Latest Updates
-
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
50 ஆண்டுகளுக்கு பின் 2024ல் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது...
Navpancham Rajyoga 2024 After 50 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுகின்றன. அப்படி மாறும் போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் குரு, சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் 2024-ல் இரட்டை நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இந்த இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவுள்ளது. இதனால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல நிதி நன்மைகளையும், தொழிலில் நல்ல முன்னேற்றங்களையும் காணவுள்ளார்கள். அதோடு வெற்றி மேல் வெற்றியைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது மங்களகரமானதாக இருக்கப் போகிறது. முக்கியமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலையில் நல்ல முன்னற்றம் ஏற்படப் போகிறது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலர் ஜனவரி 14 ஆம் தேதிக்குள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில நல்ல செய்திகளைப் பெறலாம். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசையைக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது நற்பலன்களை வாரி வழங்கும். முக்கியமாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில்நுட்பம், ஆசிரியர் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இக்காலகட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே நீங்கள் முதலீடுகளை செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது அற்புதமான பலன்களை வழங்கும். அதுவும் நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், இக்காலத்தில் அதில் வெற்றி கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்திலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம். சிலர் விரும்பிய இடமாற்றத்தைப் பெற வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறு. வணிகர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications