Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
கர்நாடகாவில் நாளை ஆட்சியை பிடிக்கப்போவது யார்?இதற்கு முன்பு இருந்த முதல்வர்கள் பற்றிய இந்த செய்தி தெரியுமா?
Karnataka Election 2023 In Tamil: கர்நாடக மாநிலமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நாள் நாளை வரவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் கர்நாடகாவை யார் ஆட்சி செய்ய போகிறார்கள்? என்பது நாளை மாலை தெரிந்துவிடும்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. 37,777 இடங்களில் உள்ள 58,545 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 72.67 சதவீத ஓட்டுகள் பதிவாகியிருந்த நிலையில், நாளை காலை ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. களத்தில் 2,615 வேட்பாளர்கள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிப்பதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

பெரிய அரசியல் கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை அனைவரும் நாளைய தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த முறை மாநிலத்தின் தேர்தல் வரலாறு என்னவாக இருக்கும்? யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள் என்று நாளை தெரிந்துகொள்ளலாம்.
1956ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மாநிலத்தில் 16 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 23 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராகி உள்ளனர். ஆனால் பல முதல்வர்கள் பதவிக்காலம் முடியும் முன்பே பதவியை விட்டு விலக்கப்பட்டனர். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதே நிலைதான் இருந்தது.
முதல்வர் பதவிக்காலம்
மாநிலத்தில் மூன்று முதல்வர்கள் மட்டுமே ஐந்து ஆண்டுகள், அதவாது பதவிக்காலம் முழுவதும் முதல்வராக இருந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் தங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே பதவியை விட்டு வெளியேறினர். 75 ஆண்டுகால அரசியல் வரலாறு கர்நாடகாவில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கர்நாடகம் முதலில் மைசூர் என்று அழைக்கப்பட்டது. 1983 வரை காங்கிரஸ் கட்சிதான் கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்தது.
ஆட்சியில் இருந்த முதல்வர்கள்
கர்நாடகாவில் 1983 முதல் 1988 வரை முதல்வராக பதவியில் இருந்தவர், ராமகிருஷ்ண ஹெக்டே. ஆனால், ஐந்தாண்டுகளில் மூன்று முறை இவர் முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திர இந்தியாவில் 1956ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் முதல் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் நிஜலிங்கப்பா பதவி வகித்தார்.
1978இல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அணி 149 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் தேவராஜ் அர்ஸ் முதல்வரானார். 1983 தேர்தலில் ஜனதா கட்சி 95 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் 1999 சட்டமன்ற தேர்தலில், ராமகிருஷ்ண ஹெக்டே முதல் காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்து ஆட்சிக்கு வந்தார்.
1994 தேர்தலில் ஜனதா தளம் 115 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 1994 டிசம்பர் 11 முதல் 1996 மே 31 வரை எச்.டி.தேவே கவுடா முதலமைச்சராக இருந்தார். 2004 சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க அரசு முடிவு செய்தது. பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது.
முதலமைச்சராக ஏற்ற இறக்கங்கள்
2006 வரை, தரம் சிங் மாநிலத்தின் முதல்வராக இருந்தார். ஆனால் சாம்க்கிய அரசு கவிழ்ந்த பிறகு, எச்.டி.குமாரசாமி ஆட்சிக்கு வந்தார். ஆனால் 30 நாட்களுக்குப் பிறகு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவரும் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அடுத்த தேர்தல் வரை 189 நாட்களுக்கு கர்நாடகா குடியரசுத் தலைவர் ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் 2007இல் எடியூரப்பா முதல்வராக ஏழு நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.
முதல்வர் பதவியை அலங்கரித்தவர்கள்
எஸ் நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல், டி தேவராஜ் அர்ஸ், எச்டி குமாரசாமி ஆகியோர் இரண்டு முறை போட்டியிட்டு முதல்வராக பதவியேற்றனர். பிஎஸ் எடியூரப்பா நான்கு முறை கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ளார். தேவராஜ், சித்தராமையா, நிஜலிங்கப்பா ஆகியோர் தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் முதல்வராக பதவியேற்றுள்ளனர்.
2023 தேர்தல் முடிவு
கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பில் தொங்கு அமைச்சரவையே ஆட்சியமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன என்பது பெரும்பான்மையான கருத்து. கர்நாடகாவில் 224 தொகுதிகள் உள்ள நிலையில், அறுதிப் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும். பொறுத்திருந்து பார்ப்போம் கர்நாடக வரலாற்றில் நாளை என்ன மாற்றங்கள் நடக்கிறது என்று!



Click it and Unblock the Notifications













