Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மதம் எது தெரியுமா? கடந்த 10 வருஷத்துல இந்த மதம் ரொம்ப வளர்ந்திருக்காம்...
உலகம் தோன்றிய போது மனிதர்கள் பிராந்தியத்தின் அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டனர். ஆனால் காலப்போக்கில் பல்வேறு மதங்கள் உருவாகி மக்கள் தங்கள் மதத்தை பின்பற்றத் தொடங்கினர். உண்மையில் மதங்கள் மனிதர்களுக்குள் ஒழுக்கத்தையும், ஒற்றுமை உணர்வையும் வளர்க்கவே உருவாக்கப்பட்டன, ஆனால் தற்போது மதங்களின் நோக்கங்கள் திசைமாறி சென்றுவிட்டது. மக்களுக்குள் பிரிவினையை உருவாக்கவும், அதிகாரத்தைக் கைப்பற்ற உதவும் ஆயுதமாகவும் மதங்கள் மாறிவிட்டது.
மதம் மாறுவது என்பது ஒரு மனிதருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அதன் அடிப்படையில் மக்கள் தங்களுக்கு பிடித்த மதங்களுக்கு மாறி பின்பற்ற தொடங்குகின்றனர். இதனால் சில மதங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வின்படி, கடந்த பத்தாண்டுகளில் உலகின் மற்ற அனைத்து மதங்களையும் விட இஸ்லாம் மதத்திற்கு அதிக மக்கள் மதம் மாறியுள்ளனர்.

உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதம்
இதனால் கிறிஸ்துவத்தை பின்னுக்குத் தள்ளி இஸ்லாம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதமாக மாறியுள்ளது. 2010 மற்றும் 2020 க்கு இடையில் உலகளாவிய முஸ்லிம் மக்கள் தொகை 347 மில்லியனாக அதிகரித்துள்ளது, இது உலகளவில் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
ஜூன் 9 அன்று வெளியிடப்பட்ட பியூ அறிக்கை, மத மாற்றத்திற்குப் பதிலாக மக்கள்தொகை வளர்ச்சியே மாற்றத்தின் இதற்கான உந்துசக்தியாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. கிறிஸ்தவம்தான் இப்போதும் உலகின் மிகப்பெரிய மதமாக உள்ளது, ஆனால் இஸ்லாம் மற்றும் பிற மதரீதியாக இணைக்கப்படாத குழுக்களின் தொடர்ச்சியான வளர்ச்சியால், உலக மக்கள்தொகையில் அதன் விகிதம் சற்று குறைந்துள்ளது.
காரணம் என்ன?
ஆய்வின்படி, முஸ்லிம்கள் அதிக மக்கள் தொகை வளர்ச்சி உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர், உதாரணமாக மத்திய கிழக்கு-வட ஆப்பிரிக்கா பகுதியின் மக்கள் தொகையில் 94% க்கும் அதிகமானவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கடந்த தசாப்தத்தில் முஸ்லிம் மக்கள்தொகையில் 16.2% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு பெரும்பாலும் முஸ்லிம் சமூகங்களிடையே காணப்படும் அதிக பிறப்பு விகிதங்கள் காரணமாக உள்ளது.

கிறிஸ்தவம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது
ஆய்வின்படி, இதே 10 ஆண்டுகளில் கிறிஸ்தவம் 122 மில்லியன் பின்தொடர்பவர்களைச் சேர்த்துள்ளது. இருப்பினும், உலக மக்கள்தொகையில் ஒரு பங்காக, இது 1.8% குறைந்துள்ளது, முக்கியமாக ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஓசியானியாவில் எந்த மதத்தையும் பின்பற்றாத நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சிறிய சரிவு இருந்தாலும், கிறிஸ்தவம்தான் இப்போதும் உலகின் அதிகம் பின்பற்றப்படும் மதமாக உள்ளது, 2.3 பில்லியன் பின்பற்றுபவர்களுடன், உலக மக்கள்தொகையில் சுமார் 29% சதவீதத்தினர் இந்த கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர்.
எந்த மதத்தையும் பின்பற்றாதவர்களின் எழுச்சி
இந்த ஆய்வில் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது வேகமாக வளர்ந்து வரும் குழு எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் மற்றும் நாத்திகர்கள். இந்தக் குழு இப்போது உலக மக்கள் தொகையில் 24.2% ஆக அதிகரித்துள்ளது. பல நாடுகளில், குறிப்பாக கிழக்கு ஆசியாவில், இளைய தலைமுறையினர் ஒழுங்கமைக்கப்பட்ட மதத்திலிருந்து விலகுவது அதிகரித்து வருகிறது, இது கிறிஸ்தவம் மற்றும் புத்த மதம் போன்ற மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை குறைய காரணமாக உள்ளது.
புத்த மதம் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளது
கிழக்கு ஆசியாவில், 2010 மற்றும் 2020 க்கு இடையில் புத்த மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் புத்த மக்கள் தொகை 19 மில்லியன் குறைந்துள்ளது, இதனால் வேகமாக குறைந்து வீழ்ச்சியடைந்து வரும் பெரிய மதமாக புத்த மதம் உள்ளது.
இந்து மதத்தின் நிலை
உலக மக்கள் தொகையில் தற்போது 14.9% இந்துக்கள் உள்ளனர், இதனால் இந்து மதம் உலகளவில் நான்காவது பெரிய மதமாக உள்ளது. இந்தியா இந்து மதத்தின் முதன்மை மையமாக உள்ளது. இங்கு 90% அதிக இந்து மக்கள் வாழ்கின்றனர். தெற்காசியாவைத் தாண்டி, குறிப்பாக மத்திய கிழக்கு-வட ஆப்பிரிக்கா பகுதி மற்றும் வட அமெரிக்காவில் (55% அதிகரிப்பு) 2010 மற்றும் 2020 க்கு இடையில் இந்து மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டது.



Click it and Unblock the Notifications