Latest Updates
-
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மதுபானம் குடிப்பதை இந்து மதம் தடை செய்கிறதா?
காலம் காலமாக மதுபானம் என்பது விரும்பத்தக்க விவாதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. குடிப்பழக்கம் உடையவர்கள் அதை நியாயப்படுத்த எப்போதுமே அதற்கு தகுந்த காரணங்களை கூறுவது வாடிக்கையான ஒன்றே. நஞ்சாதல், அமைதி பெறுவது அல்லது குடிநிலை ஆகியவைகளை மதுபானத்தின் சிறந்த மாதிரியாக இந்த உலகமே பார்க்கிறது. பல நாடுகளில் அதனை ஒரு சமுதாய பழக்கமாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் இன்னும் சில நாடுகளோ அதனை அப்படி ஏற்றுக் கொள்ளவில்லை. குடிப்பழக்கத்தை ஒரு தீய பழக்கமாக பார்க்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. ஆனால் அது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தான். ஆனால் இன்னமும் கூட குடிப்பழக்கத்தை அங்கீகரிக்காத வட்டாரங்கள் இருக்க தான் செய்கிறது.
குடிப்பழக்கத்தை தீய பழக்கமாக கருதப்படுவதற்கான காரணம், அதனை மத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் வலியுறுத்துவதால். உதாரணத்திற்கு, இஸ்லாமிய மதம் அதனை பின்பற்றுபவர்களுக்கு, மதுபானம் குடிக்க தடை போடுகிறது. ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால், இந்தியாவில் மதுபானம் குடிப்பது ஒரு தீய பழக்கமாக பார்க்கப்படுவது மதத்தினாலா இல்லையா என்பது தான்.
அப்படி இல்லையென்றால், இந்தியாவில் மதுபானம் குடிப்பது தீய பழக்கமாக பார்க்கப்படுவது எந்த காரணங்களால்? பல மதக்குழுக்கள் மதுபானத்திற்கு எதிராக மிகவும் கண்டிப்பாக உள்ளது. அதனால் உண்டாகும் உடல்நல ஆபத்துக்கள் மற்றும் நிதிப் பிரச்சனைகள் பற்றியும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்து மதம் மதுபானம் குடிப்பதற்கு தடை போடுகிறதா என்பதைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். வாங்க பார்க்கலாம்!

சோமரசம்
சோமரசம் என்ற போதை வரவழைக்கும் பானத்தின் பயன்பாட்டைப் பற்றி இதிகாசங்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது. அதிலும் இதனை பழி கொடுக்கும் வேளைகளில் கடவுள்களுக்கு படைக்க பயன்படுத்தியுள்ளனர். தேவர்களின் அரசனான இந்திரன் சோமபானம் பருகி போதையில் இருப்பவராக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

ஆயுர்வேதத்தில் அல்கஹால்
நோய்களை குணப்படுத்தும் பண்டைய கால அமைப்பான ஆயுர்வேத மருந்துகளில் ஒயின் கலக்கப்பட்டுள்ளது என இந்து மதத்தில் உள்ள பல சமயத்திரு நூல்கள் கூறியுள்ளன. ஆனால் அளவுக்கு அதிகமாக மதுபானம் குடிப்பதை ஆயுர்வேதம் பரிந்துரைக்கவில்லை. பல மூலிகைகளை புளிக்க வைக்கவும் சில மருத்துவ காரணங்களுக்காகவும் மட்டுமே மதுபானம் பயன்படுத்தப்பட்டது. இருமல் மற்றும் சளியை குணப்படுத்த ஒயின் ஒரு சிறந்த நிவாரணியாக பார்க்கப்படுகிறது. ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மதுபானமும்... இந்து மதமும்...
பல இந்து மத குழுக்கள், விவாகமாகாத நிலையை கடைப்பிடித்து, மதுபானம் அல்லது வேறு எந்த வடிவத்திலான போதை வஸ்துக்களை தவிர்த்து வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், மதம் சார்ந்த தரங்களைக் கடைப்பிடிக்க மதுபானம் குடிக்கும் பழக்கத்தை தீய பழக்கமாக பார்க்கின்றனர். ஆனால் அகோரிகள் மற்றும் இதர சமய மரபு மாந்த்ரீகர்கள் தங்களின் பூஜை சடங்குகளின் ஒரு அங்கமாக தொடர்ச்சியாக மதுபானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்து மதம் மதுபானத்திற்கு தடை போட்டுள்ளதா?
இஸ்லாமிய மதத்தை போல் அல்லாமல், இந்து மதம் அப்படி எந்த ஒரு நேரடி தடையையும் போடவில்லை. சொல்லப்போனால், சில மூலிகை ஒயின்களை சரியான அளவில் எடுத்துக் கொண்டால், அதனை நல்ல மருந்தாக கருதுகின்றனர். இந்து மதம் மது பானத்தை குடிக்க யாருக்கும் தடை போடவில்லை. ஆனால் அதனை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும் என்பதையும், அதனை தவறாக பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

மதுபானத்தை பற்றி இந்து மதம் என்ன கூறுகிறது?
என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்ற பட்டியலை இந்து மதம் கூறுவதில்லை. ஆனால் எது சரி, எது தவறு என்ற சமநிலையான நோக்கை மட்டுமே அளிக்கிறது. தனக்கு என்ன வேண்டும், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியதெல்லாம் தனிப்பட்டவர்களின் தேர்வாகும். கடினமான விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு பதிலாக, எது சரி, எது தவறு என்பதை முடிவு செய்ய ஒவ்வொரு தனி நபரும் கற்றுக் கொள்ள வேண்டும்.

மதுபானத்தை பற்றி இந்து மதம் என்ன கூறுகிறது?
மதுபானத்தை தவறாக பயன்படுத்தினால், அதனால் ஏற்படும் தீமையான தாக்கங்களை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகும் ஒருவர் மதுபான வாழ்க்கையை தான் தேர்வு செய்தால், அது அவரின் தவறான தீர்ப்பையே எடுத்துக் காட்டுகிறது. மதுபான பழக்கத்தில் மூழ்கி போகிறவர்கள் தங்கள் வாழ்க்கையையே இழந்து விடுகிறார்கள் - தங்கள் இயலுணர்வு முதல் சொத்து மற்றும் குடும்ப வாழ்க்கை வரை. அதனால் நம் நாட்டில் மதுபானத்தை தீய பழக்கமாக பார்ப்பதற்கு மதத்தை விட சமுதாய காரணங்களே முக்கிய பங்கை வகிக்கிறது.



Click it and Unblock the Notifications











