Latest Updates
-
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க பணமழையில் நனையப் போறாங்களாம் -
ஜூலை 16-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. -
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
வழுக்கை தலையில் முடி வளரணுமா? அப்ப கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
மிதுன ராசிக்கு வக்ர நிலையில் சென்ற புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
திருப்பதி ஏழுமலையானை பக்கத்தில் சென்று பார்க்கணுமா? இதை மட்டும் செய்தால் போதும்..!
இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பணக்கார கடவுள் என்று சொன்னால் அது திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். ஆண்டு முழுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணத்தை காணிக்கையாக உண்டியலில் பக்தர்கள் போட்டு செல்கின்றனர்.
திருப்பதிக்கு சென்று வந்தால், திருப்பம் ஏற்படும், கேட்டதை கொடுக்கும் கலியுக தெய்வம் ஏழுமலையான் என்ற நம்பிக்கையால்தான் இத்தனை மக்கள் அங்கு குவிகின்றனர். இந்த கோவிலில் தரிசனம் செய்ய எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று கூட்டம் வருவதால் அதற்கு முன்பதிவு தரிசன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

திருப்பதிக்கு பொது தரிசனம் செய்ய வருபவர்கள், முன்பதிவு செய்து அதில் காத்திருந்து பார்ப்பவர்கள் என்று மக்கள் கூட்டம் ஆண்டு முழுவதும் நிரம்பி வழிகிறது. ஆனால் எத்தனை மணிநேரம் காத்திருந்து உள்ளே போனாலும் தூரத்தில் இருந்து சில நொடிகள்தான் பார்க்க முடிகிறது என்ற வருத்தம் பக்தர்களிடம் கண்டிப்பாக இருக்கும். முன்பதிவு செய்து போனாலும் அதே 10 வினாடிகள்தான் பார்ப்பதற்கு அனுமதி.
இப்படி நேரத்தை செலவிட்டாலும் குறைந்த அளவு நேரம் தான்.. பணம் செலவிட்டு போனாலும் சில வினாடிகள் தானே பார்க்க முடிகிறது. எப்போதுதான் பொறுமையாக இறைவனை பார்ப்பது? அதற்கு வழிகளே கிடையாதா? என்றால் இருக்கு. அதை பற்றிதான் சொல்ல இருக்கிறோம். அதற்கு உங்களுக்குத் தேவையானது எல்லாம் அதிஷ்டம் தான். எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்...
இப்படி நேரத்தை செலவிட்டாலும் குறைந்த அளவு நேரம்தான்.. பணம் செலவிட்டு போனாலும் சில வினாடிகள் தானே பார்க்க முடிகிறது. எப்போதுதான் பொறுமையாக இறைவனை பார்ப்பது? அதற்கு வழிகளே கிடையாதா? என்றால் இருக்கு. அதை பற்றிதான் சொல்ல இருக்கிறோம். அதற்கு உங்களுக்குத் தேவையானது எல்லாம் அதிஷ்டம் தான். எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்...
உண்டியல் நிறைந்ததும் உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைப்பார்கள். ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்யும் திருப்பதியில், ஒரே நாளிலே உண்டியல் நிறைவது என்பது சாதாரணம். அப்படி நிரம்பியதும் உடனடியாக வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு நடக்கும்.
அப்படி ஏழுமலையான் தரிசனத்தை முடித்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சரியாக உங்கள் முறை வரும்போது நீங்கள் பணம் செலுத்தியவுடன் அல்லது செலுத்துவதற்குக் காத்திருக்கிற நேரத்தில் அந்த உண்டியல் நிரம்பிவிட்டது என்பதை தேவஸ்தான ஊழியர்கள் அறிந்து கொண்டால் அதற்கு மேல் போட அனுமதிக்க மாட்டார்கள்.
உண்டியலில் சீல் வைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேளையில் அந்த உண்டியலுக்கு அருகில் நிற்கின்ற இரண்டு பக்தர்களைத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். அப்போது " இந்த உண்டியல் நிரம்பிவிட்டது . இதைக் கச்சிதமாக சீல் செய்து எடுத்துக் கொண்டு போனார்கள். அப்போது நான் உடன் இருந்தேன் " என்று அந்த இரண்டு பக்தரும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டுமாம். தைரியமாக கையெழுத்துப் போடலாம்.
இது சம்பிரதாயத்துக்காக செய்யப்படுகின்ற ஒரு விஷயம் தான். ஆதி காலத்திலிருந்து பின்பற்றப்படும் நடைமுறை என்பதால் அதை தேவஸ்தானம் இன்றும் விடாமல் கடைபிடித்து வருகிறது . இப்படி சாட்சிக் கையெழுத்துப் போட்ட இரண்டு நபர்களுக்கு என்ன பரிசு தெரியுமா? மீண்டும் ஒருமுறை ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்யலாம் அதுவும் வெகு அருகில் அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைப்பார்கள்.
இந்த தரிசனத்தின் போது உங்களை எவரும் அவசரப்படுத்த மாட்டார்கள். நின்று நிதானமாகப் பிரார்த்தனை செய்து வணங்கிவிட்டு வரலாம். ஆனால் இப்படிப்பட்ட அரிய வாய்ப்பு, காவாளம் உண்டியல் நிரம்பும் போது அதன் அருகில் நிற்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதனால்தான் இதற்குத் தேவையானது அதிஷ்டம் என்று சொன்னோம்.



Click it and Unblock the Notifications