Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
தாஜ்மஹாலையே விற்ற இந்திய மிகச்சிறந்த மோசடி மன்னன் யார் தெரியுமா? இவர் செங்கோட்டையயும் விட்டு வைக்கல...!
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான உலக காதலர்களின் சின்னமான தாஜ்மஹால் ஒரு கட்டுமான அதிசயமாகும். பிரம்மாண்டம் மற்றும் பரந்த வரலாற்றைக் கொண்ட இந்த வெள்ளைப்பளிங்கு கட்டிடம் இந்தியாவின் பொக்கிஷமாகும்.
வருடந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் இந்த காதல் சின்னத்தை பார்க்க உலகம் முழுவதிலுமிருந்து இந்தியாவிற்கு வருகைத் தருகிறார்கள். இவ்வளவு சிறப்புகள் கொண்ட தாஜ்மஹாலை விற்பது என்பது கேட்பதற்கே அபத்தமாகவும், முட்டாள்தனமாகவும் தோன்றலாம். ஆனால் இதை முற்றிலும் பொய்யென்று மறுக்க முடியாது.

ஏனெனில், இந்திய வரலாற்றில் மிகவும் பிரபலமான ஒரு நபர் தாஜ்மஹாலை மூன்று முறை விற்க முயன்றுள்ளார். தாஜ்மஹால் மட்டுமின்றி டெல்லி செங்கோட்டை, ராஷ்ட்ரபதி பவன் போன்றவற்றையும் அவர் விற்றுள்ளார். அவர் வேறு யாருமல்ல, இந்தியாவின் மோசடி மன்னர் நட்வர்லால்.
நட்வர்லால் தனது வாழ்நாளில் செய்த இந்த அசாதாரண நடவடிக்கைகளால், உலகின் மிகவும் பிரபலமான மோசடி செய்பவர்களில் ஒருவர் என்ற பட்டத்தை அவர் பெற்றார். மேலும், அவரது செயல்கள் மிகவும் பிரபலமடைந்ததால், அவர் ஈபிள் கோபுரத்தை இரண்டு முறை விற்ற ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய மோசடி கலைஞர் விக்டர் லுஸ்டிக்குடன் ஒப்பிடப்பட்டார்.
யார் இந்த நட்வர்லால்?
மிதிலேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா என்று அழைக்கப்படும் நட்வர்லால், 1912 இல் பிறந்து ஜூலை 25, 2009 அன்று இறந்தார். இந்தியாவின் மிகப் பெரிய மோசடி செய்பவர்களில் ஒருவராக அறியப்பட்ட நட்வர்லால், சில உயர்ந்த லட்சியங்கள், குற்றங்கள் மற்றும் சிறையிலிருந்து தப்பித்தல் போன்றவற்றை செய்தார், அவை அவரை வாழ்நாள் முழுவதும் காவல்துறையினரின் இலக்காக மாற்றியது. இந்தியாவின் மோசடி மன்னர்
பற்றியும், அவர் செய்த நம்ப முடியாத குற்றங்கள் பற்றியும் மேற்கொண்டு பார்க்கலாம்.
வழக்கறிஞர்
நட்வர்லால் தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞர். ஆனால், காசோலைகள் மற்றும் பணத்தை போலியாக உருவாக்குவதில் தான் மிகவும் திறமையானவர் என்பதை அவர் உணர்ந்தபோது, அவர் மோசடி செய்பவராக மாறினார். அவர் கையொப்பங்களை அசல் மாதிரியே நகலெடுக்க முடியும், அதுவே அவரை சிறந்த திருடனாக மாற்றியது.
கையெழுத்து மோசடி
திருபாய் அம்பானி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் பல பிரபலங்களின் கையொப்பங்களை அவர் போலியாக உருவாக்கினார். முதலில் அவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் சகாய் என்பவரின் கையொப்பத்தை போலியாக உருவாக்கினார், அவர் அடிக்கடி தனது வங்கி வரைவோலைகளை டெபாசிட் செய்ய அவரை அனுப்புவார். மோசடி பற்றி அவரது பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிய வருவதற்குள், நட்வர்லால் 1000 ரூபாயுடன் கல்கத்தாவுக்கு சென்றுவிட்டார்.
தாஜ்மஹால் விற்பனை
நட்வர்லால் தாஜ்மஹாலை மூன்று முறை விற்றதாகக் கூறப்படுகிறது. அவர் அரசாங்க அதிகாரியாக நடித்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி வரலாற்று நினைவுச்சின்னங்களை 'விற்று' வந்தார். அவர் செங்கோட்டை மற்றும் ராஷ்டிரபதி பவனை கூட பலமுறை விற்றார்.
சிறைத்தண்டனை
அவர் 20 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்தார், ஆனால் அவர் சிறையிலிருந்து தப்பிப்பதில் வல்லவராக இருந்ததால் அவருக்கு 113 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சிறையிலிருந்து தப்பிக்க அவர் பல தந்திரங்களை பயன்படுத்தினார், பெரும்பாலான நேரங்களில் மிகவும் வெற்றிகரமாக சிறையிலிருந்து தப்பினார்.
மரணம்
நட்வர்லாலை 1996-ல் அடக்கம் செய்ததாக அவரது சகோதரர் கூறினாலும், அவரது வழக்கறிஞர் அவர் 2009 வரை உயிருடன் இருந்ததாகக் கூறினார். அவர் தனது மரணத்தின் கூட அனைவரையும் முட்டாளாக்கினார்.



Click it and Unblock the Notifications












