For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகைகள்!

  By John
  |

  இது நாகரீகமா? இல்லையா? என்று விவாதம் நடப்பதற்கு முன்பு.. இது காலாகாலமாக நடந்துவரும் ஒரு விஷயமாக மாறிவிட்டது என்பதயும். அதிலும் இந்த காலத்தில் திருமணத்திற்கு கருத்தரிப்பது, அபார்ட் செய்வது எல்லாம் ஏதோ ஃபேஷன் போல கருதும் மோசமான நிலை உருவாகி இருப்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.

  Indian Celebs who got Pregnant Before Marriage

  சென்னை, பெங்களுரு, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்கள் என்றில்லாமல் சாதாரண நகரங்களில் இருந்து விதிவிலக்கு என எந்தவொரு ஒதுக்கீடும் இல்லாமல் பரவலாக இந்த கலாச்சார மாற்றத்தை நாம் காண இயல்கிறது.

  என்ன திரைத்துறையில் நடந்தால் மட்டும் இது தலைப்பு செய்தியாகவும், பிரேக்கிங் நியூஸாகவும் மாறிவிடுகிறது. அந்த வகையில் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பல வுட்களில் திருமணத்திற்கு முன்பே கருத்தரித்து (குழந்தையும் பெற்ற) நடிகைகளை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஸ்ரீதேவி

  ஸ்ரீதேவி

  இந்தி திரையுலகில் காட்டுத்தீயாக பரவிய பெரும் சர்ச்சை என்று இதை கூறலாம். ஏற்கனவே திருமணமான தயாரிப்பாளர் போனி கபூருடன் காதலில் இருந்து ஸ்ரீதேவி, அவர் மூலமாக திருமணத்திற்கு முன்பே கருத்தரித்தார். இதன் காரணமாக முதல் மனைவியை பிரிந்தார் போனி எனவும் செய்திகள் வெளியாகின. இதனால், முதல் மனைவியின் மகனும், தற்போதைய இந்தி திரைப்பட நடிகருமான அர்ஜுன் கபூர் ஸ்ரீதேவி மீது கடும் கோபம் கொண்டிருந்தார்.

  ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு தான், அர்ஜுன் கபூர் தனது தங்கைகளான ஜான்வி மற்றும் குஷி மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டார்.

  சரிகா

  சரிகா

  குழந்தை நட்சத்திரமாக துவங்கி, முதன்மை நாயகியாக உருவெடுத்தவர் நடிகை சரிகா. இவருக்கும் அப்போது தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார் நடிகராக திகழ்ந்து வந்த கமல் ஹாசனுக்கும் நடுவே காதல் பூத்தது. கமல் அப்போது ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  சிறு வயது முதலே பல சோகங்களை கண்ட சரிகாவிற்கு கமலின் காதல் ஆறுதலாக இருந்தது. இவர்களது முதல் மகள் ஸ்ருதி ஹாசன் பிறந்த போது இவர்கள் திருமணமானவர் அல்ல. பிறகே சிவாஜி கணேஷன் அவர்கள் முன்னிலையில் இவர்கள் சிம்பிளாக திருமணம் செய்துக் கொண்டனர். இதன் பிறகே இரண்டாவது மகள் அக்ஷரா பிறந்தார்.

  கொங்கனா சென் சர்மா

  கொங்கனா சென் சர்மா

  இந்தி நடிகை கொங்கனா சென் சர்மா, சக நடிகரான ரன்வீர் ஷெராய் உடன் ரொமான்ஸ் உறவில் இருந்தார். திருமணத்திற்கு முன்பே இவர் கருத்தரித்தார். இதனால், 2010 ஆம் ஆண்டுகொங்கனாவின் வீட்டில் இரகசிய திருமணம் நடைபெற்றது.

  திருமணமான ஆறே மாதத்தில் குழந்தை பெற்றார்கொங்கனா சென் ஷர்மா. இப்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டாலும் கூட, தங்கள் குழந்தை மீது இருவரும் சம அளவு அக்கறையும், அன்பும் செலுத்து வருகிறார்கள். மேலும், இவர்களுமே சிறந்த நண்பர்களாக தான் பழகி வருகிறார்கள்.

  அம்ரிதா அரோரா

  அம்ரிதா அரோரா

  நடிகையும், மலாய்கா அரோரா கானின் சகோதரியுமான அம்ரிதா அரோரா தனது பாய் ஃபிரெண்டும் தொழிலதிபருமான ஷகீல் லடாக் உடன் ரொமான்ஸ் உறவில் இருந்து வந்தார். திடீரென யாரும் எதிர்பாராத தருணத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின. இது இந்தி திரையுலகில் அதிர்ச்சி அலைகளை கிளப்பியது. இதற்கு காரணம், அம்ரிதா அரோரா திருமணத்திற்கு முன்பே கருத்தரித்தது தான்.

