ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்த வகையான மீசைக்கு உலகிலேயே இருவர் தான் சொந்தக்காரர்கள். ஒருவர் உலகையே குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர், மற்றொருவர் உலகே குலுங்கும் அளவிற்கு சீரழித்தவர். கொடுமைக்கு டிக்ஸ்னரியில் அர்த்தம் தேடினால் 99% இவர் பெயர் தான் பொருளாக கூறப்படும். சிறு வயதில் மிகவும் புத்திசாலியாக இருந்தவர் தான். அவரது தந்தையின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாது அழுது கதறியவர். ஒருவேளை அந்த சிறு வயது சம்பவங்கள் தான் இவரினுள் ஆழமாக பதிந்து உலகையே தன் காலடிக்கு கொண்டு வரும் அளவு ஒரு கொடுங்கோல் ஆட்சி புரிய வைத்திருக்கலாம்.

உலகத்தில் உள்ள மிகவும் மோசமான மற்றும் கொடூரமான 10 சர்வாதிகாரிகள்!!!

ஹிட்லர்! உலக போரின் வரலாற்று பக்கங்களில், ஒவ்வொரு பக்கத்திலும் இவரது பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு, நிமிடமும், ஏன் ஒவ்வொரு நொடியும் இரண்டாம் உலக போரில் இவரது பெயர் ஒலிக்காத தருணங்களே இல்லை. நாசிக் படையின் தலைவரான ஹிட்லரின் அளவிற்கு நாச வேலைகளில் வேறெந்த ஒரு தலைவராலும் ஈடுப்பட்டிருக்க முடியாது. ஓர் இனத்தையே அழித்திடவும், ஒரு நகரையே அழித்து அங்கு குளம்வெட்ட வேண்டும் என்ற எண்ணங்கள் யாருக்கு தான் வரும், ஹிட்லரை தவிர.

மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ள சக்தி வாய்ந்த 6 நில நடுக்கங்கள்!

ஒவ்வொரு படைப்பாளியும் அவரது வாழ்நாளில் ஒரு தலைசிறந்த படைப்பினை படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார். அந்த வகையில் ஓர் சிறந்த ஓவியரான ஹிட்லரின் தனது துப்பாக்கி மற்றும் பீரங்கி குண்டுகளால் படைத்தது மாபெரும் இரண்டாம் உலக போர். பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்டவரை பற்றிய அரிய விஷயங்கள் இங்கே உங்களுக்காக....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாஸ்கோ

மாஸ்கோ

மாஸ்கோவில் இருக்கும் குடியிருப்புகள் அனைத்தையும் அழித்துவிட்டு அந்த பகுதியை குளமாக்க திட்டமிட்டிருந்தார் ஹிட்லர்.

வசீகரமானவர்

வசீகரமானவர்

ஹிட்லர் தன்னைத் தானே மகளிர் மத்தியில் தான் மிக வசீகரமானவனாக திகழ்வதை நினைத்திருந்தார். மற்றும் இவரை காதலித்த இரு பெண்களும் தற்கொலை செய்து கொண்டனர் என கூறப்படுகிறது.

மார்டின் லூதர் கிங்

மார்டின் லூதர் கிங்

ஒருமுறை மார்டின் லூதர் கிங் ஹிட்லரை பற்றி குறிப்பிடும் போது, "யாரும் மறந்து விட வேண்டாம், ஹிட்லர் ஜெர்மனியில் செய்தவை எல்லாமே சட்டப்பூர்வமானவை" என்று கூறியிருந்தார்.

 ஓவிய கலைஞர்

ஓவிய கலைஞர்

சிறந்த ஓவிய படைப்பாற்றல் மிகுந்த ஹிட்லர் சிறுவயதில் தானொரு கட்டிட கலைஞராக வர வேண்டும் என விரும்பினார். ஆனால், நுழைவு தேர்வில் தோல்வியுற்றதினால் கட்டிடங்களை வெடி வைத்து அழிக்கும் பணியில் ஈடுப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.

ஹென்றி ஃபோர்ட்

ஹென்றி ஃபோர்ட்

ஹென்றி ஃபோர்டின் மீது அளவற்று பற்று கொண்டிருந்தார் ஹிட்லர், அவரது பிறந்த நாளுக்கு தவறாது வருடா வருடம் பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஹிட்லர் - சதாம் உசேன்

ஹிட்லர் - சதாம் உசேன்

ஹிட்லரின் பதுங்கு குழியை வடிவமைத்தவரின் பேரன் தான் சதாம் உசேனின் பதுங்கு குழியை வடிவமைத்து கொடுத்திருகிறார். (என்ன ஒரு ஒற்றுமையப்பா!!!!)

1936 ஒலிம்பிக்

1936 ஒலிம்பிக்

பெர்லின் 1936 ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் வென்றவர்களுக்கு ஓக் மர பரிசுகள் கொடுத்திருக்கிறார் ஹிட்லர்.

அமைதிக்கான விருது

அமைதிக்கான விருது

1939-இல் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் ஹிட்லருக்கு அமைதிக்கான விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

ஹிட்லரின் பயம்

ஹிட்லரின் பயம்

உலகையே தன்னை கண்டு நடுங்க வைத்த ஹிட்லருக்கு பல் மருத்துவர்களை கண்டால் பயமாம். இனிப்புகளை விரும்பி உண்ணும் ஹிட்லருக்கு அவர்களை கண்டாலே பிடிக்காதாம்.

காந்தி எழுதிய கடிதம்

காந்தி எழுதிய கடிதம்

ஒரு முறை காந்தி தனது நண்பருக்கு, அன்பு தோழனே போரிட வேண்டாம், போரை நிறுத்திவிடு என கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருக்கிறார். அந்த நண்பன் வேறு யாருமில்லை ஹிட்லர் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Facts You Hardly Know About Hitler

Do you know about the 10 hardly facts about Hitler? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter