பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

By Ashok CR

விஷ்ணு பெருமானின் தசாவதாரம் அல்லது 10 அவதாரங்களை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சிவபெருமானுக்கும் அவதாரங்கள் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? சொல்லப்போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். அவதாரம் என்றால் கடவுள் வேண்டுமென்றே பூமியில் மனிதனாக அவதரிப்பது. மனிதர்களை காப்பாற்ற தீமையை அழிக்கவே அவதாரம் எடுப்பதன் முக்கிய நோக்கமாகும்.

சுவாரஸ்யமான வேறு: ருத்ராட்சை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!!

சிவபெருமானை பற்றி பார்க்கையில், வெகு சிலருக்கே அவரின் 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அவரின் இந்த 19 அவதாரங்களுக்கும் குறிப்பிட்ட காரணங்கள் இருந்தது. அதன் உட்சபட்ச நோக்கம் மனித இனத்தின் நலனே.

சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி தெரிய வேண்டுமானால் மேலும் படிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிப்லாட் அவதாரம்

பிப்லாட் அவதாரம்

தாதிச்சி துறவியின் வீட்டில் பிப்லாட்டாக பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே அத்துறவி அவர் வீட்டை விட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாமல் இருந்ததால் தன் தந்தை வீட்டை விட்டு வெளியேறினார் என்பதை பிப்லாட் வளரும் போது தெரிந்து கொண்டான். அதனால் சனியை பிப்லாட் சபித்து, தன் விண்ணக இருப்பிடத்தில் இருந்து சனி கிரகத்தை விழச் செய்தான். பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு சனியை மன்னித்தான். அதனால் பிப்லாட் வடிவிலான சிவபெருமானை தரிசித்தால் நம்மை பிடித்த சனி தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

நந்தி அவதாரம்

நந்தி அவதாரம்

நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்றமாகும். சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர். மந்தைகளின் பாதுகாவலனாக சிவபெருமானின் நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது. நான்கு கைகளை கொண்ட காளையாக அவர் தீட்டப்பட்டுள்ளார். கோடரி மற்றும் மானை இரண்டு கைகள் கொண்டிருக்கும். மற்ற இரண்டா கைகள் ஒன்றாக சேர்த்திருக்கும்.

வீரபத்திர அவதாரம்

வீரபத்திர அவதாரம்

டக்ஷ்ணா யாகத்தில் சதி தேவி தன்னை பலியாக்கி கொண்டதால், சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார். தன் தலையில் இருந்து சிறிது முடியை எடுத்து அதனை தரையில் போட்டார். அதிலிருந்து பிறந்தவர்கள் தான் வீரபத்திரர் மற்றும் ருத்ரகாளி. சிவபெருமானின் கடுமையான அவதாரம் இதுவே. மூன்று கடுஞ்சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருக்கும் கருமையான கடவுளாக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத்தில் டக்ஷ்ணாவின் வெட்டுண்ட தலையை கொண்டிருக்கும்.

பைரவ அவதாரம்

பைரவ அவதாரம்

பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் யார் சிறந்தவர்கள் என்ற சண்டை எழுந்த போது, சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார். தன் உயர்வானநிலையை பிரம்மன் மறைத்த போது, சிவபெருமான் பைரவ வடிவத்தை எடுத்து பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தான். துண்டித்த பிரம்மனின் தலை பார்த்த போது, ஒரு பிராமணனை கொன்ற குற்ற உணர்வு சிவபெருமானுக்கு ஏற்பட்டது. அதனால் 12 வருடத்திற்கு ஒரு பிக்ஷாடனாவாக, பிரம்மனின் மண்டை ஓட்டை சுமந்து அவர் அவர் சுற்றி திரிய வேண்டி இருந்தது. இந்த வடிவத்தில் அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமான் காத்து வந்தார் என்று நம்பப்படுகிறது.

அஸ்வத்ஹமா

அஸ்வத்ஹமா

பாற்கடலை கடைந்த போது, சிவபெருமான் கொடிய நஞ்சை உட்கொண்ட நேரத்திகுள்நேரத்தில், அந்த நஞ்சு அவர் தொண்டையில் எரியத் தொடங்கியது. சிவபெருமானின் உள்ளிருந்த விஷ் புருஷ் வெளிவந்தது. அதற்கு கடவுள் ஒரு வரத்தையும் அளித்தார். அதன் படி, பூமியில் துரோணரின் மகனாக பிறந்து எதிர்த்து நின்ற அனைத்து சத்ரியர்களையும் கொள்வான் விஷ் புருஷ். அதனால் அஸ்வத்ஹமாவாக பிறந்தான் விஷ் புருஷ்.

ஷரபா அவதாரம்

ஷரபா அவதாரம்

ஷரபா வடிவத்திலான சிவபெருமான் பாதி பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருப்பார். சிவ புராணத்தின் படி, விஷ்ணுவின் பாதி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்க ஷரபா வடிவத்தை எடுத்தார் சிவபெருமான்.

