Latest Updates
-
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட்-ல் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
இந்தியாவின் காஸ்ட்லி எருமை இதுதான்... இதோட விலை மொத்த இந்தியாவையும் ஆச்சரியப்படுத்தும்... எவ்வளவு தெரியுமா?
நாம் பொதுவாக ஒருவரை செல்லமாகவோ அல்லது சிலசமயங்களில் கோபமாகவோ திட்டுவதற்கு எருமை என்று சொல்வோம். பசுமாட்டுடன் ஒப்பிடும்போது எருமைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் குறைவாகும். அதனால்தான் அலட்சியமாக திட்டுவதற்கு எருமை என்று கூறுகிறோம். ஆனால் இந்த எருமையைப் பற்றி தெறிந்தால் இனிமேல் அந்த வார்த்தையை சொல்லி நாம் திட்டமாட்டோம்.
இந்தியாவின் இந்த விலை உயர்ந்த எருமையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகின் பல விலையுயர்ந்த கார்களை விட அதிக மதிப்புள்ள ஹரியானாவின் சிர்சாவைச் சேர்ந்த அன்மோல் என்ற எருமைதான் அது. தி டெய்லி கார்டியன் அறிக்கையின்படி, அன்மோலின் மதிப்பு 23 கோடி ரூபாயாகும்.

இந்த விலைக்கு நாம் மிகப்பெரிய சில பங்களாக்களையே வாங்கி விட முடியும். இந்த அதிசய எருமைமாட்டின் அசாதாரண விலை மற்றும் தனித்துவமான குணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள, இந்தியாவின் பெரும்பாலான இடங்களிலிருந்தும் மக்கள் மீரட்டில் உள்ள அகில இந்திய விவசாயிகள் கண்காட்சிக்கு வருகிறார்கள்.
உணவுமுறை
ஒரு எருமைமாடு இவ்வளவு மதிப்புள்ளது என்றால் அதன் பராமரிப்பு செலவும் நிச்சயம் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகத்தான் இருக்கும். அன்மோலின் பராமரிப்பு செலவு என்பதையும் தாண்டி அதன் உணவுமுறையே கேட்பவர்களை ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது. அதன் விலைகேற்ப அதற்கு காஸ்ட்லியான உணவு கொடுக்கப்படுகிறது. அன்மோலுக்கு தினமும் 5 கிலோ பால், 4 கிலோ மாதுளை, 30 வாழைப்பழங்கள், 20 புரோட்டின் நிறைந்த முட்டைகள் மற்றும் கால் கிலோ பாதாம் ஆகியவை உணவாகக் கொடுக்கப்படுகிறது. கூடுதலாக இந்த காஸ்ட்லி எருமை தினமும் இரண்டு முறை குளிக்க வைக்கப்பட்டு, கடுகு மற்றும் பாதாம் எண்ணெயால் மசாஜ் செய்யப்படுகிறது.
அன்மோலின் வருமானம்
அன்மோலின் பிரமாண்டமான உடலமைப்பு கண்காட்சியில் ஒரு காட்சிப்பொருளாக மட்டுமின்றி, அது குறிப்பிட்ட அளவு வருமானத்தையும் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் விந்தணு ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது, இது அன்மோலின் மதிப்பை கணிசமாகக் கூட்டுகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஜகத் சிங் என்பவருக்குச் சொந்தமான, அன்மோலின் விந்துகள் கவனமாக சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன, இது ஒரு விலைமதிப்பற்ற முர்ரா வகை எருமை என்பதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஜகத் சிங் அன்மோலின் உணவிற்காக மட்டும் மாதந்தோறும் ரூ.60,000 முதலீடு செய்கிறார், அதே சமயம் விந்து விற்பனை மூலம் மாத வருமானம் ரூ.4-5 லட்சம் வருமானம் ஈட்டுகிறார்.
அன்மோலின் உரிமையாளர் ஜகத் சிங், இந்த எருமைக்கு 8 வயது இருக்கும் என்று லோக்கல் தெரிவித்துள்ளார். மேலும் பழங்கள், முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றைக் கொண்ட அதன் உணவிற்காக தினமும் சுமார் 1,500 ரூபாய் செலவிடப்படுவதாகக் கூறியுள்ளார். அறிக்கையின்படி, ஜகத் சிங் அன்மோலை ஒரு சகோதரனாகக் கருதுகிறார், மேலும் எனது சகோதரனை ஒருபோதும் என்னால் விற்க முடியாது என்று அவர் கூறுகிறார். அன்மோல் அவரது குடும்பத்தின் ஒரு அங்கமாக உள்ளது, எனவே அவர் தன்னால் ஒருபோதும் அன்மோலை விற்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார். மாறாக, அவர் எருமையின் இனத்தை மேம்படுத்த உதவும் அன்மோலின் விந்துவை மட்டுமே விற்கிறார்.
அதேபோல 2021-ல் ஜோத்பூர் நகரில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்த ஒரு எருமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த ஆண்டு, 1500 கிலோ எடையுள்ள "பீம்" என்ற எருமை கண்காட்சியில் தோன்றியது. அனைவரும் ஆச்சரியப்படக் காரணம் பீமின் தோற்றம் மட்டுமல்ல, அதன் விலையும்தான். அந்த எருமை மாட்டின் மதிப்பு ரூ.24 கோடி.
பீம்
அதன் உரிமையாளரின் கூற்றுப்படி, ஜோத்பூருக்கு வந்த ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அரவிந்த் ஷேக் ஜாங்கிட் என்ற நபர், அந்த மாட்டிற்கு ரூ.24 கோடி வழங்க முயன்றார், ஆனால் அவர் அதனை நிராகரித்தார். அவர் தனது எருமை மாட்டை ஏலத்திற்கு கொண்டு வரவில்லை, மாறாக முர்ரா எருமை இனத்தின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே அதை கொண்டு வந்ததாக அவர் விளக்கினார்.
பீம் 14-அடி நீளம், 6-அடி உயரமுத்துடன் பிரமாண்ட உடலமைப்புடன் இருந்தது. மாதந்தோறும் ரூ.2 லட்சம் செலவில் பராமரிக்கப்படுகிறது. இந்த எருமை ஒரு நாளைக்கு ஒரு கிலோ நெய் மற்றும் 25 லிட்டர் பால் உட்கொள்கிறது, மேலும் தினமும் ஒரு கிலோ முந்திரி மற்றும் பாதாமை உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.



Click it and Unblock the Notifications