தசரா பற்றி நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யமான விஷயங்கள்!

Dussehra/Vijayadashami 2023: இந்த நவராத்திரி திருவிழாவின் பத்தாவது நாளில் தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. வட நாட்டு மக்கள் இதை கோலாகலமாக கொண்டாடி மகிழ்கின்றனர். இராமன் அசுர மன்னனான ராவணனை வதம் செய்யும் விதத்தில் இந்த தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே மாதிரி துர்கா தேவி மகிஷாசுரனை அழித்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

தசரா பண்டிகை தீமை ஒழிந்து நாடு முழுவதும் வெளிச்சம் பரவுவதை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த தசரா நாளில் வட இந்தியாவில் இரவு முழுவதும் ராம லீலா விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பெரிய அளவிலான ஊர்வலங்கள், குஜராத்தில் கர்பா மற்றும் தென்னிந்தியாவில் கொலு போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.

Interesting Facts About Dussehra/Vijayadashami In Tamil

இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடாகும். அந்த வகையில் தசராவைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யமான உண்மைகளைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

ராவணனை கடவுளாக வழிபடும் ஊர்கள்

தசரா பண்டிகை ராவணனை கொல்லும் விதமாக நடத்தப்பட்டாலும் இன்றளவும் பெரும்பான்மையான இந்தியர்கள் ராவணனை நல்லவன் என்று கருதி வழிபட்டு வருகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் ராவணனை கடவுளாக வழிபடும் மக்கள் இருக்கின்றனர். உதாரணமாக மத்திய பிரதேசத்தில் உள்ள மந்த்சூர் மற்றும் விதிஷாவை எடுத்துக் கொள்ளுங்கள்.

இங்குள்ள மக்கள் ராவணனை கடவுளாக வழிபடுகின்றனர். ராவணனுக்காக இங்கே கோயில்களும் கட்டப்பட்டு உள்ளது. ஏனெனில் ராவணனின் மனைவி மண்டோதரி மந்த்சூரைச் சேர்ந்தவள் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். எனவே மந்த்சூர் மக்கள் ராவணனை மருமகனாக பார்க்கின்றனர். அவர்கள் ராவணனை ஞானியாகவும், அறிவாளியாகவும், சிவபெருமான் மீது கொண்ட பக்தியின் ரூபமாகவும் அவர்கள் பார்க்கின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் உள்ள கோண்ட் பழங்குடியினர், ராவணன் மற்றும் அவரது மகன் மேகநாதா இருவரையும் வணங்குகிறார்கள். அவர்கள் வால்மீகியின் ராமாயணத்தை சுட்டிக்காட்டி அவனை அறிவாளியாகவும் ராஜாவாகவும் புகழ்கிறார்கள்.

அதே மாதிரி இலங்கையிலும் ராவணனுக்கு ஒரு தெய்வீக அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. அவரது ஆட்சியில் தான் இலங்கை அறிவியல், மருத்துவம் போன்ற இணையற்ற முன்னேற்றங்களை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் ராவணன் ஆயுர்வேதம் பற்றி எழுதிய பல புத்தகங்கள் இன்றளவும் உள்ளன.

தசரா என்பது ராவணனை வதம் செய்யும் நிகழ்வு மட்டுமல்ல

தசரா என்பது ராவணனை வீழ்த்தி ராமர் கண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவின் கிழக்கு மற்றும் தென்னிந்திய பகுதிகளில் தசரா வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளத்தில், குறிப்பாக கல்கத்தாவில் மகிஷாசுரன் என்ற அரக்கனை அழித்த துர்கா தேவியை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளும் பயபக்தியுடன் கூடி, மேளங்கள் முழங்க, ஆசிர்வாதம் பெற்று பிரார்த்தனைகள் செய்கின்றனர்.

மைசூருவில், பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களின் கீழ் தசரா கொண்டாடும் பாரம்பரியம் தொடங்கியது. இங்குள்ள சாமுண்டேஸ்வரி தேவி கோயில் மகிஷாசுரனை கொன்ற விதமாக தசரா திருவிழாவை நடத்துகிறது.

இதே மாதிரி தெலுங்கானாவில் கெளரி தேவி மலர்களால் பூஜிக்கப்பட்டு வணங்கப்படுகிறார். பெண்கள் சிறப்பு உணவுகளையும் வழங்கி மகிழ்கின்றனர். தமிழ்நாட்டின் உறக்க நகரமான குலசேகரப்பட்டினத்தில் காளி தேவி போற்றப்படுகிறார்.

பாண்டவர்கள் வன வாசத்தை முடித்தனர்

பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஷமி மரத்தின் கிளைகளில் மறைத்து வைத்தனர். அந்த ஆயுதங்கள் மறைத்து வைத்த மரத்தையும் அவர்கள் வணங்கி வந்தனர். அதனால் தான் தசராவின் போது ஆயுத பூஜை செய்யப்படுகிறது. உண்மையில் வட இந்தியாவில் ஆயுதபூஜையை அஸ்திர பூஜை என்று அழைக்கின்றனர். அதே மாதிரி மாறி வரும் காலத்திற்கு ஏற்ற வகையில் ஆயுத பூஜை வாகனங்களுக்கு செய்யப்படுகிறது.

கெளட்ச குருதட்சணை

தனது கல்வியை முடித்த பிறகு கெளட்ச என்ற மாணவன், தனது ஆசிரியரான ரிஷி வரதந்துக்கு, குருதட்சணை வழங்கி கெளரவிக்க விரும்பினார். ஆனால் அவர் குரு ரிஷி எந்த குருதட்சணையும் விரும்பவில்லை. ஆனால் கெளட்சர் பிடிவாதமாக இருந்தார். இறுதியாக ரிஷி, கௌட்சர் தனக்கு 140 மில்லியன் பொற்காசுகளைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

அவர் கற்பித்த 14 அறிவியல்களில் ஒவ்வொன்றுக்கும் 10 மில்லியன் என்று கூறினார். இதைக் கேட்ட கெளட்சர் அவ்வளவு பணத்திற்கு எங்கே செல்வது என்று யோசித்தார். பிறகு பெருந்தன்மைக்கு பெயர் பெற்ற அயோத்தியின் அரசர் ரகுராஜாவிடம் சென்றார். இருப்பினும் அந்த அரசனிடமும் எதுவும் இல்லை. பிறகு கெளட்சர் இந்திரனை அனுகினார்.

இதன் பிறகு இந்திரன் செல்வத்தின் கடவுளான குபேரனை அழைத்து ரகுராஜாவின் ராஜ்ஜியத்தில் உள்ள 'ஷானு' மற்றும் 'ஆப்தி' மரங்களில் இருந்து பொற்காசு மழை பொழியச் சொன்னார். அந்த மரத்தில் இருந்து பெறப்பட்ட நாணயங்களை அரசன் கெளட்சரிடம் கொடுத்தார். கெளட்சர் அந்த நாணயங்களை ஆசிரியரிடம் கொடுத்தார். ரிஷி ஆசிரியர் தான் கேட்ட பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை திரும்ப கொடுத்து விட்டார்.

மீதமுள்ள நாணயங்களை கெளட்சர் மாணவன் மீண்டம் அரசனிடம் கொடுக்க முற்பட்டான். ஆனால் அந்த அரசன் அதை ஏற்கவில்லை. எனவே அந்த மாணவன் கெளட்சர் எஞ்சிய நாணயங்களை அங்குள்ள முடியாத அயோத்தி மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். இந்த சிறப்பான செயலை அவர் விஜயதசமி நன்னாளில் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 22, 2023, 16:00 [IST]
Desktop Bottom Promotion