Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
2014 ஆம் ஆண்டின் விஜய் விருதுகள் நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்கள்!!!
சமீபத்தில் 2014 ஆம் ஆண்டின் விஜய் விருதுகள் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், ஷாருக்கான் விஜய், சூர்யா, ஸ்ருதிஹாசன், நயன்தாரா, ஹன்சிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இவர்கள் அனைவரும் பலவாறு போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். சிலர் பல கோணங்களில் செல்ஃபி போட்டோக்களை எடுத்தனர்.
அதுமட்டுமின்றி, இந்த விழாவிற்கு வந்த ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, நயன்தாரா போன்றோர் மிகவும் அழகான உடைகளில் வந்திருந்தனர். இங்கு 2014 ஆம் ஆண்டின் விஜய் விருதுகள் நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கமலஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன்
இது ஸ்ருதிஹாசன் தனது தந்தையான கமல்ஹாசனுடன் சேர்ந்து போஸ் கொடுத்த போது எடுத்தது. இதில் ஸ்ருதிஹாசன் கவுரவ் குப்தா வடிவமைத்த கவுனில் வந்திருந்தார்.

ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கன் கூட இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். மிகவும் எளிமையான மனிதரான இவர் கருப்பு நிற கோர்ட்சூட்டில் வந்திருந்தார்.

விஜய் மற்றும் சூர்யா
இது விஜய்யும், சூர்யாவும் அருகில் ஒன்றாக அமர்ந்திருந்த போது எடுத்தது. நடிகர் விஜய் நீல நிற சட்டையிலும், சூர்யா வெள்ளை நிற சட்டையிலும் சிம்பிளாக வந்திருந்தனர்.

புடவையில் நயன்தாரா
நயன்தாரா ஆலிவ் பச்சை நிற புடவையில் க்யூட்டாக வந்திருந்தார்.

ஹன்சிகா மற்றும் குஷ்பு
நடிகை குஷ்பு மஞ்சள் நிற எம்பிடாய்டரி பார்டர் கொண்ட புடவையிலும், ஹன்சிகா வெள்ளை நிற மின்னும் உடையிலும் வந்திருந்தார். இது குஷ்பு மற்றும் ஹன்சிகா அருகில் ஒன்றாக அமர்ந்த போது எடுத்தது.

நஸ்ரியா
நடிகை நஸ்ரியா ஆரஞ்சு நிற ஃபுல் ஸ்லீவ் அனார்கலி உடையில் வந்திருந்தார்.

லட்சுமி ராய்
நடிகை லட்சுமிராய் கருப்பு நிற வெல்வெட் உடையில் வந்திருந்தார்.

விஜய் சேதுபதி
பல கலக்கான மற்றும் காமெடியான படங்களை நடித்து வரும் விஜய் சேதுபதி பச்சை நிற சட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்.

ப்ரியா ஆனந்த்
நடிகை ப்ரியா ஆனந்த் பவள நிற உடையில் வந்திருந்தார்.

சூர்யாவுடன் பூஜா மற்றும் மாளவிகா
இது சூர்யாவுடன் நடிகை பூஜா மற்றும் மாளவிகா ஒன்றாக சேர்த்து செல்ஃபி போட்டோ எடுக்கும் போது எடுத்தது.

பிரபலங்கள் குதூகலத்துடன் கொடுத்த போஸ்
இது கமல், ஷாருக்கான், சூர்யா, விஜய் அவர்களுடன், விஜய் டிவி தொகுப்பாளர் டிடி சேர்ந்து, அனைவரும் குதூகலத்துடன் கொடுத்த போஸ்.

ரஜினிகாந்த்
முக்கியமாக எந்த ஒரு விழாவிலும் அவ்வளவு எளிதில் கலந்து கொள்ளாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தன நிற குர்தா அணிந்து வந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
