Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
Karthigai Deepam 2023: சிவனின் நெருப்பு ஸ்தலமான திருவண்ணாமலை கார்த்திகை தீபம் பற்றி அறிந்திராத விஷயங்கள்!
Karthigai Deepam 2023: நம் தென்னிந்தியாவை பொருத்த வரை சிவனின் வழிபாட்டு தலங்கள் மிக அதிகம். அந்த வகையில் பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு சிவனை 5 விதமான தலங்களில் வழிபட்டு வருகிறோம். சிதம்பரம் கோயிலில் ஆகாயமாகவும், திருவணைக்காவல் கோவிலில் நீராகவும், திருவண்ணாமலையில் நெருப்பாகவும், காஞ்சிபுரத்தில் நிலமாகவும், ஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் வாயுவாகவும் சிவனை வழிபட்டு வருகிறோம்.
கார்த்திகை தீபம் என்பது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வரும் தீபத் திருவிழா ஆகும். இந்த தீபத் திருவிழா பெளர்ணமி நாளில் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை என்பது வானில் ஜொலிக்கும் ஆறு நட்சத்திரங்களின் கூட்டத்தை குறிக்கிறது. நம்முடைய சங்க இலக்கியமான அகநானூறு பாடலில் கூட கார்த்திகை தீபத் திருவிழா குறித்த குறிப்புகள் உள்ளது.

அந்த வகையில் நம் தென்னிந்தியாவில் மிகவும் சிறப்பு பெற்ற திருவிழா தான் இந்த திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆகும். சிவனை நெருப்பாக பாகித்து இந்த தீபத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபத்தை காண கோடிக்கணக்கான மக்கள் வருகின்றனர். இந்த திருவண்ணாமலை தீபத் திருவிழா குறித்த பல ஆச்சர்யமூட்டும் தகவலை நாம் இங்கே அறிந்து கொள்வோம்.
திருவண்ணாமலை தீபம்
அண்ணாமலை தீபம் அல்லது மகாபாரணி தீபம் என்பது திருவண்ணாமலையின் உச்சியில் எரியும் பிரகாசமான நெருப்பைக் குறிக்கிறது. இந்த திருவண்ணாமலை தீபம் குறித்த புராணக் கதை இன்றளவும் புகழ் பெற்றது. ஒருமுறை மும்மூர்த்திகளின் இருவரான பிரம்மனும் விஷ்ணுவும் ஒருவருக்கொருவர் தலைக்கணத்தில் சண்டை போட்டுக் கொண்டனர்.
அப்பொழுது அவர்களின் தலைக்கணத்தை போக்கும் வகையில் சிவன் ஒரு சவாலை அவர்களுக்கு கொடுத்தார். அப்பொழுது அவர்கள் சிவனின் தலையின் உச்சி மற்றும் பாதங்களை கண்டறியும் சவாலை ஏற்றுக் கொண்டார்கள். சிவனும் தன் உருவத்தை பெரிதுபடுத்தி விஸ்வரூபம் எடுத்தார். பிரம்மனும் விஷ்ணுவும் ஏழு லோகங்கள் பயணம் செய்தும் சிவனின் தலை உச்சியையும் பாதங்களையும் காண இயலவில்லை.
பிரம்மனும் விஷ்ணுவும் அவர்கள் சவாலில் தோல்வியை தழுவினர். அப்பொழுது சிவபெருமான் ஆரம்பமும் முடிவும் இல்லாத நெருப்பு ஜோதியாக எரிந்தார். அப்பொழுது அவரின் அருட்பெருஞ்ஜோதி (தெய்வீக ஒளி) திருவண்ணாமலையில் தோன்றியது என்கிறது புராண வரலாறு. எனவே தான் அன்று முதல் இன்று வரை திருவண்ணாமலை தீபம் கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி நாளில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த நன்னாளில் திருவண்ணாமலை ஊரின் மலை உச்சியில் சூரிய அஸ்தமனத்தின் போது ஒரு பெரிய தீபம் ஏற்றப்படும். இதைக் காண கோடிக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஜோதியை கண்டு சிவபெருமானையும் வழிபட்டு செல்வார்கள்.
திருவண்ணாமலை தீபம் பார்த்தால் கிடைக்கும் பயன்கள்
கார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். அவர்கள் அப்படி வழிபடும் போது "ஹரோஹரா" என்று ஓதுவார்கள். அதாவது உங்கள் நிலையான தியானத்தின் மூலம் எரியும் ஒளியை பார்க்கும் போது அவர்கள் அழியாமையை அடைகிறார்கள். சிவபெருமானின் ஆசியும் அருளும் எல்லாருக்கும் கிடைக்கும். மனிதப்பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த கார்த்திகை தீபத்தை பார்ப்பது உங்களுக்கு மோட்சத்தை தரும். பிறவித் துன்பம் இனி இருக்காது என்பது நம்பிக்கை.
மகா தீபம் எப்படி ஏற்றப்படுகிறது?
இந்த மகா தீபத்தை ஏற்ற முதலில் செப்பினால் ஆன கொப்பரையை ஒன்றினை 2668 அடி மலை உச்சியில் வைப்பார்கள். இந்த கொப்பரை பாத்திரம் கிட்டத்தட்ட 5 அடி உயரத்தில் இருக்கும். இந்த தீபத்தை சாதாரண தீபம் மாதிரி எண்ணெய் ஊற்றி ஏற்ற மாட்டார்கள். இந்த தீபத்தை ஏற்ற 2000 மீட்டர் வரை கொண்ட காடா துணி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
பக்தர்கள் வேண்டிக் கொண்டு இந்த காடா துணியை வாங்கி காணிக்கையாக கொடுக்கலாம். பிறகு ஒரு நெருப்பு பந்தத்தை வைத்து தீபத்தை ஏற்றுவார்கள். 11 நாட்கள் இந்த தீபம் அணையாமல் எரிய வேண்டும். இந்த திருவண்ணாமலை தீபத்தை கண் குளிர ஒரு முறையாவது பார்ப்பது முக்தி அடையவும், பல செல்வங்கள் கிடைக்கவும், வம்சம் தழைக்கவும் அருளுகிறது. அகங்காரம், பேராசை மற்றும் மாயை ஆகியவை அழிக்கப்படும்.
கார்த்திகை தீபத்தை கடைபிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
* கார்த்திகை தீபச் சுடர் உங்கள் வாழ்வின் இருளை போக்க வல்லது
* இது உங்களுக்கு செல்வங்கள், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை வழங்கும்.
* நீங்கள் நினைத்த ஆசைகள் நிறைவேறும்
* கவலைகள் நீங்கி மன அமைதி கிடைக்கும்
திருவண்ணாமலை கிரிவலம்
மகா தீபம் ஏற்றும் நேரத்தில் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் என்ற கோலத்தில் கோயிலில் பக்தர்களுக்கு சிவபெருமான் அருள்பாலிக்கிறார். மகா தீபமானது புனித மலையைச் சுற்றி 35 கிலோமீட்டர் சுற்றளவில் தெரியும். லட்சக்கணக்கான பக்தர்கள் 16 கி.மீ கிரிவலம் (புனித மலையை சுற்றி வருதல்) வலம் வருவார்கள். சிவனின் நாமத்தை உச்சரித்தவாறு வலம் வருவார்கள். மகா தீபம் ஏற்றிய பிறகு கிடைக்கும் மை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.



Click it and Unblock the Notifications