று வினையாக மாறி அபராதம் கட்டும் வரை கூட்டி சென்றிருக்கிறது அந்த கேளிக்கை நிறுவனத்தை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விபரீத விளையாட்டு

விபரீத விளையாட்டு

ஹாங்காங் நாட்டை சேர்ந்த சேர்ந்த ஓர் சுற்றுலாப் பயணி, தாய்லாந்தில் உள்ள சாங் மை என்னும் இடத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு இருக்கும் எக்ஸ் பங்கி ஜம்பிங் விளையாட்டு தளத்திற்கு சென்ற அவர், பங்கி ஜம்பிங் விளையாட்டில் தான் நிர்வாணமாக பங்கு பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கரும்பு தின்ன கூலியா

கரும்பு தின்ன கூலியா

கரும்பு தின்ன கூலியா என்ற பழமொழிக்கு ஏற்ப அங்கு பணிபுரிந்தவர்களும் ஆட்டினை தலையை ஆட்டி, சரி என்று ஒப்புதல் தெரிவித்திருக்கின்றனர்.

 பல முறை நிரவாணமாக விளையாடியுள்ளார்

பல முறை நிரவாணமாக விளையாடியுள்ளார்

அந்த சுற்றுலாப் பயணி ஓர் மாடலாம். அதனால், தனது போர்ட்ஃபோலியோவிற்கு (Portfolio) நிறைய புகைப்படங்கள் தேவைப்படுகிறது என்று கூறி பல முறை பங்கி ஜம்பிங் விளையாட்டில் ஈடுப்பட்டுள்ளார், அதுவும் நிர்வாணமாகவே.

வீடியோ பதிவு

வீடியோ பதிவு

இந்த விபரீத விளையாட்டை புகைப்படம் எடுத்த அதே நேரத்தில் ஏதோ புண்ணியவான் வீடியோவும் எடுத்து இணையத்திலும் பரவ விட்டுருக்கிறார்.

காவல்துறையில் வழக்கு பதிவு

காவல்துறையில் வழக்கு பதிவு

இணையத்தில் இந்த வீடியோ வைரலாகப் பரவ, ஓர் உத்தம புத்திரன் இதைக் கண்டு வெகுண்டேழுந்து, காவல் துறையுடன் புகார் அளித்துள்ளார். காவல் துறையும் அந்த கேளிக்கை நிறுவனத்தின் மேல் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்திற்கு கூட்டி சென்றது.

அபராதம்

அபராதம்

நீதிமன்றத்தில் அந்த கேளிக்கை நிறுவனதிற்கு 1,000 தாய்லாந்து பஹத் (Baht) அபராதம் விதிக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் 1,900ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதே அபராதம் அந்த சுற்றுலா பயணிக்கும் விதிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அவர் நாட்டை விட்டு சென்றுவிட்டார்.

இது முதல் முறை அல்ல

இது முதல் முறை அல்ல

வீடியோ பதிவுகளை வைத்து அவர் ஒரு சீனா சுற்றுலா பயணி என்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனா சுற்றுலா பயணிகள் இது போன்ற காரியங்களில் இதற்கு முன்பும் ஈடுபட்டுள்ளதாக அறியப்படுகிறது.

தடை

தடை

இதுப் போன்ற காணொளிகள் இணையத்தில் தடை செய்யப்பட வேண்டும் என்று கருத்துகள் அதிகரித்து வருகிறது. (அப்போதும் கூட இதுப் போன்ற விளையாட்டுகள் தடை செய்ய வேண்டும் என்று யாரும் கூறவில்லை - என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா...)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Adventure Company Fined Tourist To Strip Off For NAKED Bungee Jump

Do you know? In Thailand, a adventure company fined for allowing tourist to strip off for naked bungee jump.
Story first published: Wednesday, May 20, 2015, 10:06 [IST]