ஐயப்பன்: விஷ்ணு மற்றும் சிவபெருமானின் புதிரான புதல்வன்

By Ashok CR

விஷ்ணு பகவான் மற்றும் சிவபெருமானின் புதிரான புதல்வனைப் பற்றி எப்போதாவது நீங்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா? விஷ்ணு பகவானின் குழந்தைக்கு தந்தையாக விளங்கியவர் சிவபெருமான். ஆம், இன்றளவும் இந்து மதத்தின் முக்கிய கடவுளாக விளங்குகிறார் அந்த புதல்வன். அந்த கடவுள் வசிக்கும் கோவிலுக்கு இன்றளவும், ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அவரை தரிசிக்கின்றனர். அந்த புனித ஸ்தலம் கேரளாவில் உள்ளது. 41 நாட்கள் விரதம் இருந்து இங்கே லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆம், நீங்கள் யூகித்தது சரியே. நாங்கள் கூறி கொண்டிருப்பது சபரிமலையில் உள்ள ஐயப்ப சாமியைப் பற்றி தான்.

சிவபெருமான் மற்றும் மோகினிக்கு (பெண் வடிவிலான விஷ்ணு பகவான்) பிறந்தவர் தான் ஐயப்ப சாமி. மகிஷி என்ற அரக்கியை அழிக்கவே இவர் அவதரித்தார். பிரம்ம தேவனிடம் வரத்தை பெற்ற பிறகு இந்த அரக்கி பல துன்பங்களை இழைத்து வந்தார். ஐயப்ப சாமியை மணிகண்டன் என்றும் அழைப்பார்கள். அவரை தத்தெடுத்து வளர்த்தவர் ராஜசேகர அரசன்.

ஐயப்ப சாமி திருமணமாகாதவர் என்று நம்பப்படுகிறது. அதனால் கழுத்தை சுற்றி நகையுடன் ஒரு யோகி நிலையில் அமர்ந்திருப்பதை போல் வடிவமைக்கப்பட்டுள்ளார். ஐயப்ப சாமியின் முதன்மையான சன்னிதானம் சபரிமலையில் உள்ளது. இங்கே தான் அவர் வசித்தார் என்று நம்பப்படுகிறது. உலகத்தில் உள்ள மிகப்பெரிய புனித ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். ஐயப்பனுக்கு கடைப்பிடிக்க வேண்டிய விரதம் மற்றும் சடங்குகளை சரிவர கடைப்பிடித்தால், நம் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

இரண்டு ஆண் கடவுள்களுக்கு பிறந்தவர் ஐயப்பன் என்ற பின்னணியில் உள்ள புதிர் என்னவென்று தெரிய வேண்டாமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகிஷி: அரக்கி

மகிஷி: அரக்கி

மகிஷாசுரனை துர்கையம்மன் அழித்த போது அவனின் தங்கையான மகிஷி வெறி கொண்டாள். அவள் அண்ணனின் சாவிற்கு பழி தீர்க்க முனைந்தாள். நீண்ட தவத்தில் ஈடுபட்டு பிரம்ம தேவனை குளிர வைத்தாள். விஷ்ணு பகவான் மற்றும் சிவ பெருமானின் புதல்வனை தவிர வேறு எந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணாலும் தனக்கு ஆபத்து நேரக்கூடாது என்ற வரத்தை பெற்றார். இரண்டு ஆண்கள் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால், மகிஷி இவ்வகை வரத்த பெற்றார். அதன் பின், அண்டத்தில் வாழ்ந்த அனைவருக்கும் துன்பத்தை இழைக்க ஆரம்பித்தாள்.