க்ரஹபதி அவதாரம்

க்ரஹபதி அவதாரம்

விஸ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் அவரது மகனாக பிறந்தார் சிவபெருமான். அவருக்கு க்ரஹபதி என பெயரிட்டார் விஸ்வனார். க்ரஹபதிக்கு 9 வயதான போது, அவர் இறக்க போகிறார் என்று அவரது பெற்றோரிடம் தெரிவித்தார் நாரதர். அதனால் மரணத்தை ஜெயித்திட காசிக்கு சென்றான் க்ரஹபதி. அங்கே சிவபெருமானிடம் ஆசி பெற்றதால் மரணத்தை ஜெயித்தான் க்ரஹபதி.

துர்வாசா

துர்வாசா

அண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க இந்த வடிவத்தை எடுத்தார் சிவபெருமான். துர்வாசா என்பவர் முன் கோபத்திற்கு பெயர் போன மிகப்பெரிய துறவியாவார்.

அனுமான்

அனுமான்

குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் ஒரு அவதாரமாகும். ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு சேவை புரிந்திடவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்துள்ளார்.

ரிஷப அவதாரம்

ரிஷப அவதாரம்

பாற்கடல் கடைதலுக்கு பிறகு, கீழோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான். அங்கே ஒரு அழகிய பெண்ணின் பார்த்து மயங்கினார். அங்கே தங்கியிருந்த போது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரத்தனத்துடன் கொடியவர்களாக இருந்தனர். அனைத்து கடவுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான தொல்லைகளை அளித்து வந்தனர். அப்போது சிவபெருமான் காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து விஷ்ணு பகவானின் அனைத்து கொடிய மகன்களையும் கொன்றார். காளையுடன் சண்டையிட விஷ்ணு பகவான் வந்த போது அது சிவபெருமானின் அவதாரம் என்பதை அவர் உணர்ந்து அவர் இடத்திற்கே சென்று விட்டார்.

யாதிநாத் அவதாரம்

யாதிநாத் அவதாரம்

ஒரு முறை ஆஹுக் என்று பழங்குடியை சேர்ந்த ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனும் அவன் மனைவியும் தீவிர சிவ பக்தர்கள் ஆவார்கள். ஒரு முறை யாதிநாத் வடிவில் சிவபெருமான் அவர்களை சந்தித்தார். இரண்டு பேர் மட்டுமே இருக்க கூடிய சின்ன குடிசையில் அவர்கள் இருந்ததால், விருந்தாளியை உள்ளே தங்க வைத்து தான் வெளியே படுக்க தீர்மானித்தான் ஆஹுக். ஆனால் துரதிஷ்டவசமாக அன்று இரவு ஒரு வனவிலங்கால் கொல்லப்பட்டான் ஆஹுக். மறுநாள் காலை, ஆஹுக் இறந்திருப்பதை கண்டு அவன் மனைவியும் சாக நினைத்தால். அப்போது தன் உண்மையான ரூபத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளுக்கு ஒரு வரமளித்தார். அதன் படி, அவளும் அவள் கணவனும் நளன் மற்றும் தமயந்தியாக மீண்டும் பிறப்பார்கள். அவர்களை சிவபெருமானே சேர்த்து வைப்பார்.

கிருஷ்ண தர்ஷன் அவதாரம்

கிருஷ்ண தர்ஷன் அவதாரம்

ஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

பிக்ஷுவர்யா அவதாரம்

பிக்ஷுவர்யா அவதாரம்

அனைத்து விதமான ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை காக்கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

சுரேஷ்வர் அவதாரம்

சுரேஷ்வர் அவதாரம்

தன் பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவை ஒரு முறை எடுத்தார் சிவபெருமான். அதனால் தான் அவரை சுரேஷ்வர் என்று அழைக்கிறோம்.

கீரத் அவதாரம்

கீரத் அவதாரம்

அர்ஜுனன் தவத்தில் இருந்த போது கீரத் அல்லது வேட்டைக்காரன் வடிவை எடுத்தார் சிவபெருமான். அர்ஜுனனை கொல்ல மூக்கா என்ற அரக்கனை அனுப்பி வைத்தார் துரியோதனன். காட்டுப்பன்றி போல் தன்னை மாற்றிக்கொண்டான் மூக்கா. ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ஜுனனின் கவனம் ஒரு பெரிய சத்தத்தால் சிதறியது. அவன் கண்ணை திறந்து மூக்காவை பார்த்தான். அந்த காட்டுப்பன்றியை அர்ஜுனனும் கீரத்தும் தங்களின் அம்புகளால் வீழ்த்தினார்கள். பின் யார் அந்த காட்டுப்பன்றியை முதலில் வீழ்த்தியது என்ற சண்டை கீரத்திற்கும் அர்ஜுனனுக்கும் பிறந்தது. கீரத் வடிவில் இருந்த சிவபெருமானை சண்டைக்கு வரச்சொல்லி சவால் விசுத்தான் அர்ஜுனன். அர்ஜுனின் வீரத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு தன்னுடைய பஷுபதா ஆயுதத்தை பரிசளித்தார்.

சுண்டன்டர்கா அவதாரம்

சுண்டன்டர்கா அவதாரம்

திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை ஹிமாலயாவிடம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர் இந்த அவதாரத்தை எடுத்தார்.

பிரமச்சாரி அவதாரம்

பிரமச்சாரி அவதாரம்

சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.

யக்சேஷ்வர் அவதாரம்

யக்சேஷ்வர் அவதாரம்

கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகங்காரத்தை ஒழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.

அவதுட் அவதாரம்

அவதுட் அவதாரம்

இந்திரனின் இறுமாப்பை அழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion