For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவலிங்கத்தின் முக்கியத்துவம்!

By Ashok CR
|

சிவலிங்கம் என்பதை சாதாரணமாக இந்தியாவில் காண முடியும். வீட்டில் அல்லது கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது பால், தயிர், தேன் அல்லது தண்ணீர் ஊற்றி பெண்கள் அபிஷேகம் செய்வதை சர்வ சாதரணமாக பார்க்கலாம். சிலர் நல்ல கணவன் அமைய சிவபெருமானை வழிபடுவார்கள். இன்னும் சிலரோ குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை வழிபடுவார்கள். என்ன காரணமாக இருந்தாலும் சரி, சிவலிங்கத்திற்கு பூஜை புரிவது என்பது இந்து மதத்தில் பின்பற்றி வரும் ஒரு முக்கிய சடங்காகும்.

சுவாரஸ்யமான வேறு: நாள் வாரியாக வழிப்பட வேண்டிய இந்து கடவுள்கள்!!!

நம்மில் பலருக்கு சிவலிங்கம் என்றால் உண்மையிலேயே என்ன என்றும் அதனை ஏன் இவ்வளவு தீவிரமாக வழிபடுகிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள மிகவும் ஆவல் இருக்கும். உங்களுக்கும் சிவலிங்கத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள ஆவல் இருந்தால் மேலும் படியுங்கள்.

'லிங்கா' என்றால் சமஸ்கிரதத்தில் சின்னம் அல்லது குறியீடு என்ற பொருளாகும். சிவபெருமானை குறிக்கும் லிங்கம், அண்டத்திற்குரிய ஆற்றல் திறனை குறிக்கிறது. லிங்கத்தை பொதுவாக 'யோனி' என்ற வட்ட வடிவிலான அமைப்பின் மீது தான் வைத்திருப்பார்கள். யோனி என்பது பெண்மையின் ஆக்கப் படைப்பு திறன் அல்லது இயற்கை. லிங்கமும், யோனியும் சேர்ந்து தான், உயிரை உருவாக்க தேவைப்படும் ஆண் மற்றும் பெண்ணின் கட்புலனாகாத ஆற்றலை குறிக்கும்.

அவசியம் படிக்க வேண்டியவை: பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

இப்போது சிவலிங்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி மேலும் கொஞ்சம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூலம்

மூலம்

அதர்வ வேதம் மற்றும் சிவபுராணத்தின் படி, அண்ட சராசரத்தில் முழுமையான இருள் சூழ்ந்திருந்த போது, எரிந்து கொண்டிருக்கும் முடிவில்லா ஒரு தூண் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இந்த தூணை 'புருஷ்' அல்லது ஆண் ஆற்றல் என்று அழைத்தனர். இது சிவபெருமானை குறிக்கும். அதனால் தான் சிவபெருமானை லிங்க வடிவில் வணங்குகிறோம்.

சிவனின் குறியீடு

சிவனின் குறியீடு

சிவலிங்கமே சிவபெருமானின் குறியீடு. முழுமையான கடவுளுக்கு உருவமில்லை என்பதை இது குறிக்கிறது. உருவமற்ற இயற்கை, மௌனம் என்ற மொழியில் பேசுகிறது என்பதை இது குறிக்கிறது. சிவபெருமானே முதன்மையான கடவுள் என்பதால், சிவலிங்கம் என்பது சிவபெருமானின் குறியீடாக பார்க்கப்படுகிறது. அண்டத்திற்குரிய முட்டை வடிவில் அண்டத்தையும் இது குறிக்கும்.

மூன்று பகுதிகள்

மூன்று பகுதிகள்

சிவலங்கத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. கீழ் பகுதியை 'பிரம்ம பிதா' என்றும், நாடு பகுதியை 'விஷ்ணு பிதா' என்றும் மேற் பகுதியை 'சிவ பிதா' என்றும் அழைக்கப்படுகிறது.

பளிங்கினாலான சிவலிங்கம்

பளிங்கினாலான சிவலிங்கம்

பளிங்கினால் செய்யப்பட்ட ஸ்படிக லிங்க வழிபாடு தான் சிறந்த வழிபாட்டு வகையாக கருதப்படுகிறது. காரணம் அந்த பொருளுக்கு அதற்கென சொந்தமாக நிறம் கிடையாது. அது எதனோடு தொடர்பில் ஈடுபடுகிறதோ அதன் நிறத்தையே பெறுகிறது. அதனால் அது 'நிர்குண பிரம்மன' அல்லது இயல் பண்புகள் முற்றிலும் ஒழிந்த முதன்மை சக்தி அல்லது உருவமற்ற சிவனை குறிக்கும்.

பக்தர்களுக்கு லிங்கத்தின் முக்கியத்துவம்

பக்தர்களுக்கு லிங்கத்தின் முக்கியத்துவம்

மிகவும் புதிரானதாக கருதப்படும் சிவலிங்கத்தில் விளக்க முடியாத மிகப்பெரிய சக்தி அடங்கியுள்ளது. சிவன் மற்றும் சக்தியின் சேர்க்கையை குறிப்பதால், இதில் தெய்வீக சக்தி அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இது மனதை செறிவூட்ட தூண்டி, ஆன்மீக ஆற்றலையும் அளிக்கிறது. இது வெறும் கல்லல்ல. மாறாக இது ஒரு பக்தர் தன்னிலை மறந்து, முதன்மை கடவுளிடம் நேரடியாக தொடர்பை ஏற்படுத்த உதவும் ஒரு கருவி எனலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Significance Of The Shiva Linga

Offering puja to Shiva linga forms an important ritual in Hinduism. It is a matter of great curiosity for many as to what is exactly a Shiva linga and why it is worshipped so meticulously? If you are curious to know about the significance of the Shiva linga then read on.
Desktop Bottom Promotion