சிவபெருமான் மற்றும் விஷ்ணு பகவானின் சேர்க்கை

சிவபெருமான் மற்றும் விஷ்ணு பகவானின் சேர்க்கை

அனைத்து கடவுள்களும் விஷ்ணு பகவான் மற்றும் சிவபெருமானை அணுகி, இந்த அரக்கியை அழிக்க உதவி கோரினார்கள். அப்போது விஷ்ணு பகவான் ஒரு திட்டத்தை தீட்டினார். சமுத்திர மந்தன் பாற்கடலை கடையும் போது, அசுரர்கள் கையில் அமிர்தம் கிடைக்கக்கூடாது என்ற காரணத்தினால் விஷ்ணு பகவான் மோகினி வடிவத்தில் பெண்ணுருவத்தை எடுத்தார். அதனால், மீண்டும் மோகினி வடிவத்தை எடுத்தால், சிவபெருமானுடன் சேர்ந்து ஒரு புனித புதல்வனை பெற்றெடுக்கலாம் என்று தீர்மானித்தார். அந்த புதல்வன் துர்கையின் சக்தியுடன் சேர்த்து மகிஷியை அழிப்பான் என்றும் தீர்மானித்தார்.

மணிகண்ட இளவரசர்

மணிகண்ட இளவரசர்

ஐயப்ப சாமி பிறந்தவுடன், அவருடைய புனிதமான பெற்றோர்கள் அவருடைய கழுத்தை (கண்டன்) சுற்றி தங்க மணியை கட்டி, அவரை பம்பை நதியில் விட்டார்கள். வாரிசில்லா அரசரான ராஜசேகரா அந்த நதியை கடக்கும் பொது அந்த சிறுவனை அங்கே கண்டெடுத்தார். மணிகண்டனை தத்தெடுத்து தன் சொந்த மகனை போல் வளர்த்தார். அதன் பின் அவருக்கென ஒரு மகனும் பின்னாளில் பிறந்தான். இருப்பினும் மணிகண்டனுக்கே மணிமகுடம் சூட்ட ஆசைப்பட்டார். ஆனால் மகாராணிக்கு தன்னுடைய சொந்த மகனே அரசாள வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனால் குணமடைய முடியாத ஒரு நோய் தனக்கு வந்துள்ளது என்று கூறி, மணிகண்டனை கொல்ல திட்டமிட்டார். மகாராணியின் ஆணை படி, அவருக்கு வந்த வியாதியை குணப்படுத்த புலிப்பால் தேவை என்று மணிகண்டனிடம் மருத்துவர் கூறினார். அதனால் மகாராணிக்காக பாலை தேடி அவர் வெளியேறினார்.

மகிஷியை கொன்றார் ஐயப்பன்

மகிஷியை கொன்றார் ஐயப்பன்

புலிப்பால் எடுக்க சென்ற வழியில், மகிஷியை சந்தித்தார் மணிகண்டன். அவர்கள் இருவருக்கும் பெரிய சண்டை உருவாகி, அழுதா ஆற்றங்கரையில் மகிஷியை கொன்றார் மணிகண்டன். புலிப்பாலை தேடி சென்ற இடத்தில், சிவபெருமானை சந்தித்து தன் பிறப்பின் ரகசியத்தை தெரிந்து கொண்டார் மணிகண்டன்.

சபரிமலையில் ஐயப்பன்

சபரிமலையில் ஐயப்பன்

மணிகண்டன் திரும்பி வருகையில், அவருக்கு எதிராக ராணி ஏற்படுத்திய இந்த சூழ்ச்சியை ஏற்கனவே மகராஜா அறிந்திருந்தார். மணிகண்டனிடம் மன்னிப்பு கோரிய மகராஜா, அவரை அங்கேயே இருக்குமாறு மன்றாடினார். ஆனால் ராஜாவை அமைதிப்படுத்திய மணிகண்டன், சபரிமலையில் ஒரு கோவில் ஒன்றை எழுப்பச் சொன்னார். மக்களின் நலனுக்காக அவர் ஐயப்ப சாமியாக அங்கேயே வசிப்பார். அதனால் அங்கே கோவில் கட்டப்பட்டது. கோவிலை பக்தர்கள் அடைய கடுமையான விரதத்தை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஐயப்ப சாமி திருமணம் செய்யாதவர் என்பதால், 10-50 வயதை உடைய பெண்கள் கோவிலுக்கு செல்ல கூடாது. கடவுளை தரிசிக்க வரும் பக்தர்கள், கடவுளை நோக்கி 18 படிகள் ஏறி வரவேண்டும். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுபவர் ஐயப்ப சாமி என்று நம்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion