Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
குரு-புதன் சேர்க்கையால் மார்ச் 31 வரை இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண பலன்கள் கிடைக்கப் போகுது..
குருவுடன் புதன் இணைந்திருப்பதால், அதன் பலவீனம் ரத்து செய்யப்பட்டு, குருவின் அருளால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
Jupiter Mercury Conjunction In Pisces: நவகிரகங்களில் குரு அறிவின் காரணியாகவும், புதன் புத்திசாலித்தனத்தின் காரணியாகவும் கருதப்படுகிறார்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒரு ராசியில் இணைந்திருந்தால், அதன் விளைவாக மரியாதை, அதிகாரம், பதவி போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் மீன ராசியில் புதன் பலவீனமாக இருப்பார். இதனால் மீன ராசியில் புதன் இருக்கும் காலத்தில், புதன் நற்பலனைத் தராமல் போகலாம்.
ஆனால் இந்த மீன ராசியில் தற்போது குரு பகவான் பயணித்து வருகிறார். அதோடு 2023 மார்ச் 16 ஆம் தேதி புதன் அஸ்தமன நிலையில் மீன ராசிக்கு சென்றார். அஸ்தமன நிலையில் இருக்கும் புதன் பலவீனமாக இருப்பார்.

ஆனால் குருவுடன் புதன் இணைந்திருப்பதால், அதன் பலவீனம் ரத்து செய்யப்பட்டு, குருவின் அருளால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இப்போது மீன ராசியில் குருவும் புதனும் இணைந்து பயணிப்பதால் எந்த ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் குரு-புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. தகவல் தொடர்பு, பேச்சு ஆகிய துறையில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும்.
எழுத்து தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கும் இந்த சேர்க்கை காலம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக, இந்த குரு-புதன் சேர்க்கை நல்ல பலனைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சொந்தமாக தொழில் செய்து கொண்டிருப்பவர்கள், இக்காலத்தில் பெரிய மாற்றங்களைக் காண நேரிடுவதோடு, நல்ல பண பலன்களையும் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் குரு-புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றி கிடைக்கும். கல்வி, வங்கி, நிதி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். விருப்பமான பொருளை வாங்குவீர்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்க்ள். சமுகத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். ஏனெனில் பதவி உயர்வு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறக்கூடும். 7 ஆவது வீடு கூட்டு வணிகத்தைக் குறிக்கிறது. எனவே வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். செல்வாக்குமிக்க சில நபர்களை சந்திப்பீர்கள். அவர்களின் உதவியால் தொலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். முக்கியமாக உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் பொருள் ஆதாயங்களைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருள் இன்பங்கள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் உருவாகும். முக்கியமாக தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும்.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் கிடைக்கும். வாழ்க்கையில் பலவிதமான பொருள் இன்பங்களைப் பெறக்கூடும். திருமண வாழ்க்கையும், நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
