Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மஹாளய பக்ஷத்தில் இதையெல்லாம் செய்தால்.. பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடலாம்..! எப்படி தெரியுமா?
நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், பலன் கிடைக்காமலேயே இருக்கும். அதற்கு காரணம் குடும்பத்தில் உள்ளவர்கள் முன்னோர்களின் ஆசிகளைப் பெறாமல் இருப்பதே ஆகும்.. அப்போ உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் பித்ரு தோஷம் இருக்கிறது என்று அர்த்தமாகும்.. இந்த விஷயத்தில் பித்ரு தோஷங்களைத் தடுக்க சில பரிகாரங்களை பின்பற்ற வேண்டும். இப்போது அது என்னென்ன? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
மஹாளய பக்ஷமும் பித்ரு பக்ஷமும் இந்து மதத்தில் மிக முக்கியமானவை. இந்த நேரத்தில் விரதம் இருந்து தர்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். மேலும் தந்தையின் தோஷம் இருந்தால் வீட்டில் பலவிதமான அறிகுறிகள் தென்படும். தொந்தரவில்லாத வாழ்க்கையை வாழ, இந்த அறிகுறிகளை துல்லியமாக உணர்ந்து அவற்றை சரியான நேரத்தில் நிவர்த்தி செய்வது அவசியம்.

மஹாளய பக்ஷம் என்றால் என்ன?
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முன்னதாக உள்ள 14 நாட்களே மகாளயபட்சத்தில் அடங்கும். மகா+ஆலயம் என்பதே மகாளயம் என்றானது ஆன்மாக்கள் லயிக்கும் இடம் என்பதே ஆலயம். அதாவது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்சம் எனப்படும். அந்த வகையில் மகாளய பட்சம் இந்த ஆண்டு செப்டம்பர் 17 ம் தேதி துவங்கியது.. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 17 வரையிலான காலம் மகாளய பட்ச காலம் என்று அழைக்கப்படுகிறது. மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இது அக்டோபர் 02ம் தேதி வருகிறது. இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு உரிய காலம்.. இந்த நேரத்தில் முன்னோர்களுக்கு விரதம் இருப்பது நல்லது..
பித்ரு தோஷம் இருப்பதர்கான அறிகுறிகள்
நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுதல், எதிலும் வெற்றி கிடைக்காமல் போவது, வீட்டில் பல சச்சரவுகள் ஏற்படுவது ஆகிவை இறந்த உங்கள் முன்னோர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதனால் மஹாளய பக்ஷத்தின் போது பித்ருக்கள் பூமிக்கு வரும்போது அவர்களை வணங்குதல் பித்ரு சாபம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது..
முன்னோர்களை சந்தோஷப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
மஹாளய பக்ஷத்தின் போது பூமிக்கு வரும் நம் முன்னோர்கள் அரச மரத்தில் வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. எனவேதான் இந்த நேரத்தில் அரச மரத்திற்கு தண்ணீர் வைத்து வழிபடுவது நல்லது என்கின்றனர் அறிஞர்கள். மேலும் அரச மரத்தைச் சுற்றி ஏழு முறை வலம் வருவதும் மிகுந்த பலன் தரும் என்கின்றனர் அறிஞர்கள். மரத்திற்கு எள் நீர் தெளித்து கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் இறந்த முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது நம்பிக்கை.
இதனுடன் வீட்டில் தீபம் ஏற்றுவதும் மிகுந்த பலன் தரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்... தட்சிணை என்பது முன்னோர்களின் திசை என்று சொல்வார்கள்.. அதனால்தான் அந்த இடத்தில் தீபம் ஏற்றினால் அதிர்ஷ்டம் உண்டாகும். பித்ரு பக்ஷத்தில் தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். உங்கள் முன்னோர்கள் மற்றும் தல விருட்சங்களை நினைத்து தினமும் காலையில் சூரிய பகவானுக்கு நீராடினால் போதும்.
பெற்றோர்கள் உயிருடன் இல்லாமலோ அல்லது இருவருமே இல்லாமலோ இருந்தால் தினமும் தந்தை வழி தெற்கு திசையில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த தர்ப்பணம் எப்பொழுதும் பாலும் எள்ளும் தண்ணீரில் கலந்து செய்ய வேண்டும். பித்ரு பக்ஷத்தின் போது பசுவிற்கு தினமும் புல் கொடுக்க வேண்டும். மாடுகளுக்கும் பழம் கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம். பித்ரு பக்ஷ காலத்தில் பசுவிற்கு உணவளிப்பதன் மூலம், ஷ்ராத்த கர்மாவின் பலன் முழுமையாக அடையப்படுகிறது. முன்னோர்களின் ஆன்மா மகிழ்ச்சியாக இருப்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.. இதனால் பித்ரு தோஷம் நீங்கி உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் நல்லதே நடக்கும்.. எதிலும் வெற்றி கிடைக்கும், குலம் விருத்தி அடையும்..



Click it and Unblock the Notifications