Latest Updates
-
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்!
தமிழ் புத்தாண்டுக்கு பூஜை பாத்திரங்கள் பளபளன்னு மின்ன வேண்டுமா..? அப்படினா இதை ட்ரை பண்ணுங்கள்..!
சித்திரை மாதம் முதல் நாளை, புது வருடப்பிறப்பு விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது இந்த சித்திரை மாதத்தில் தான். வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் நமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது ஐதீகம். அதனால் அன்று தமிழர்கள் அனைவரும் வீட்டில் பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
அப்படி பூஜை செய்வதற்கு முன்பு பூஜையறையையும், பூஜை பாத்திரங்களையும் சுத்தம் செய்வதை பெண்கள் வழக்கமாக கொண்டிருப்பார்கள். இவ்வாறு சுத்தம் செய்து வைக்கும் பூஜை பாத்திரங்கள் ஓரிரு நாட்களில் கருத்து விடுகின்றன. அல்லது கருப்பு அடைந்து மங்கலாக தொற்றமளிக்கும். இவற்றை எளிதாக அகற்றி பூஜை பொருட்களை புதியது போல் பளபளவென்று மாற்ற வீட்டில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதும்...அது என்னென்ன பொருட்கள்? அவற்றை எப்படி பயன்படுத்தி சுத்தம் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

1. பூஜை சம்பந்தமான விஷயங்களை செய்யும் பொழுது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். வீட்டை சுத்தம் செய்வது, பூஜை அறையை சுத்தம் செய்வது, பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமையில் செய்வது என்பதை தவிர்த்து விடவும். அதுவும் இதுபோல புருவருட பிறப்பு, அமாவாசை, மாத பிறப்பு வரும் போது வெள்ளி அல்லது செவ்வாய் கிழமையில் வந்தால் அதற்கு முன்பே சுத்தம் செய்தல் நல்லது.
2. அப்படி வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமையில் செய்தால் நமது வீட்டில் உள்ள அதிர்ஷ்ட தேவதை வெளியேறி விடுமாம். எனவே இது போன்ற தினங்களில் பூஜை செய்ய வேண்டிய வேலை இருந்தால் அதற்கு ஒரு முதல் நாளே சுத்தம் செய்யும் வேலைகளை முடித்து வைத்து விடுங்கள்.
3. முதலில் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முன்னர் அவற்றில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகளை ஒரு துணி வைத்து துடைத்துக் கொள்ள வேண்டும்.
4. பின்னர் இவை அனைத்தையும் ஒரு அகன்ற பாத்திரத்தில் வைத்து, அந்த பாத்திரங்கள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி எலுமிச்சைப்பழ அளவு புளியை அதில் கரைத்துவிட வேண்டும்.
5. பிறகு இந்த பாத்திரத்தை அடுப்பை பற்ற வைத்து சூடுபடுத்த வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் அனைத்தும் பிரிந்து வரும்.
6. அதற்குப் பின்னர் அடுப்பை அனைத்து பாத்திரங்களை சுடு தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க வேண்டும்.
7. பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு ஹேண்ட்வாஷ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 2 ஸ்பூன் பல் துலக்கும் பேஸ்ட் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து அதன் சாறை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
8. பிறகு தண்ணீரை சுத்தமாக துடைத்து விட்டு வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் விபூதியை ஒரு துணியில் லேசாக தொட்டு பூஜை பாத்திரங்கள் முழுவதையும் துடைத்து விட்டால் பூஜை பாத்திரங்கள் நல்லா பளபளப்புடன் மின்னும். அதுமட்டுமல்லாமல் அவ்வளவு சீக்கிரமாக கருக்காமல் இருக்கும்.
9. சிலர் வெள்ளியிலான பூஜை பாத்திரங்கள் வைத்திருப்பார்கள். அவை சிறிது காலத்தில் மங்கிவிடும், நிறம் கறுத்துக் காணப்படும். வெள்ளி உலோகத்தில் ஏற்படும் வேதியியல் வினைகளே இதற்குக் காரணம். அவற்றை எப்படி சுத்தம் செய்வது என்றும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
10. ஓர் அகன்ற பாத்திரத்தில் எலுமிச்சை பழத்தை பிழிந்துவிடவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து, அதனுடன் வெந்நீர் சேர்த்துக் கலந்து வைக்கவும். அதில் வெள்ளிப் பொருள்களை ஊறவைத்து 5 நிமிடங்கள் கழித்து எடுத்து, வெள்ளைத் துணி கொண்டு துடைக்கவும். அழுக்குகள் நீங்கும்.
11. ஒரு சிறிய கிண்ணத்தில் சோப் பவுடர் சேர்த்து, அதில் வெந்நீர் ஊற்றி கலந்து வைக்கவும். இதில் வெள்ளிப் பொருள்களை ஊற வைக்கவும். இதை 5 - 7 நிமிடங்களுக்குப் பின் எடுத்து பிரஷ் கொண்டு தேய்த்து, மிருதுவான காட்டன் துணியால் துடைத்தால் பளிச்சென இருக்கும்.
12. வினிகர், தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவை சேர்ந்த கலவை வெள்ளிப் பொருள்களுக்கு மிகச் சிறந்த பராமரிப்பு முறை. ஒரு கிண்ணத்தில், வெதுவெதுப்பான நீரில் 1/2 கப் வெள்ளை வினிகர், 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா எனக் கலக்க வேண்டும். மிகவும் ஒளி மங்கிய வெள்ளிப் பொருள்களை, இரண்டு முதல் மூன்று மணி நேரம் அதில் ஊற வைக்கவும். பின் அவற்றை எடுத்து குளிர்ந்த நீரில் அலசி உலர்த்தவும்.



Click it and Unblock the Notifications