Latest Updates
-
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க..
ஜெகநாத் ரத யாத்திரையின் முக்கியத்துவம்!
ஒடிசாவில் இருக்கும் பூரியில் ரத யாத்திரை தொடங்கிவிட்டது. ஒடிசாவில் உள்ள மக்கள் பெரிதளவில் எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த இடத்தின் முக்கிய கடவுளான ஜகநாதருக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வான இது, அடிப்படையில் ஓர் தேர் திருவிழாவாகும். ரத யாத்திரையின் போது பூரி கோவிலில் உள்ள தெய்வங்களை தேரில் வைத்து அருகில் உள்ள கோவிலுக்கு யாத்திரையாக கொண்டு செல்வார்கள். கடவுளுடன் கூடிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடவுளுக்கு செய்யும் சேவையாக எண்ணி இழுத்து வருவார்கள்.
பூரி கோவிலில் உள்ள இட யாத்திரை 5000 வருடம் பழமையானதாகும். இந்தியாவில் உள்ள அநேகமான ஜகநாத கோவில்களில் ரத யாத்திரை என்ற இந்த திருவிழா ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஒடிசாவில் உள்ள பூரியில் இது மிகவும் பகட்டாரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜெகநாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய மூன்று கடவுள்களின் சிலைகளை ஏற்றி செல்ல மரத்தில் புதிய ரதங்கள் செய்யப்படும்.
இதுப்போன்று வேறு: கடந்த வருட ரத யாத்திரையின் படங்கள்!
இந்த ரத வேலையை அக்ஷய திரிதியை அன்று தச்சர்கள் தொடங்குவார்கள். வண்ணமயமான வர்ணங்கள் பூசப்பட்ட இந்த ரதம், சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற கவிகையால் மூடப்பட்டிருக்கும். பொதுவாக ஜெகநாதரின் ரதம் சிவப்பு மற்றும் மஞ்சள் கவிகையை கொண்டிருக்கும். பாலபத்ராவின் ரதம் சிவப்பு மற்றும் பச்சை கவிகையை கொண்டிருக்கும். சுபத்ராவின் ரதம் சிவப்பு மற்றும் கருப்பு கவிகையை கொண்டிருக்கும்.
ரத யாத்திரை 2014 என்பது தவற விடக்கூடாத ஒரு கண்கொள்ளா காட்சியாகும். சரி இப்போது இந்த ரத யாத்திரையின் முக்கியத்துவத்தைப் பற்றி பார்ப்போமா...

கடவுள்களின் ரதங்கள்
ரதங்கள் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. ஜெகநாதரின் ரதத்தை நந்திகோஷ் அல்லது சக்ரத்வஜா என அழைக்கிறார்கள். அதற்கு பேரின்ப சத்தம் என்ற அர்த்தமாகும். இந்த தேர் 65 டன் எடையுடையதாகும். பாலபத்ராவின் தேரை தலத்வஜா என்று அழைக்கின்றனர். அதற்கு சக்தி வாய்ந்த தாளம் என்ற அர்த்தமாகும். சுபத்ராவின் தேரை பத்மத்வாஜா அல்லது தர்படலன் என அழைக்கின்றனர். அதற்கு கர்வம் என்ற அர்த்தமாகும்.

சடங்குகள்
யாத்திரையின் போது, பாலபத்ராவின் சிலையை முதலில் கோவிலுக்கு வெளியே கொண்டு வருவார்கள். அதன் பின் சுபத்ரா தேவியின் சிலை. கடைசியாக ஜெகநாதரின் சிலை. ரதம் கடக்கும் சாலையை தங்க துடைப்பத்தால் பூரியின் அரசர் பெருக்குவார். தேருடன் நீள கயிறு இணைக்கப்பட்டிருக்கும். தேரை நகர்த்த ஆயிரக்கணக்கானோர் அந்த கயிறை பிடித்து இழுத்து, அருகில் இருக்கும் குண்டிச்சா கோவிலுக்கு வீதி வழியாக அத்தேரை இழுத்து செல்வார்கள். இந்த கோவிலில் தான் ஜெகநாதரின் அத்தை வசிக்கிறார். இந்த கோவிலில் ஒரு வார காலத்திற்கு கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும்.

ரத யாத்திரையின் முக்கியத்துவம்
ரத யாத்திரை ஆன்மீக முக்கியத்துவத்தை கொண்டுள்ளதாக விளங்குகிறது. மனிதரின் உடல் ரதத்தை போன்றது என்றும், அதனை கடவுள் தான் சாரதியாக ஓட்டி செல்கிறார் என கதா உபநிஷத் கூறுகிறது. மனித வாழ்க்கையில் இருந்து ஆன்மீக உலகத்திற்கு கடவுள் நம்மை அழைத்து செல்கிறார். பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்தில் இருந்து முழுமையாக வெளிவர கடவுளிடம் நீங்கள் முழுமையாக சரணடைய வேண்டும்.

ஆன்மீக பயணம்
அதனால் 2014 ஆம் ஆண்டு ரத யாத்திரையைப் பற்றி தெரிந்து கொள்ள போல்ட் ஸ்கையை தொடர்ந்து படியுங்கள். நாங்கள் இந்த ஆன்மீக பயணத்தில் உங்களை அழைத்து செல்ல போகிறோம். அதில் பயணித்து புனித பேரின்பத்தைப் பெற்றிடுங்கள்.
கடந்த வருட ரத யாத்திரையின் படங்கள்...



Click it and Unblock the Notifications
