Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
2030-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு...கோடிக்கணக்கான மக்கள் இறக்கும் அபாயம்..எச்சரிக்கும் புதிய பாபா வாங்கா!
பாபா வாங்கா உலகம் முழுக்க பிரபலமான ஒரு தீர்க்கதரிசி ஆவார். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின்னால் அவரது புகழ் எல்லை கடந்து சென்றுவிட்டது. பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற இந்த தீர்க்கதரிசி 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது விசித்திரமான கணிப்புகளால் உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பொதுவாக "பால்கனின் நோஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படும் பாபா வாங்கா, உலகளாவிய முக்கிய நிகழ்வுகள், கம்யூனிசத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் பல முக்கிய அரசியல் நிகழ்வுகளை சரியாக முன்கூட்டியே கணித்ததால் வரலாற்றில் மிகப்பெரிய புகழைப் பெற்றுள்ளார். தற்போது எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்னறிவிக்கும் திறன் தனக்கு இருப்பதாகக் கூறும் பலர் உலகெங்கிலும் அதிகரித்துள்ளனர். அவர்களில் மிகவும் பிரபலமானவராகி வருபவர் ஜப்பானின் ரியோ டாட்சுகி.

யார் இந்த ரியோ டாட்சுகி?
ஜப்பானின் ரியோ டாட்சுகி கடந்த காலத்தில் பல கணிப்புகளைச் செய்துள்ளார், அவை காலப்போக்கில் உண்மையாகிவிட்டன. குறிப்பாக, கொரோனா வைரஸ் தொற்றுநோய் உருவாக்கப்போவதை அவர் முன்கூட்டியே கணித்திருந்தார். அவரது துல்லியமான கணிப்புகள் காரணமாக, அவர் தற்போது "ஜப்பானின் பாபா வாங்கா" என்று அழைக்கப்படுகிறார்.
2030 ஆம் ஆண்டில், இலட்சக்கணக்கான மக்களைக் கொல்லக்கூடிய மற்றொரு கொடிய வைரஸ் உருவாகும் என்று ரியோ டாட்சுகி கணித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது, 5 வருடங்களாகியும் இன்னும் முழுமையாக கொரோனா அழிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளிலும், இந்தியாவிலும் தொற்றுநோய் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது, மீண்டும் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. டெல்லி, மகாராஷ்டிரா உட்பட இந்தியாவின் பல மாநிலங்கள் புதிய COVID-19 வழக்குகளைப் சந்தித்து வருகின்றன.
ரியோ டாட்சுகியின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்
மீண்டும் கொரோனா பரவி வரும் சூழலில், வரும் ஆண்டுகளில் ஒரு கொடிய வைரஸ் வரும் என்ற ரியோ டாட்சுகியின் கணிப்பு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் மில்லியன் கணக்கானவர்கள் ஏற்கனவே COVID-19 நோயால் இறந்துள்ளனர். டாட்சுகியின் பல கடந்த கால கணிப்புகள் ஏற்கனவே உண்மையாக பலித்துள்ளது. உதாரணமாக, ஃப்ரெடி மெர்குரி நிமோனியாவால் இறப்பது, இளவரசி டயானா கார் விபத்தில் இறப்பது, 2011 கோப் பூகம்பம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய், இவை அனைத்தும் டாட்சுகி ஏற்கனவே கணித்தது. எனவே அவருடைய சமீபத்திய கணிப்புகள் உலகம் முழுக்க அதிர்ச்சியையும், பயத்தையும் அதிகரித்துள்ளன.
ரியோ டாட்சுகியின் புத்தகம்
ரியோ டாட்சுகி "The Future As I See It" (1999) என்ற தனது புத்தகத்தில், இன்னும் தீர்மானிக்கப்படாத ஒரு வைரஸ் ஏப்ரல் 2020 இல் உச்சத்தை எட்டும் என்றும், பின்னர் குறைந்து, ஒரு தசாப்தத்திற்குப் பிறகு மீண்டும் தோன்றும் என்றும் கணித்துள்ளார். இப்போது 2030 இல் மற்றொரு குறிப்பிடத்தக்க வைரஸைக் கணித்துள்ளார், அது பல உயிர்களைப் பறிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது கணிப்புகளின் துல்லியம் காரணமாக "ஜப்பானின் பாபா வாங்கா" என்று அழைக்கப்படுகிறார் . இந்த வைரஸ் பற்றிய கணிப்பு மட்டுமின்றி, ஜூலை 2025 இல் ஜப்பானை ஒரு பெரிய பூகம்பம் தாக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். இந்த கணிப்புகள் உலகம் முழுவதும் பலரின் தூக்கத்தைக் கலைத்துள்ளது.



Click it and Unblock the Notifications












