Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
தெய்வீக சக்தி கொண்ட 6 இந்திய மரங்கள்!
இந்திய நாடு, பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் சங்கமிக்கும் அதன் மதச்சார்பற்ற பண்பாட்டிற்காக பெரிதும் போற்றப்படுகிறது. ஆன்மீகம் செழித்தோங்கும் புண்ணிய பூமியாகக் கருதப்படும் இந்தியாவிற்கு, ஆன்மீகத்தில் கிடைக்கும் அமைதியைத் தேடி, உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். இந்திய நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் இணையற்ற மதப்பெருமையும், ஆன்மீக மதிப்பும் கொண்டவை என்பதோடு புராதனமான கட்டிடங்களும், கோவில்களும் அமையப்பெற்ற பெருமையும் வாய்ந்தவை.
சில வகை மரங்கள் தெய்வீக சக்தி நிறைந்த புனிதமான மரங்களாகவும், முக்கிய கடவுளர்களுடன் தொடர்புடையவையாகவும் கருதப்படுகின்றன. அரசமரம், தென்னைமரம், கஞ்சா மற்றும் சந்தனமரம் போன்ற மரங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழும் மக்களால் வணங்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்து மதத்தில் இம்மரங்கள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. தெய்வமாக வழிபடப்படும் சிறப்போடு, சில அரிய மருத்துவ குணங்களையும் கொண்டவை இம்மரங்கள். தெய்வாம்சம் பொருந்திய சில இந்திய மரங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:

வில்வ மரம்
‘பிலுபத்ரி' என்றழைக்கப்படும் வில்வ மரம், அழிக்கும் கடவுளான சிவபெருமானுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இம்மரத்தின் இலைகளை கடவுளுக்கு படைப்பது மிகுந்த நன்மைகளை அளிக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மும்முனைகளுடன் காணப்படும் இம்மரத்தின் இலைகள் மும்மூர்த்திகளின் முக்கிய செயல்பாடுகளாகக் கூறப்படும் படைப்பு, காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றை உருவகப்படுத்துவதாக நம்பிக்கை.

அரசமரம்
அரசமரத்துக்கு, வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் தண்ணீர் விட்டு வந்தால் சனிபகவானின் அருள் கிட்டும் என்பது ஐதீகம். இது தவிர, புனிதமான கயிற்றை தொடர்ந்து ஏழு முறை அரசமரத்தைச் சுற்றி கட்டி, சனி மந்திரத்தை உச்சரித்து வந்தால் சாதே சாதீயினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் விலகி விடும் என்று கூறப்படுகிறது. இப்புனிதக் கயிற்றை அரச மரத்தைச் சுற்றி கட்டிய பின், மரத்தின் கீழ் விளக்கு ஏற்றி வைக்க மறந்து விடாதீர்கள்.

மூங்கில் மரம்
மூங்கில் மரம் கிருஷ்ண பகவானுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. கிருஷ்ண பகவானுடைய புல்லாங்குழல் மூங்கிலினால் செய்யப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆதலால், மூங்கில் மரம் கிருஷ்ண பகவான் மற்றும் அவரது புல்லாங்குழலின் குறியீடாகப் போற்றப்படுகிறது.

சந்தன மரம்
சந்தன மரம், அதன் வாசனை மற்றும் அழகுப்பயன்களுக்கு பெரும்புகழ் பெற்றது என்பதோடு, தெய்வீக சக்தியுடன் நெருங்கிய தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. இம்மரத்திற்கும் பார்வதி தேவிக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. எவ்வாறெனில், பார்வதி தேவி தனது வியர்வையையும், சந்தனத்தையும் குழைத்து கணேச பெருமானை படைத்ததாக நம்பப்படுகிறது. அதனால், இது மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக பல்வேறு ஆண் மற்றும் பெண் தெய்வ வழிபாடுகளிலும் சந்தனம் பிரதான இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா மரம்
சிவ ஸ்தலங்கள் எங்கேனும் நீங்கள் செல்ல நேர்ந்தால், அங்கு சாதுக்கள் கஞ்சா குடிப்பதை பார்த்திருக்கக்கூடும். என்றாலும், கஞ்சா மரம் செல்வம் மற்றும் வளமையைக் கொண்டு வருவதினால் இது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மஹாசிவராத்திரி திருவிழாவின் போது, மூட்டை மூட்டையாக கஞ்சா இலைகள் சிவபெருமானுக்கு படைக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம். இவை ‘பிரசாதம்' தயாரிப்பதற்கும் உபயோகிக்கப்படுகிறது.

தென்னை மரம்
இந்தியாவில், தென்னை மரத்தை வெட்டுவது அபசகுனமாகக் கருதப்படுகிறது. "கல்ப விருக்ஷம்" என்றும் அழைக்கப்படும் தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் தேங்காய், அனைத்து விதமான பூஜை புனஸ்காரங்களிலும் உபயோகிக்கப்படுகிறது. இம்மரம் சிவபெருமானின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
