Latest Updates
-
தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
முட்டையை வைச்சு இந்த மாதிரி மசாலா கீமா பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம் -
காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
இந்த நாட்டு கைதிகளுக்கு ஜெயிலுக்குள் செக்ஸ் வைச்சுக்க தனி ரூம் கொடுக்கப்படுதாம்... எந்த நாடு தெரியுமா?
உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்கு சிறைச்சாலைகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டின் சிறைச்சாலைகளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சித்திரவதைக் கூடங்களாக சில நாட்டின் சிறைச்சாலைகள் இருக்கும் போது சில நாட்டின் சிறைச்சாலைகள் பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் போல இருக்கிறது.
சில நாடுகளில் சிறைச்சாலைகள் மிகவும் வசதியானவையாக இருந்தாலும் அவை சிறைக்கைதிகளை வெளியாட்களுடன் பேசுவதற்கும், பார்ப்பதற்கும் மட்டுமே அனுமதிக்கும். தண்டனைக் காலங்களில் சிறைக்கைதிகள் உடலுறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தற்போது அந்த வசதியும் ஒரு நாட்டின் சிறைக்கைதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் நீதிமன்றங்கள் சிறைக்கைதிகளுக்கு இந்த வசதியை அளிக்க முன்வந்துள்ளனர். ஐரோப்பிய நாட்டின் முதல் "பாலியல் அறை" இந்த வார தொடக்கத்தில் திறக்கப்பட்டது, அப்போது மத்திய உம்பிரியா பகுதியில் ஒரு ஆண் கைதி தனது பெண் துணையுடன் உறவு கொள்ள அனுமதிக்கப்பட்டார்.
இத்தாலியில் உள்ள சில கைதிகள், தங்கள் துணையுடன் "நெருக்கமான சந்திப்புகளை" நடத்த கைதிகளின் உரிமையை அங்கீகரித்த அரசியலமைப்பு நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, இந்த வசதியைப் பெறுவதற்கு தகுதியுள்ள கைதிகள் அவைகளின் துணையுடன் 'தனிப்பட்ட சந்திப்புகளை' நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
"எல்லாம் சுமூகமாக நடந்ததால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் சம்பந்தப்பட்ட மக்களைப் பாதுகாக்க அதிகபட்ச பிரைவசியைப் பராமரிப்பது அவசியம்," என்று உம்ப்ரியாவின் கைதிகளின் உரிமைகளுக்கான குறைதீர்ப்பாளரான கியூசெப் கஃபோரியோ தனது பேட்டியில் கூறினார். மேலும் "இந்த பரிசோதனை முயற்சி நன்றாக நடந்தது என்றும், அடுத்த சில நாட்களில் தகுதியுள்ள மற்ற கைதிகளுக்கும் இந்த வசதி வழங்கப்படும்," என்று அவர் கூறினார்.
நீதிமன்ற தீர்ப்பு
கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பில், சிறைக் காவலர்கள் யாரும் அவர்களைக் கண்காணிக்காமல், கைதிகள் தங்கள் வாழ்க்கைத் துணையுடனோ அல்லது நீகாதலியுடனோ தனிப்பட்ட சந்திப்புகளை நடத்த உரிமை இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், சுவீடன், நெதர்லாந்து மற்றும் பிற நாடுகள் உட்பட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற வசதிகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருப்பதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் என்னென்ன?
கடந்த வாரம், இத்தாலிய நீதி அமைச்சகம் இதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த ஷாம்பெயின் மற்றும் ரோஜா இதழ்கள் நிறைந்த ஹோட்டல் அறையைப் போல ரொமாண்டிக்காக இருக்காது, ஆனால் அதில் ஒரு படுக்கை மற்றும் கழிப்பறை இருக்கும் மற்றும் கைதிகள் அங்கு கைவிலங்குகள் இல்லாமல் இருக்க அனுமதிக்கப்படுவார்கள், மேலும் கைதிகள் அவர்களின் துணையுடன் அறைக்குள் இரண்டு மணி நேரம் வரை அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியது.
தேவைப்பட்டால் சிறைக் காவலர்கள் தலையிடும் வகையில் அறையின் கதவு மூடப்படாமல் இருக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. திருமணமானவர்கள் அல்லது நீண்ட கால உறவுகளில் உள்ள கைதிகள் மட்டுமே இந்த அறையைப் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது, மேலும் அவர்கள் முன்கூட்டியே தகுதியுடையவர்களாகக் கருதப்பட வேண்டும். இந்த வசதியைப் பெற அவர்கள் என்னென்ன அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இத்தாலியில் 62,000 க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் உள்ளனர், ஆனால் அதிகாரப்பூர்வ அதிகபட்ச கொள்ளளவை விட இந்த எண்ணிக்கை 20% அதிகமாக இருப்பதால் சிறைக்கைதிகள் நெரிசலால் அவதிப்படுகிறார்கள். இத்தாலிய சிறைச்சாலைகளில் சமீபத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதும் இந்த முக்கிய தீர்ப்புக்கு காரணமாக உள்ளது.



Click it and Unblock the Notifications
