Latest Updates
-
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது! -
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க.. -
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க -
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
எந்த காய்கறியும் தேவைப்படாத இந்த பாயாவை ஒருதடவை செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்ட்டகாசமா இருக்கும் -
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
இந்தியர்கள் 1.50 லட்சம் கோடியை இந்த 'ஒரு' விஷயத்துக்காக செலவழிக்கிறார்களாம்... எந்த விஷயத்துக்கு தெரியுமா?
இந்தியா உலக நாடுகளின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது, கிட்டதட்ட 140 கோடி மக்கள் வாழும் நம் நாட்டின் வாங்கும் திறன் என்பது மிகவும் அபரிமிதமானது. அதனால்தான் உலகின் அனைத்து நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன.இந்தியர்கள் பல விஷயங்களுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கின்றனர். அதில் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக சமீபத்தில் கணக்கில்லாமல் செலவழிக்கின்றனர். சொல்லப்போனால் கிட்டதட்ட 1.50 லட்சம் கோடியை செலவழிக்கின்றனர்.
1.50 லட்சம் கோடி என்பது அவ்வளவு சிறிய தொகை அல்ல. கடந்த 15 ஆண்டுகளில் இந்த விஷயத்திற்காக செய்யும் செலவு திடீரென 1000 மடங்கு அதிகரித்துள்ளது. அது என்ன விஷயம், எதற்காக இந்தியர்கள் இப்படி செலவழிக்கிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியர்கள் எதற்காக செலவழிக்கிறார்கள்?
ஊடக அறிக்கைகளின் படி, 2009-10 ஆம் ஆண்டில், இந்தியர்கள் கல்வி மற்றும் வெளிநாடுகளில் படிப்பதற்காக அதிக தொகையை செலவு செய்தனர். இருப்பினும், இப்போது இந்தியர்கள் பயணத்திற்காக அதிக பணத்தை செலவிடுகிறார்கள். 2025-25 ஆம் ஆண்டில், அவர்கள் பங்குச் சந்தை முதல் ரியல் எஸ்டேட் வரை அனைத்திற்கும் அதிக பணத்தை செலவிடுகிறார்கள், ஆனால் அவர்கள் பயணத்திற்காகத்தான் அனைத்தையும் விட அதிக பணத்தை செலவிடுகிறார்கள். இதன் அர்த்தம் என்னவனில் இந்தியர்கள் இப்போது படிப்பை விட வெளிநாட்டுப் பயணங்களுக்கு அதிக பணம் செலவிடுகிறார்கள்.
இந்தியர்கள் எங்கெல்லாம் பயணிக்கிறார்கள்?
இந்தியர்கள் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு பயணம் செய்கின்றனர். குறிப்பாக துருக்கி, பிரான்ஸ், மொரீஷியஸ், அமெரிக்கா, பிரேசில், சீனா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகளுக்கு அதிகம் பயணம் செய்கின்றனர். 2009 ஆம் ஆண்டில், 1.1 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தனர். கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பு இந்த எண்ணிக்கை 2.6 கோடியாக அதிகரித்தது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, இந்த எண்ணிக்கைன் கடுமையான வீழ்ச்சி அடைந்தது. ஆனால், கொரோனாவுக்குப் பிறகு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டது. 2022 ஆம் ஆண்டில், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை மீண்டும் 2 கோடியைத் தாண்டியது.
இந்தியர்கள் பயணங்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள்?
2009-10 ஆம் ஆண்டில் இந்தியர்கள் பயணத்திற்காக $17 மில்லியன் செலவிட்டனர். 2024-25 ஆம் ஆண்டில், இந்த செலவு $17 பில்லியன் அல்லது சுமார் ரூ.1.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது, சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 58.2 சதவீதமாகும். கடந்த 15 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி சுமார் 975 மடங்கு அதிகமாகும்.
வெளிநாட்டில் படிக்க எவ்வளவு செலவு செய்கிறார்கள்?
இந்தியர்கள் சிறந்த கல்வியை பெறுவதற்கு வெளிநாடுகளை நோக்கி செல்கிறார்கள். எனவே உயர்கல்வி மற்றும் அதிக ஊதியம் தரும் வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அதை அடைவதற்காக, இந்தியர்கள் நிறைய செலவு செய்கிறார்கள். 2024-25 ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் படிப்புகளுக்கு செலவிடுவதில் 21 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, கடந்த ஆண்டு இந்தியர்கள் 9.6 பில்லியன் டாலர்கள் வரை செலவிட்டுள்ளார்கள். 2009-10 ஆம் ஆண்டில், இந்த செலவு 549 மில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செலவு 2024-25 ஆம் ஆண்டில் 30 பில்லியன் டாலர்களைத் தாண்டும். இதில் மருத்துவச் செலவுகள் மற்றும் வங்கி வைப்புத்தொகைகளும் அடங்கும். 2009-10 ஆம் ஆண்டில், இந்த செலவு 983 மில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் இது 30 மடங்கு வளர்ச்சியாகும்.



Click it and Unblock the Notifications

