Latest Updates
-
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது!
பாவத்தை போக்கும் சர்வ ஏகாதசி இன்று 2024... விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
Sarva Ekadasi: வைகுண்ட ஏகாதசியை போலவே ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் ரொம்பவே விசேஷம். ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம். ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.
இதேபோல், ஏகாதசி நாளில் இருந்து எவருக்கேனும் உணவு வழங்குவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரக்கூடியது. வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பெருமாளைப் பிரார்த்தித்து, நைவேத்தியத்தை அருகில் உள்ளவர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வழங்குவது வளம் சேர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சர்வ ஏகாதசி விரதம் ஏன் இருக்கின்றார்கள்?
ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்படுகிறது.
சர்வ ஏகாதசி விரதத்தை எவ்வாறு கடைபிடிப்பது...?
ஏகாதசிக்கு முதல் நாளே வீடெல்லாம் சுத்தம் செய்து விட வேண்டும். அடுத்த நாள் காலை எழுந்ததும் குளித்து விட்டு தசமி அன்று, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். மறுநாள் ஏகாதசி அன்று முழுவதும் விரதம் இருக்க வேண்டும். முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், பால்,பழம், துளசி, துளசி தண்ணீர், இவற்றை பெருமாளுக்கு படைத்து விட்டு அதை உண்ணலாம்.
மறுநாள் காலை துவாதசியன்று சூரிய உதயத்திற்கு முன் அனைத்து காய்கறிகளையும் வைத்து சமைக்க வேண்டும். இதில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்ட வத்தல், முக்கியமாக இடம் பெற வேண்டும். இவற்றையெல்லாம் இறைவனுக்கு படைத்து விட்டு நாமும் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். இதை சூரிய உதயத்திற்கு முன் செய்து முடிக்க வேண்டும். இதுவே ஏகாதசிக்கு உரிய விரதம் முறைகளாகும்.
பலன்கள்
இந்த விரதத்தை அனுஷ்டித்தால், நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் எனது ஐதீகம். இந்நாட்களில் விரதம் இருப்பவர்கள், பாவச் சுமை குறைந்து, பிறவா நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் ஆற்றல் பெற்றது. நீர் கூட அருந்தாமல் பலர் இவ்விரதநாளைக் கழிப்பர். இதை"நீர்ஜல விரதம்" எனப் போற்றுவர். சிலர் பழங்களை சாப்பிடுவர். மறுநாள் துவா திசியில் விரதம் முடியும்.
துளசி கண்டிப்பாக இடம் பெற வேண்டிய இந்த பூஜை விரதத்தில், விஷ்ணு, மகாலட்சுமி படங்களை மாலையிட்டு, சுத்த பக்தியுடன் விளக்கேற்றி, வழிபட்டு விரதம் இருப்பார்கள்."ஓம் பகவதே. வாசு தேவாய" எனும் மந்திர பாராயணத்தை சொல்லிவரலாம். இன்று முக்கியமாக அன்னதானம் செய்திடவும், சிறந்தது சர்வ ஏகாதசி. இது ஜென்ம பாவங்களைப் போக்கும் ஒருநாள் என்பர்.
நமது வாழ்வில் துன்பங்கள் அதிக கஷ்டத்தை கொடுக்காமல், இருக்கவும், குல சாபங்கள், தெய்வ சாபங்கள், இருந்தால் நீங்கி நல்வாழ்வு பெறவும், சுபிட்சங்கள் பல பெறுவதற்கும், பாப நிவர்த்தியாக பகவான் நாமம் இன்று உச்சரிக்கப்பட அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி "நாராயணீயம்" விவரிப்பதாக கூறுவர். சர்வ ஏகாதசியில் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்தல், துளசி தீர்த்தம் பருகுதல் இவற்றால் தனித்துவமான பல நலன்கள் உண்டு.



Click it and Unblock the Notifications