  செலினா ஜெட்லி

  செலினா ஜெட்லி

  பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி, ஆஸ்திரேலிய தொழிலதிபரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொல்வதற்கு முன்பே கலவிட, கருத்தரித்தார் செலினா.

  இந்த ஜோடிக்கு திருமணமான எட்டே மாதத்தில் இரட்டையர் குழந்தைகள் பிறந்தன. மேலும், சில மாதங்களுக்கு முன், இரண்டாவதாக இரட்டையர்களை பெற்றார் செலினா.

  மஹிமா சௌத்ரி

  மஹிமா சௌத்ரி

  நடிகை மகிமா சௌத்ரி பலமுறை காதல் உறவுகள், ப்ரேக்-அப் செய்திகளில் அடிப்பட்டவர். ஆனால், திடீரென வெளியான இவரது திருமண அறிவிப்பு ஊடகங்களிலும், திரை உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு தான் இதற்கு காரணம், இவர் தனது காதலன் மூலம் கருத்தரித்தது தான் என அறியவந்தது. திருமணம் முடிந்த கையோடு மகிமா தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்தார். இந்த செய்து சந்தேகத்தை உறுதி செய்தன. திருமணம் முடிந்த கையோடு மகிமா திரைத்துறையை விட்டு விலகினார்.

  அனோஷ்கா சங்கர்

  அனோஷ்கா சங்கர்

  பண்டிட் ரவிசங்கரின் மகளான அனோஷ்கா சங்கர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தார்.

  ட்விங்கிள் கண்ணா!

  ட்விங்கிள் கண்ணா!

  நடிகர் அக்ஷை குமாரும் அந்த காலத்து ப்ளேபாய் தான். இவரும் ஷில்பா ஷெட்டியும் காதலித்து வந்ததாகவும். அதே நேரத்தில் இவர் ட்விங்கிள் கண்ணாவுடனும் நெருக்கமாக பழகி வந்ததை அறிந்து ஷில்பா ப்ரேக்-அப் செய்துக் கொண்டார் என்றும் செய்திகள் பரவின.

  இன்று இந்திய திரை துறையில் இவர்கள் ஒரு எடுத்துக்காட்டான ஜோடியாக திகழ்ந்தாலும். இவர்கள் திருமணத்திற்கு முன்பே தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்ததாக செய்திகள் வெளியாகின.

  நீனா குப்தா

  நீனா குப்தா

  மேக்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் நீனா குப்தா காதல் உறவில் இருந்து வந்தார். இவர்களது நெருக்கமான உறவின் காரணத்தால் இவர் திருமணத்திற்கு முன்பே கருவுற்று, குழந்தையும் பெற்றார்.

  கடைசி வரை விவியன் மற்றும் நீனா திருமணம் செய்துக் கொள்ளவில்லை. நீனாவும் தனது மகளை சிங்கிள் பேரண்டாக இருந்து வளர்த்து வந்தார்.

  ஜெஸிகா ஆல்பா!

  ஜெஸிகா ஆல்பா!

  ஹாலிவுட் நடிகையான ஜெஸிகா ஆல்பா உலகம் முழுக்க தனக்கான தனி ரசிகர் பட்டாளம் வைத்திருந்தவர். இவர் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கேஷ் வார்ரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 2009 மே மாதத்தில் திருமணம் செய்துக் கொண்ட இவர்களுக்கு அதற்கு அடுத்த மாதமே முதல் குழந்தை பிறந்தது.

  ஜெனிபர் கர்னர்

  ஜெனிபர் கர்னர்

  ஜெனிபர் மற்றும் அவரது காதலர் பென் அப்லெக் இருவரும் 2005ம் ஆண்டு ஜூன் மாதம் இரகசியமாக திருமணம் கொண்டார்கள். திரைத்துறையில் இரகசிய திருமணங்கள் நடப்பது சகஜம் தான். ஆனால், இவர்களது இரகசிய திருமணத்திற்கு இவர்களது பெற்றோர்களே அழைக்கப்படவில்லை என்பது தான் அதிர்ச்சி.

  இவர்களுக்கு திருமணமான ஆறாவது மாதத்தில் முதல் குழந்தை பிறந்தது. இப்போது மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியான இல்வாழ்க்கை நடத்தி வருகிறது இந்த ஜோடி.

  க்வினெத் பேல்ட்ரோ

  க்வினெத் பேல்ட்ரோ

  க்வினெத் பேல்ட்ரோ மற்றும் க்றிஸ் மார்டின் இருவரும் அவசரகதியில் திருமணம் செய்துக் கொண்டனர். இதற்கு காரணம் என்ன என்பது அடுத்த ஐந்தாவது மாதம் வெளியானது. ஆம்! திருமணமான ஐந்தாவது மாதத்தில் தங்களது முதல் குழந்தையை பெற்றது இந்த ஜோடி.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Actresses Who Got Pregnant Before Marriage

  Check out some of the Bollywood actresses who got pregnant before marriage.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more