Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
25,000 கோடி மதிப்புள்ள மாளிகையில் வசிக்கும் இந்த இந்தியர் யார் தெரியுமா? அம்பானி வீட்டை விட இது ரொம்ப காஸ்ட்லி
இந்தியாவின் ஆடம்பர மாளிகை எதுவென்றால் அது முகேஷ் அம்பானி அவரது குடும்பத்தினருடன் வசிக்கும் ஆன்டிலியாதான் என்றுதான் பெரும்பாலான மக்கள் கூறுவார்கள். இந்த ஆடம்பர மாளிகையின் மதிப்பு கிட்டதட்ட 15,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகவும் ஆடம்பரமான தனிநபர் மாளிகைகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இதைவிட பல மடங்கு ஆடம்பரமான மாளிகை ஒன்று இந்தியாவிலேயே உள்ளது. அந்த வீட்டில் வசிப்பவர்கள் இந்தியாவின் முக்கிய அரச குடும்பத்தினர் ஆவர்.
'நவீன இந்தியாவின் மகாராணி' என்று அழைக்கப்படும் ராதிகாராஜே கெய்க்வாட், பரோடாவின் மகாராஜா சமர்ஜித்சிங் கெய்க்வாட்டின் மனைவியாவார். அவர் பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் மற்றும் ஜவுளி மறுமலர்ச்சியில்லும் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி வருகிறார். வான்கனேர் மாநிலத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது பங்களிப்புகளுக்காக மில்லியனர் ஆசியா இதழில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவின் முக்கிய தம்பதிகளான இந்த ஜோடி லட்சுமி விலாஸ் அரண்மனையில் வசிக்கிறது, இது ரூ.25,000 கோடி மதிப்புள்ள ஒரு ஆடமபரமான அரண்மனையாகும், இது உலகளவில் மிகவும் விலையுயர்ந்த தனியார் வீடுகளில் ஒன்றாகும். பரோடா அரண்மனை என்றும் அழைக்கப்படும் இந்த அரண்மனை, பிரிட்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரியது என்று கூறப்படுகிறது. குஜராத்தின் வதோதராவின் முன்னாள் ஆட்சியாளர்களாக இருந்த கெய்க்வாட் அரச குடும்பத்தின் இல்லமாகவும் இது உள்ளது.
மன்னர் சமர்ஜித்சிங்
மகாராணி ராதிகராஜே கெய்க்வாட்டின் கணவர் சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட், ஏப்ரல் 25, 1967 இல் பிறந்தார், அவர் ஒரு கிரிக்கெட் நிர்வாகி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் ரஞ்சி டிராபி போட்டியில் தனது மாநிலத்தின் சார்பாக விளையாடியுள்ளார். சமர்ஜித்சிங்கின் அரச தொடர்புகளைப் பொறுத்தவரை, கெய்க்வாட்கள் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து பரோடாவில் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தனர். அவரது தந்தை மகாராஜா ரஞ்சித்சிங் பிரதாப்சிங் கெய்க்வாட்டின் மரணத்திற்குப் பிறகு சமர்ஜித்சிங் அரியணைக்கு வாரிசானார். 2012 ஆம் ஆண்டில், லட்சுமி விலாஸ் அரண்மனையில் சமர்ஜித்சிங் மகாராஜாவாக முடிசூட்டப்பட்டார்.
லட்சுமி விலாஸ் அரண்மனை
இந்தியாவின் ஆடமபரமான இந்த மாளிகை 1890 ஆம் ஆண்டு கெய்க்வாட் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகாராஜா சயாஜிராவ் கெய்க்வாட் III அவர்களால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனை, உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமாக விளங்குகிறது, இதன் கட்டுமான செலவு அந்த காலகட்டத்திலேயே 25 லட்சத்திற்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அற்புதமான அரண்மனை லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் ஆடம்பரமான இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனையையும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் ரூ. 15,000 கோடி மதிப்புள்ள ஆடம்பர மாளிகையான முகேஷ் அம்பானியின் ஆன்டிலியாவையும் கூட மிஞ்சி நிற்கிறது.
700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள லட்சுமி விலாஸ் அரண்மனை, 170 அறைகளுடன் ஒரு பரந்த தோட்டம், ஒரு பெரிய குதிரை லாயம், ஒரு நீச்சல் குளம் மற்றும் ஒரு தனியார் கோல்ஃப் மைதானத்தையும் கொண்டுள்ளது. இன்று உலகின் மிக விலையுயர்ந்த தனியார் வீடாகக் கருதப்படும் இந்த பிரமாண்டமான அரண்மனையின் முக்கிய கட்டிடக் கலைஞர் பிரிட்டிஷ் பொறியாளர் மேஜர் சார்லஸ் மான்ட் ஆவார்.



Click it and Unblock the Notifications
