Latest Updates
-
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
விநாயகரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய 6 வாழ்க்கை பாடங்கள்!!!
அறிவாற்றல், அதிர்ஷ்டம் மற்றும் வளமையை குறிக்கும் கடவுளாக விளங்குகிறார் விநாயகர். உச்ச சக்தியாக விளங்கும் விநாயகர், மனிதர்களின் தடைகளை நீக்கி அவர்களுக்கு வெற்றியை உத்திரவாதமாக அளிக்கிறார். மரபின் படி, எந்த ஒரு சமயஞ்சார்ந்த பண்டிகையாக இருந்தாலும் சரி, அது விநாயகரை வழிபடுவதில் தான் தொடங்கும்.
விநாயகரை மனித மற்றும் மிருக அங்கங்களின் கலவையாக சித்தரித்துள்ளனர். ஆழமான ஆன்மீக முக்கியத்துவத்தை கொண்டுள்ள சில தத்துவ ரீதியான கருத்துக்களை இவை வெளிப்படுத்துவதால், விநாயகரை வழிப்படுவதில் இவை முக்கிய பங்கை வகிக்கிறது.
இந்து மதத்தைப் பற்றிய தவறான கருத்துக்களும்... உண்மைகளும்...
யானை முகம், பெரிய தொந்தி, அவருடைய பீடம் மற்றும் சுண்டலி போன்றவைகளால் அவர் குறிப்பிடப்படுகிறார். அறிவு மற்றும் ஞானத்தின் தொகுப்பாக விளங்குகிறார் விநாயகர். தடைகளை அழிப்பவரான இவரை விக்னாஹர்தா என்றும் அழைக்கின்றனர். விநாயகரின் யானை முகம் ஞானத்தையும் குறிக்கிறது. அதே போல் அவரின் நீண்ட காதுகள் அவர் பக்தர்கள் கூறும் அனைத்தையும் கேட்கும் எனவும் நம்பப்படுகிறது.
விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்?
விநாயகரைப் பற்றி பல இதிகாசங்களும், கதைகளும் அடங்கியுள்ளது. இவை நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. அதே போல், அவர் ஏன் ஞானத்தின் கடவுளாக பார்க்கப்படுகிறார் என்ற தகவலும் தெரிய வரும். சரி, இப்போது விநாயகரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அருமையான 6 வாழ்க்கைப் பாடங்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.

பொறுப்புணர்வு
சிவபெருமான் விநாயகரின் தலையை வெட்டியதால், விநாயகருக்கு யானையின் தலை கிடைத்த கதை அநேகமாக நம்மில் அனைவருக்கும் தெரிந்திருக்க கூடும். நம் கடமையும் பொறுப்பும் அனைத்தையும் விட மிக முக்கியமானது என்பதை இந்த கதை நமக்கு சொல்லிக் கொடுக்கும். தன் தாய் தனக்கு அளித்த பொறுப்பை நிறைவேற்ற தன் தலையையே உடனடியாக தியாகம் செய்தார் விநாயகர்.

இருக்கும் வளங்களை சிறப்பாக பயன்படுத்துதல்
நம்மில் பல பேர் நமக்கு வாழ்க்கையில் நம்மிடம் பல விஷயங்கள் இல்லை என குறை கூறி கொண்டே தான் இருப்போம். ஆனால் இருக்கும் வளங்களை எப்படி சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதை நமக்கு விநாயகர் மற்றும் முருகனின் உலகத்தை சுற்றும் போட்டி எடுத்துக் காட்டும். ஒரு முறை உலகத்தை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என விநாயகருக்கும் முருகனுக்கும் அவர்களின் பெற்றோர் ஒரு போட்டியை வைத்தனர். இந்த போட்டியில் ஜெயிப்பவருக்கே ஞானப்பழம் எனவும் கூறப்பட்டது. தன் மயிலின் மீது அமர்ந்து உடனே புறப்பட்டார் முருகன். ஆனால் தன் எலியை வைத்து இந்த போட்டியில் ஜெயிக்க முடியாது என உணர்ந்த விநாயகர், தன் பெற்றோரை மூன்று முறை சுற்றி வந்தார். அவர்களே தன் உலகம் என்றும் கூறினார். இதனால் தன் அறிவை பயன்படுத்தி, இருக்கும் வளத்தை கொண்டு ஞானப்பழத்தையும் பெற்றார்.

மற்றவர்கள் கூறுவதை கவனிப்பவராக இருத்தல்
எப்படி சிறப்பான முறையில் கவனிக்க வேண்டும் என்பதை விநாயகரின் காதுகள் நமக்கு விளக்கும். நன்றாக காது கொடுத்து கேட்பவர்கள் தங்களை சுற்றியுள்ள சூழ்நிலைகளை திறம்பட புரிந்து கொள்ளும் ஆற்றலை பெறுவார்கள். முடிவெடுக்கும் போது, மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை கவனித்தால், வேறு ஒரு கண்ணோட்டத்தோடு சூழ்நிலையை பார்க்கும் திறனை நாம் பெறலாம். இதனால் நல்லதொரு தீர்வையும் பெறலாம்.

அதிகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
நம் அதிகாரம் நம்மை கெடுக்கும்; முழுமையான அதிகாரம் என்றால் முழுமையான கெடுதல். விநாயகரின் தும்பிக்கை எப்போதுமே சுருண்ட வண்ணம் தான் இருக்கும். அவர் தன் அதிகாரம் மற்றும் சக்தியை கட்டுப்படுத்தியுள்ளார் என்பதை தான் இது குறிக்கிறது. நம் அதிகாரம் மற்றும் சக்தியை கட்டுப்படுத்தி அதனை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பாடம் இது.

மன்னிக்கும் கலை
ஒரு முறை ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டார் விநாயகர். அங்கே அவர் வயிறு முட்ட உண்ணவும் செய்தார். திரும்பி வரும் வேளையில், அவருடைய பெரிய தொந்தியை பார்த்து நிலா அவரை கிண்டல் செய்ததாம். இதனால் நிலா மறைந்து போகட்டும் என அதற்கு சாபம் அளித்தார் விநாயகர். தன் தவறை உணர்ந்த நிலா உடனே தன் தவறுக்காக மன்னிப்பு கோரியது. நிலவை உடனே மன்னித்த விநாயகர், தினமும் நிலவு கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கும் என்றும், மாதம் ஒரு முறை மறையும் என்றும் தன் சாபத்தை தளர்த்தினார். அதனால் அறிவின் கடவுளான விநாயகரிடம் இருந்து மன்னிக்கும் கலையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அனைத்து உயிரினங்களிடம் பணிவும் மரியாதையும்
இதற்கு விநாயகரின் வாகனமே ஒரு திறந்த உதாரணம். மிகப்பெரிய கடவுள் ஒரு சுண்டலி மீது சவாரி செய்கிறார். கடவுளிடம் எந்த ஒரு வேற்றுமையும் இல்லை என்றும், மிகச்சிறிய உயிரினம் என்றாலும் அதன் மீது மரியாதை வைத்துள்ளார் என்றும் எடுத்துக் காட்டுகிறது. இது நாம் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான குணம். அப்போது தான் நாம் மதிக்கத்தக்க நிலையில் நம்மால் வாழ்க்கையில் முன்னேற முடியும்.



Click it and Unblock the Notifications











