Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Navpancham Rajyoga After 50 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். சில யோகங்கள் பல ஆண்டுகளுக்கு பின் உருவாகும்.
அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையிலும், நாட்டிலும் பலவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு மற்றும் செவ்வாய் நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த ராஜயோகமானது பல ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இந்த மங்களகரமான ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. அதோடு அவர்களின் நீண்ட நாள் விருப்பங்களும் நிறைவேறவுள்ளது.
மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கவுள்ளது. இப்போது நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகமானது மிகவும் அற்புதமான பலன்களை வழங்கவுள்ளது. முக்கியமாக சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். திடீரென்று உங்களைத் தேடி பணம் வரும். இக்காலத்தில் நல்ல பண வரவு இருக்கும்.
நிதி நிலை வலுபெறும். மேலும் பணிபரிபவர்கள் பதவி உயர்வையும், சம்பள உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகமானது எதிர்பாராத நற்பலன்களை வாரி வழங்கவுள்ளது. இக்காலத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை வழக்கத்தை விட பிரகாசமாக இருக்கும். பல வழிகளில் இருந்து பண ஆதாயத்தைப் பெறுவீர்கள்.
நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பொது சேவையில் இருப்பவர்களுக்கு அற்புதமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகம் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும் லாபத்தையும் தரும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ஆனால் இக்காலத்தில் மூன்றாம் நபரால் சில டென்சனை சந்திக்கக்கூடும். இருப்பினும் குருவின் அருளால் உங்கள் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். இதனால் எப்பேற்பட்ட சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோக காலமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிக்கிய பணம் கைக்கு வரும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்கும்.
நீண்ட தூர பயணத்திற்கான வாய்ப்புள்ளது. மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications