Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
500 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கேதார யோகம்: ஏப்ரல் 23 முதல் இந்த 4 ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது
கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் நிலைகளால் யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில கிரகங்கள் அரிய யோகங்களை உருவாக்கும் மற்றும் அவை பல ஆண்டுகளுக்கு பின் உருவாகும். அப்படி 500 ஆண்டுகளுக்கு பின் கோதார யோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகமானது ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் உருவாகிறது.
கோதார யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில் ராகு-கேதுவைத் தவிர, மற்ற 7 கிரகங்களும் ஏதேனும் 4 ராசி வீடுகளில் இருக்கும் பட்சத்தில் உருவாகும். அப்படிப்பட்ட கேதார யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல பண வரவையும், தொழில் முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கேதார யோகமானது அற்புதமான பலனைத் தரும். ஏனெனில் மேஷ ராசியின் உச்ச வீட்டில் சூரியன், குரு, ராகு, புதன் ஆகிய 4 கிரகங்கள் இருக்கும். இரண்டாவது வீட்டில் சுக்கிரனும், மூன்றாவது வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரனும் இருக்கும். மேலும் சனி வருமான வீட்டில் இருக்கும்.
இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் திடீர் பண வரவைப் பெறுவார்கள். பணிபரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்ட. இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். உங்கள் வாழ்க்கைத் துணையும் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கேதார யோகம் அட்டகாசமான பலன்களைத் தரும். குறிப்பாக கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதே வேளையில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கேதார யோகமானது அற்புதமான பலன்களை தரவுள்ளது. குறிப்பாக வேலையில் முன்னேற்றம் ஏற்படும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணத்தை அதிகம் சேர்க்க முடியும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் செலவுகள் சற்று அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு கேதார யோகம் ஏராளமான நற்பலன்களை வழங்கவுள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
